Saturday, March 27, 2010
Friday, March 26, 2010
தங்களின் பின்னூட்டம் தேவை
என்னை 9 ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் 14 நண்பர்களே,
வணக்கம்.
என் வலைப்பூவில் வரும் இடுகைகளைத் தவறாது படித்துப் பின்னூட்டமிட்ட தங்களின் மேலான கருத்து தேவை.
வழக்கிழந்த நூல்களைச் சேமிக்கும் பணியில் இதுவரை BLOGSPOTல் "சிவசிவ" என்னும் வலைப்பூவில் முயன்று வந்தேன். தற்பொழுது காசுகொடுத்துத் தனியாக DOMAIN "சித்தன்" வாங்கியுள்ளேன். இலவசம் எத்தனை நாள் நீடிக்குமோ தெரியாது. ஆகவே இந்த மாற்றம். இனி என் இடுகைகள் "சித்தன்" வலைப்பூவில் தொடர்ந்து வரும். "சிவசிவ" என்னும் வலைப்பூவை மூடிவிடலாமென நினைக்கிறேன். தங்களின் கருத்து என்னவோ?
Rss feed - http://siththan.com/feed
Posted by ஞானவெட்டியான் at 9:10 AM 10 comments
Labels: பின்னூட்டம் தேவை
Friday, March 12, 2010
கந்தர் கலிவெண்பா - 26
26. முகத்தி லணைத்துச்சி மோந்து முலைப்பால்
அகத்துண் மகிழ்பூத் தளித்துச் - சகத்தளந்த
வெள்ளை விடைமேல் விமலன் கரத்திலளித்(து)
உள்ள முவப்ப உயர்ந்தோனே - கிள்ளைமொழி
மங்கைசிலம்பின் மணியொன் பதிற்றோன்றும்
துங்க மடவார் துயர்தீர்ந்து - தங்கள்
விருப்பா லளித்தநவ வீரருக்குள் முன்னோன்
மருப்பாயும் தார் வீரவாகு - நெருப்பிலுதித்து
சகத்தளந்த - உலகம் அளந்த திருமால்
கிள்ளை - கிளி
மங்கை - உமாதேவி
மணியொன்பது - சிலம்பிலுள்ள நவரத்தினங்கள்
துங்கம் - சிறந்த
மடவார் - ஒன்பது துணைச் சத்திகள்(ஒன்பது மணியின் பெயர் பெற்றவர்கள்)
நவவீரர் - ஒன்பது வீரர்கள்(வீரவாகு, வீரகேசரி, வீரமகேந்திரர்,
வீரமகேசுரர், வீரபுரந்தரர், வீரராட்சசர், வீரமார்த்தாண்டர், வீராந்தகர், வீரதீரர்
மரு - மணம்
.......தலையை உச்சிமோந்து முத்தம் கொடுத்து, தனது திருமுலைப்பாலை உள்ளத்தில் உண்டான தாய்ப்பாசத்தோடு கொடுத்து, உலகைத் தன் திருவடியால் அளந்த திருமாலாகிய வெள்ளைக் காளைமீது ஏறிவரும் குற்றமற்ற சிவபிரானின் திருக்கையில் குழந்தையைக் கொடுத்தபோது, அப்பெருமான் மனமகிழ்வதற்குக் காரணமாக இருந்த அண்ணலே!
கிளியின் சொல்போல சொல்லையுடைய உமையம்மையின் திருக்காலில் இட்ட சிலம்பிலுள்ள ஒன்பது இரத்தினங்களிலிருந்து தோன்றிய சிறந்த பெண்கள்பால் அவர்களின் துன்பம் நீங்கி மகிழ உதித்த வீரவாகு, வீரகேசரி, வீரமகேந்திரர், வீரமகேசுரர், வீரபுரந்தரர், வீரராட்சசர், வீரமார்த்தாண்டர், வீராந்தகர், வீரதீரர் ஆகிய ஒன்பது வீரர்களுள் முதலாயுள்ள வீரவாகுத் தேவர் (நாரதர் வளர்த்த வேள்வித்) தீயில் தோன்றி, ...........
Posted by ஞானவெட்டியான் at 10:56 AM 0 comments
Saturday, February 20, 2010
கந்தர் கலிவெண்பா - 25
25.அன்னவளும் கொண்டமைதற் காற்றாள் சரவணத்திற்
சென்னியிற் கொண்டுய்ப்பத் திருவுருவாய் - முன்னர்
அறுமீன் முலையுண் டழுதுவிளை யாடி
நறுநீர் முடிக்கணிந்த நாதன் - குறுமுறுவற்
கன்னியொடுஞ் சென்று (அ)வட்குக் காதலுருக்காட்டுதலும்
அன்னவள்கண் டவ்வுருவ மாறினையுந் - தன்னிரண்டு
கையா லெடுத்தணைத்துக் கந்தனெனப் பேர் புனைந்து
மெய்யாறு மொன்றாக மேவுவித்துச் - செய்ய
அன்னவள் = கங்கை
சரவணத்தில் = சரவணப் பொய்கையில்
சரவணம் = நாணல்
சென்னி = தலை, நாணல் முனை
திருவுருவாய் = திருவடிவு எடுத்து
அறுமீன் = ஆறு நற்சேத்திரப் பெண்களாகிய கார்த்திகைப் பெண்டிர்
நறுநீர் = கங்கை
குறுமுறுவல் = புன்சிரிப்பு
கன்னி = உமையம்மை(உலகையெல்லாம் பெற்றாலும் இறைவி கன்னியே என ஞான நூல்கள் கூறும்)
கந்தன் = ஒன்று சேர்க்கப்பட்டவன்
மெய் = உடல்
மேவுவித்து = பொருத்தப்பட்டு
செய்ய = சிவந்த
கங்கையும் அப்பொறிகளின் சூட்டைப் பொறுக்க இயலாது, நாணல் நிறைந்த சரவணப் பொய்கையில் அவற்றை வைத்தனர். அப்போது அவை ஆறு திரு உருவங்களாக மாறி முதலில் கார்த்திகைப் பெண்டிர் கொடுத்த திருமுலைப் பாலை உண்டு அழுது விளையாடும்போது நறுமணமுடைய கங்கையைச் சடைமுடியில் தரித்த சிவபிரான், புன்சிரிப்புடைய கன்னியாகிய உமையம்மையுடன் சென்று குழந்தையைப் பார்த்து அன்பு செலுத்துதற்குரிய பிள்ளைத் திருவடிவத்தை அம்மைக்குக் காட்டவும், அவள் ஆறு திருவுருவத்தையும் தன் இரு கைகளால் எடுத்துத் தழுவி ஒன்று சேர்த்து ஓர் உருவாக்கி, "கந்தன்" (சேர்க்கப்பட்டவன்) என்னும் திருப்பெயரையும் தந்து அத்திருவுருவைச் செம்மாயான தன் திருமுகத்தோடு சேர்த்து.........
"சேயவன் வடிவம் ஆறுந் திரட்டி யொன்றாகச் செய்தாய் - ஆயதனாலே கந்தனாம்மெனு நாமம் பெற்றான்" - என்கிறது கந்த புராணம்
Posted by ஞானவெட்டியான் at 10:18 AM 0 comments
Labels: கந்தர் கலிவெண்பா
யாரோ சொன்னது - 25-30
25. "சீரிய எண்ணங்களைச் செயல்படுத்தும்பொழுது அவை சிறந்த செயல்களாகின்றன."
26. "உடல் நலமுள்ளவனுக்கு நம்பிக்கை இருக்கும்; நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாம் இருக்கும்."
27. "மன உறுதியைப்போல் உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம்."
28. "உண்பதற்காக வாழாதே! வாழ்வதற்காக உண்."
29. "நட்பு உண்டாக அன்பு மட்டும் போதாது; இலட்சிய ஒற்றுமையும் வேண்டும்."
30. "எழுதுவது அருமை; எழுதியதைப் பழுதறக் கற்றல் அதிலும் அருமை; அதன்படி நடத்தல் அருமையோ அருமை."
Posted by ஞானவெட்டியான் at 9:22 AM 0 comments
Labels: யாரோ சொன்னது
Friday, February 12, 2010
கந்தர் கலிவெண்பா - 24
24.திருமுகங்க ளாறாகிச் செந்தழற்கண் ஆறும்
ஒருமுகமாய்த்தீப் பொறியா றுய்ப்ப - விரிபுவனம்
எங்கும் பரக்க இமையோர்கண் டஞ்சுதலும்
பொங்கு தழற்பிழம்பைப் பொற்கரத்தால் - அங்கண்
எடுத்தமைத்து வாயுவைக்கொண் டேகுதியென் றெம்மான்
கொடுத்தளிப்ப மெல்லக் கொடுபோய் - அடுத்ததொரு
பூதத் தலைவகொடு போதியெனத் தீக்கடவுள்
சீதப் பகீரதிக்கே சென்றுய்ப்பப் - போதொருசற்(று)
செந்தழற்கண் = சிவந்த அக்கினி தேவனிடத்தே
உய்ப்ப = செலுத்த
அடுத்ததொரு பூதம் = வாயுவுக்கு அடுத்த பூதமாம் தீ
அதன் தலைவன் = தீக்கடவுள்
கொடுபோதி = கொண்டு போவாய்
பகீரதி = பகீரதனால் கொண்டுவரப்பட்ட கங்கை
உய்ப்ப = செலுத்த
போது = பொழுது
ஒரு சற்று = சிறிது
சிவந்த அனல் போன்ற ஆறு திருக்கண்களிலிருந்தும் ஒரே வழியாக ஆறு நெருப்புப் பொறிகளை வெளிவிடவே, அந்தப் பொறிகள் விரிந்த உலகமெங்கும் செல்லுவதைப் பார்த்துத் தேவர்கள் அஞ்சியபடியால், தம் அழகிய திருக்கைகளால், அவற்றை எடுத்துச் சேர்த்துக் காற்று தெய்வத்திடம் தந்து,"நீ இவற்றை எடுத்துக்கொண்டு போ" என்றவுடன், வாயு பகவான் அவற்றை எடுத்துக்கொண்டு போய், ஐம்பூதங்களில் தனக்கு அடுத்த பூதத்துக்கு அதிபதியாம் அக்கினியிடம் கொடுக்க, அவன் அவைகளைக் குளிர்ச்சி மிக்க கங்கையிடம் சேர்க்கவும்.............
Posted by ஞானவெட்டியான் at 4:18 PM 0 comments
Labels: கந்தர் கலிவெண்பா, கெளமாரம், பக்தி
Friday, February 05, 2010
கந்தர் கலிவெண்பா - 22
ஈறு முதலும்அகன் றெங்குநிறைந்(து) ஐந்தெழுத்தைக்
கூறி நடாத்தும் குரகதமும் - ஏறுமதம்
தோய்ந்து களித்தோர் துதிக்கையினாற் பஞ்சமலம்
காய்ந்த சிவஞானக் கடாக்களிறும் - வாய்ந்தசிவ
பூரணத்துட் பூரணமாம் போதம் புதுமலரா
நாரகத்துட் கட்டு நறுந்தொடையும் - காரணத்துள்
ஐந்தொழிலு மோவாதளித்துயர்ந்த வான்கொடியும்
வந்தநவ நாதமணி முரசும் -சந்ததமும்
குரகதம் = குதிரை
ஏறுமதம் = உயர்ந்த சமயம்
களித்தோர் = மகிழ்ந்தவர்கள்
துதிக்கையினால் = வாழ்த்துவதால்
பஞ்ச மலம் = ஆணவம், வினை, மாயை, திரோதாயி(மறைப்பு), மாயேயம்(மாயாவுலகம்)
காய்ந்த = ஒழித்த
சுடாக் களிறு = மதயானை
பூரணமாம் = முற்றறிவாகிய
மலரா = பூவாக
நார் = அன்பு
தொடை = மாலை
காரணத்துள் = காரியப்படுவதற்கு முற்பட்ட நிலையில்
வான்கொடி = பெரியகொடி, பரமாகாயமாகிய கொடி
நவ நாத = புது ஒலியுள்ள, புதுமை பயக்கும் நாத தத்துவம்
மணி = அழகிய
முரசும் = நாத தத்துவமாகிய முரசும்
முதலும் முடிவும் இல்லாது, எங்கும் நிறைந்த இறைவன் ஐந்தெழுத்து மந்திரமாகிய சொல்லால் செலுத்தக்கூடிய
குதிரையும், உயர்ந்த சமய நெறியில் ஒழுகி மகிழ்ச்சியடைந்த அன்பர்களுடைய வாழ்த்துக்களாம் தும்பிக்கையினால் ஆணவம், வினை, மாயை, திரோதாயி(மறைப்பு), மாயேயம்(மாயாவுலகம்) ஆகிய ஐந்து பாசங்களையும் தொலைத்த சிவஞானமாகிய மத யானையும், எல்லாம் அறியும் அறிவுக்கும் அறிவாகிய புது மலரை உள்ள அன்பென்னும் நாரினால் கட்டிய பூமாலையும் (வெளிப்படையான பஞ்ச கிருத்தியத்திற்குக்) காரணமான ஐந்தொழிலையும் எப்போதும் செய்வதற்கு ஏதுவாகிய சத்தியாகிய பெரிய கொடியும், எப்போதும் புதுமையாயுள்ள ஓங்காரமாகிய அழகிய முரசும் .......
Posted by ஞானவெட்டியான் at 11:02 AM 6 comments
Labels: கந்தர் கலிவெண்பா, கெளமாரம், சைவம், பக்தி
Saturday, January 23, 2010
தேவை! உதவி தேவை!! அவசரம்!!!
அன்புடையீர்,
இரண்டு மாத காலமாக என்னுடைய இடுகைகள்(htttp://siththan.com/ and http://koyil.siththan.com) தமிழ் மணத்தின் பட்டியலில் சேர்க்கப்படுவதில்லை. காரணம் என்ன எனத் தெரியவில்லை. அதற்கு முன்னர் இத்தளத்தில் வெளியிட்டவைகள் தமிழ் மணத்தின் பட்டியலில் சேர்க்கப்பட்டுவந்தன. இதைத் தமிழ் மணத்தின் தொழில் நுட்பக் குழுவுக்குத் தெரிவித்ததில் என் அடைப்பலகையில்தான் கோளாறு என்கிறார்கள். என்ன காரணம் எனத் தெரியவில்லை. தொழில் நுட்பமறிந்த வல்லுனர்கள் உதவினால் மிக்க மகிழ்வேன். தமிழ் மணத்தின் நிர்வாகத்துடன் நடந்த உரையாடல்கள் உதவியாக இருக்குமெனின் அவைகளையும் தரத் தயாராக உள்ளேன்.
சற்றே உதவுங்களேன்.
ஞானவெட்டியான்
njaanam@gmail.com
Posted by ஞானவெட்டியான் at 12:46 PM 0 comments
Labels: உதவி
Thursday, January 14, 2010
திருவெம்பாவை - 20
நாள் இருபது - பாடல் இருபது
போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய்.
திருவெம்பாவையின் இறுதிப் பாடலாக அமைந்த இருபதாம் பாடலில் எங்களைப் பாதுகாப்பாயாக என்பது பிரார்த்தனையாக அமைகிறது.
எல்லா உயிர்க்கும் ஆதியும் அந்தமும், தோன்றும் இடமும், போகங்கள் விளையும் களமும், முடிவான இடமுமாய் இருப்பவை இறைவன் திருவடிகள். பிரமனும் இந்திரனும் காண முடியாத பெருமை பெற்றவை. அந்தத் திருவடிகளே தம்மை ஆட்கொள்ளும் பொன்னடிகள். அதைப் போற்றி மார்கழி நீர் ஆடுவாய்.
இப்பாடல் இறைவனின் ஐந்தொழில்களையும் குறிக்கிறது; திருவெம்பாவையின் நிறைவுப் பாடலாக மங்கலப் போற்றியாக அமைகிறது. ஐந்தொழிலும் அறுவகைக் காவலும் எட்டுப் போற்றிகளும் தனக்குள்ளே கொண்டது இப்பாடல்.
இந்தப் பாடல் இறைவனுக்குத் தம்மை ஒப்புக் கொடுத்துவிட்டுச் சரணடைந்து விடுவதைப் பற்றிப் பேசுகிறது. தோன்றியது இறைவனிடமிருந்து. வாழ்வது அவனால். உடலெடுத்த வாழ்விலிருந்து நீக்கப்படுவதற்கு எதிர்நோக்கிக் கிடப்பது அவன் அருளையே. என்னதான் முயன்றாலும் இன்னார்தான் என்று தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு வடிவிலும் செயலிலும் அருமை கொண்டவன். அவனையல்லால் வேறு யாரிடம் சரணடைவது? எனவே இப்பாடல் அவன்தாள் சரணடைவதைப் போற்றி முடிகிறது.
SHIRDI SAIBABA | HOMOEOPATHY | PSYCHIC SCIENCES
HOW? WHY? WHAT? | GOLDEN MELODIES | BANNERS FOR WEB
சீரடி சாயிபாபா | செவிக்கினிய பாடல்கள்
சிவசிவ | சித்தன் | ஆலயங்கள்
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
Posted by ஞானவெட்டியான் at 5:12 PM 0 comments
Labels: சைவம், திருவாசகம், திருவெம்பாவை, பக்தி
திருவெம்பாவை - 19
நாள் பத்தொன்பது - பாடல் பத்தொன்பது
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்று
அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கென்று உரைப்போம் கேள்
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.
இப்பாடல் பக்தி வைராக்கியத்தை விளக்குகிறது. பக்தர்களாகிய நாங்கள் பக்தர்களன்றி வேறு எவரோடும் தொடர்புடையவர்கள் ஆக மாட்டோம் என்ற வைராக்கியமே இப்பாடலின் கரு.
உனது கையில் உள்ள பிள்ளை உனக்கே அடைக்கலம் எனும் பழமொழியைப் புதுப்பிக்க நாங்கள் அஞ்சுகிறோம். ஏனெனில் அது தேவையற்ற ஒன்று. எங்களின் பெருமானே! உனக்கு ஒன்று சொல்லுகிறோம். கேடபாயாக. நாங்கள் உன் மெய் அடியார்களையே மணந்துகொள்வோம். உனக்கே நாங்கல் பணிவிடை செய்வோம். இரவும் பகலும் உன்னையே நாங்கள் எப்பொழுதும் காணவேண்டும். இறைவா! இவ்வாய்ப்பினை நீ எங்களுக்குத் தந்தருள்வாயாகில், பிறகு கதிரவனே செல்லும் தடம் மாறினும் அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. பாவையே! இப்பெரு நிலையை ஓர்ந்து உணர்ந்து ஏற்றுக்கொள்.
பாவை நோன்பிருக்கும் கன்னியர் இப் பாடலில் தங்களின் வேண்டுதல்களை வெளியிடுகிறார்கள். முதலில் எடுத்த பிறவிதோறும் இறைவனுக்குத் தாம் தொண்டர்களாக இருந்ததை அறுதி செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களாகிய நாங்கள் உன்னிடம் கூறிக் கொள்ள ஒன்று உண்டு என்று சொல்லும் போது சொல்ல வருவது வைராக்கியத்தை அறிவித்துக் கொள்வதே.
அவன் அடியார்களுக்கே தாம் அடியார்களாவோம். வாழும் எவரும் வாழும் வரையிலும் உலகியலைத் தவிர்க்க முடிவதில்லை. எனவே இல்லறம் கூட அறத்தாற்றில் நடத்த வேண்டுமானால் அதற்கு இலக்கால் ஒன்றிய வாழ்க்கைத் துணை தேவை. அத்தகைய தேவை அமையப் பெற்றபின் எங்கு என்ன நடந்தால் என்ன என்ற விட்டேற்றி மனப்பான்மையை இப்பாடல் தெளிவுபடுத்துகிறது.
பாவையர் இறைப் பணிக்கான வாழ்வை வரமாகக் கேட்பது தெளிவாகிறது.
SHIRDI SAIBABA | HOMOEOPATHY | PSYCHIC SCIENCES
HOW? WHY? WHAT? | GOLDEN MELODIES | BANNERS FOR WEB
சீரடி சாயிபாபா | செவிக்கினிய பாடல்கள்
சிவசிவ | சித்தன் | ஆலயங்கள்
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
Posted by ஞானவெட்டியான் at 5:11 PM 0 comments
Labels: சைவம், திருவாசகம், திருவெம்பாவை, பக்தி
திருவெம்பாவை - 18
நாள் பதினெட்டு - பாடல் பதினெட்டு
அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமயங்கித் தாரகைகள் தாம் அகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகித்
கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணே இப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.
பெண்ணே! திருவண்ணாமலை யானுடைய தாமரைத் திருவடியில் சென்று வணங்கும் அமரர்கள் முடியில் அணிந்துள்ள இரத்தினங்கள் கதிரவன் எழுந்ததும் விண்மீன்கள் ஒளியிழப்பதைப்போல் சிவனின் திருவடிப் பேரொளியின்முன் ஒளியிழந்து விடுகின்றன.
எம்பெருமான், பெண்ணானவன், ஆணானவன், அலி மூன்றுமானவன். ஒளிதரும் கதிரவனும், மதியும் சுடருமான முக்கண்ணனானவன். விண்ணாகவும், மண்ணாகவும், மற்றுமுள்ள வேறாக உள்ள அனைத்துமானவன். அவன் நம் கண் முன்னே அருட்காட்சி தரும் நிறைந்த அமுதமுமாகி நிற்கின்றான். அந்த பெருமானுடைய பொற்திருவடிகளைப் பாடிப்பரவி, நாம் உய்ய மலர்கள் நிறைந்த இந்த நீரிலே பாய்ந்து நீராடுவோமாக.
SHIRDI SAIBABA | HOMOEOPATHY | PSYCHIC SCIENCES
HOW? WHY? WHAT? | GOLDEN MELODIES | BANNERS FOR WEB
சீரடி சாயிபாபா | செவிக்கினிய பாடல்கள்
சிவசிவ | சித்தன் | ஆலயங்கள்
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
Posted by ஞானவெட்டியான் at 5:08 PM 0 comments
Labels: சைவம், திருவாசகம், திருவெம்பாவை, பக்தி
திருவெம்பாவை - 17
நாள் பதினேழு - பாடல் பதினேழு
செங்க ணவன்பால் திசைமுகன் பால் தேவர்கள் பால்
எங்கும் இலாதோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குஉண் சுருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கள் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.
இப் பாடல் பொழுது புலரும் நேரத்தில் பொய்கையில் நீராடப் போகும் கன்னியருள் ஒருத்தி தன்னுடன் வரும் மற்றவளைப் பார்த்துப் பேசுவதாக அமைந்திருக்கிறது.
இயல்பாகவே மணமுடைய கரிய கூந்தலையுடையவளே! திருமால், பிரம்மா ஆகிய அமரர்களும் அனுபவித்திராத இன்பத்தை நம்மையும் ஒரு பொருட்டாகக் கொண்டு அருளியவன் இறைவன். நம் குற்றங்கள் களையப்படும்போது அது அநுபூதி ஆகிறது. அதற்காக இறைவன் நம் நெஞ்சமாகிய இல்லங்கள்தோறும் தேடி வந்து குடி புகுந்தவன். செந்தாமரை போன்ற திருவடியை நமக்குத் தந்தருளும் வள்ளல் அவன். கருணை மிகுந்த கண்களையுடைய அரசன் அவன். அடியவர்களாகிய நம் போன்றவர்க்கு அமுதென வாய்த்தவனைப் பாடுவோம். சிவஞானமெனும் நலம் அவனிடமிருந்து நமக்கு வருகிறது. தாமரைத் தடாகத்தில் மூழ்கி நீராடி அவன் பெருமை பாடுவோம். தோழி! நீ ஓர்ந்து பார்த்து ஏற்றுக்கொள்.
குழந்தை கையில் கிடைத்த பொற்கிண்ணத்தின் அருமை அக்குழந்தைக்குத் தெரியாது. அதுபோல் நமக்கு வாய்த்துள்ள இறைவனின் கருணைத் திறத்தை அறியாதவர்கள் நாம். வலிய வந்து வழங்கப் பெற்ற இறையருளின் அருமை உணரும் போது அது நமது செல்வமாகிறது.
எந்தக் கேள்வியும் இல்லாமல் இறைவன் மனிதன் மேல் பொழிவது அருள்.
இப்பாடலில் பாவை சொல்வது அடிப்படைப் பாவபீடிப்பே அன்றி அவள் அறிந்து செய்த அல்லது செய்யத் தவறிய காரியங்களின் பாற்பட்ட பாவம் அன்று.
இறைவன் ஆன்மாக்களை ஈடேற்றியே தீர்வது என்ற தீர்மானத்தில் இருப்பவன் இறைவன் என்பதால் இறைவனை சேவகன் என்கிறார்.
SHIRDI SAIBABA | HOMOEOPATHY | PSYCHIC SCIENCES
HOW? WHY? WHAT? | GOLDEN MELODIES | BANNERS FOR WEB
சீரடி சாயிபாபா | செவிக்கினிய பாடல்கள்
சிவசிவ | சித்தன் | ஆலயங்கள்
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
Posted by ஞானவெட்டியான் at 5:06 PM 0 comments
Labels: சைவம், திருவாசகம், திருவெம்பாவை, பக்தி
திருவெம்பாவை - 16
நாள் பதினாறு - பாடல் பதினாறு
முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துஉடையான்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையான் இட்டிடையின்
மின்னப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி யவன்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்.
மேகமே! கடலைக் குடித்து அதன் நீரைக் குறைத்து, மேலே கிளம்பி, உமையாளின் கார் நிறத்தை ஏற்றாய். நீ மின்னலாக மின்னியது சக்தியின் சிற்றிடையை ஒத்திருந்தது. நீ இடி இடித்தது அன்னையின் பொன்சிலம்பின் ஒலி போன்று இருந்தது. நீ வானவில்லை வீசியது அம்மையின் புருவத்தை ஒத்திருந்தது. எம்மை ஆளுடையாளாகிய அன்னையின் நாயகன் சிவனின் அன்பருக்கு முதலில் அருள் சுரந்துவிட்டுப் பி எங்களுக்கும் அருள் மழை பொழிவாயாக. பாவாய்! இதை எண்ணிப்பாரேன்!
அருளை நினைந்தால் அருட்பேற்றை நாடினால் அம்மையை நினைப்பது சைவ மரபு. உலகும் உயிரும் வாழ வாழ்க்கை வளமுற மழை வேண்டுகின்ற கன்னியரும் அவ்வாறே உமையம்மையை வேண்டுகின்றனர்.
பிராட்டி நம்மை ஆளுடையவள். எனவே ஆட்கொள்ளல் அவள் கடமை ஆகிறது. முன்னி முன் சுரக்கும் என்றது நமக்கு எது வேண்டும் எப்போது வேண்டும் என்பதை அவளே எண்ணிப் பார்த்து நம் தேவையை நாம் உணருமுன்பே அருளுவது அவள் இயல்பு. அருளினை மழை என்றது கைம்மாறு கருதாமல் பொழிவது. இறைவனின் கருணைப் பெருந்திறத்தை மழையை முன்னிறுத்தி விளக்குகிறது இப்பாடல்.
SHIRDI SAIBABA | HOMOEOPATHY | PSYCHIC SCIENCES
HOW? WHY? WHAT? | GOLDEN MELODIES | BANNERS FOR WEB
சீரடி சாயிபாபா | செவிக்கினிய பாடல்கள்
சிவசிவ | சித்தன் | ஆலயங்கள்
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
Posted by ஞானவெட்டியான் at 5:04 PM 0 comments
Labels: சைவம், திருவாசகம், திருவெம்பாவை, பக்தி
திருவெம்பாவை - 15
நாள் பதினைந்து - பாடல் பதினைந்து
ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையான் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்துஒருவர் ஆமாறும்
ஆர்ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.
தெய்வக் காதல் ஏற்றிய பித்தால் பெரும்பிச்சியாகக் காட்சியளிக்கும் ஒரு பெண்ணைப் பாவை நோன்புக் கன்னியர் காண்கின்றனர். எம்பெருமான் என்றே ஒரு வேளையில் சொல்லிக்கொண்டிருப்பாள். மற்றொரு வேளையில் நம்பெருமானின் பெருமையை வாயால் ஓயாது செபித்துக்கொண்டிருப்பாள். மனதில் களிப்பு மிக்கமையால் கண்ணீர் விட்டவண்ணமாய் இருப்பாள். இன்னுமொரு வேளையில் தரையி வீழ்ந்து கிடப்பாள். எவ்வளவு பெரியவராயினும் சித்தத்தைச் சிவன் பாலே வைத்தவளாதலால் வேறு யாரையும் மதிக்க மாட்டாள். இறைவனின் பித்துப் பிடித்தவள். ஓர் உயிரை இப்படி முற்றிலும் தன்வயமாக்கிக் கொள்ளும் ஞான வடிவே சிவன். கச்சும் பூணும் அணிந்த மார்பகத்தை உடைய பாவையரே! நம் இறையவனை வாயாரப் போற்றிப் புகழ்ந்து அழகிய மலர்கள் நிறைந்த பொய்கையில் குதித்து நீராடுவோம். அப்படிப் பாடினால் நம்மையும் ஆட்கொண்டருளி இறைவன் இந்த அனுபவத்தைத் தராமலா போவான்? பாவையே! இவற்றையெல்லாம் எண்ணிப்பார்.
அடியவர்களை வலிய ஆட்கொள்ளுவதில் அளவிறந்த கருணை உடைமையால் கடவுளையே பெரும் பித்தன் என்று குறிப்பிடுவது இயல்பு. தான் பித்தனாவதோடு ஆன்மாக்களையும் ஆட்கொண்டு பித்தமாக்குவது பெருமான் இயல்பு.
SHIRDI SAIBABA | HOMOEOPATHY | PSYCHIC SCIENCES
HOW? WHY? WHAT? | GOLDEN MELODIES | BANNERS FOR WEB
சீரடி சாயிபாபா | செவிக்கினிய பாடல்கள்
சிவசிவ | சித்தன் | ஆலயங்கள்
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
Posted by ஞானவெட்டியான் at 5:03 PM 0 comments
Labels: சைவம், திருவாசகம், திருவெம்பாவை, பக்தி
திருவெம்பாவை - 14
நாள் பதினான்கு - பாடல் பதினான்கு
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆடச்
சீதப் புனல்ஆடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதித்திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்துஎடுத்த பெய்வதைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.
காதில் அணிந்துள்ள குழைகள் ஆட, பசும் பொன்னால் ஆதிய மற்ற ஆபரணங்களும் ஆட, பூமாலை அணிந்த குழல் ஆட, மலர்களை நாடிவந்த வண்டினம் ஆட, நாம் குளிர்ந்த நீரில் மூழ்கி நீராடுவோம். பின்னர் சிற்றம்பலத்தானைப் போற்றித் துதிப்போம். வேதம் அவனை விளக்க முயலுகிறது. நாம் அவனை அடையவேண்டும். அவன் ஞானச்சுடர். செஞ்சடையில் கொன்றை மலர் அணிந்துள்ளான். ஊழிக்காலத்தின் முன்னும் பின்னும் இருப்பவன் அவனே. இறைவனின் கருணையும் அருளும்தான் அன்னை உமையவள். அவனே ஆதியும் அந்தமுமாதலும் ஆணவ, கன்ம மலங்களை நீக்கி மானுடரைப் பேணும் வளையணிந்த உமா தேவியின் திருவடிகளும் அமைகின்றன. இப்படிப் பாடி ஆடி நீராடுவோம்.
இறைவன் ஆடிக் கொண்டிருக்கும் சிதம்பரத்தைப் பாடிக் குளிர்ந்த நீரில் இறங்கக் குளிர் தெரியாது. சம்சாரத்தின் நடுக்கங்களும் போய்விடும் என்பதைக் கூறாமல் கூறுகிறாள்.
பாடலின் இறுதி மூன்று வரிகள்ஆதியும் அந்தமுமாகிப் பிரம்மாண்டமாக நிற்கும் இறைவனின் கருணையும் அருளும் அன்னையின் அருளாக மாந்தருக்குக் கிடைப்பதைக் கொண்டாடுகின்றன.
சிற்றம்பலம் ஞான வெளி. அங்கிருந்து வேதம் தோன்றுகிறது. அதிலிருந்து வேதப் பொருளாகிய மெய்யுணர்வு வெளிப்படுகிறது. அந்த மெய்யுணர்வின் சோதியாக இறைவன் தோன்றுகிறான்.
இந்தப் பாடலில் பொய்கையாவது அம்மையப்பனின் அருள் பெருக்கின் குறியீடேயாம்.
SHIRDI SAIBABA | HOMOEOPATHY | PSYCHIC SCIENCES
HOW? WHY? WHAT? | GOLDEN MELODIES | BANNERS FOR WEB
சீரடி சாயிபாபா | செவிக்கினிய பாடல்கள்
சிவசிவ | சித்தன் | ஆலயங்கள்
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
Posted by ஞானவெட்டியான் at 4:59 PM 0 comments
Labels: சைவம், திருவாசகம், திருவெம்பாவை, பக்தி
திருவெம்பாவை - 13
நாள் பதின்மூன்று - பாடல் பதின்மூன்று
பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலம்கழுவு வார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த
பொங்கும் மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்து ஆர்ப்பப்
கொங்கைகள் பொங்கப் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்.
மடுவில் புதிய குவளை மலரும் புதிய செந்தாமரை மலரும் நிறைந்துள்ளன. அழகிய நீர்ப்பறவைகள் அங்கு ஆர்ப்பரிக்கின்றன. பாம்பு பின்னல் போடுகிறது. உடலின் அழுக்கைப் போக்குபவர்கள் அங்கு குழுமுகின்றனர். ஆதலால் சிவசக்தி சொரூபமாக அத்தடாகம் தென்படுகிறது. அதில் நாம் குதித்துக் குதித்து நீராடுவோம். நமது சங்கு வளைகளும் கால் சிலம்புகளும் சேர்ந்து ஒலிக்கட்டும். மார்பகங்கள் பூரிப்படையட்டும். நாம் முழுகுவதால் நீர் பொங்கட்டும். பாவாய்! இக்கருத்துக்களை ஓர்ந்து உணர்.
இப்பாடலில் சிலேடை நயம் அருமை. சிவன் சூடிக் கொள்வது குவளை மலரும் செந்தாமரையும். இறைவனைச் சுற்றியிருப்பது பறவைக் கூட்டம். கழுத்தில் சுற்றிக் கிடப்பது அரவம். அவனைத் தேடி வருகிறவர்கள் தம் மன அழுக்கைக் கழுவிக்கொள்ள விழைகிறவர்கள். குவளை மலரின் நீலநிறம் இறைவியையும் தாமரையின் செந்நிறம் இறைவனையும் குறிப்பதையும் காணலாம்.
இதை இப்படியும் காணலாம். குளத்தில் குவளை மலர்களும் தாமரையும் உண்டு. குளத்தில் பறவைக் கூட்டம் கூடும். பின்னிக் கிடக்கும் பாம்புகளும் உண்டு. குளத்தில் நீராடி அழுக்கைக் கழுவிக் கொள்ள வருகிறவர்களும் உண்டு.
இப்படியும் பாருங்கள். குவளை செந்தாமரை மலர் போன்ற கண்களோடும் அங்கமாகிய கைகளில் வளைகள் பல பூண்டும் பின்னித் தொடர்ந்து எழுகின்ற சத்தத்தோடும் பாவையர் குளம் சேர்கிறார்கள். பின்னும் அரவம் என்பதை எல்லா அரவங்களுக்கும் மூலமாகிய பிரணவம் என்றும் கொள்ளலாம்.
எனவே ஓம் என்று பாவையர் முழங்குகிறார்கள்.
பாடலின் நான்காம் அடியில் அம்மையப்பனாக இருக்கும் இறைவன் அல்லது அம்மையும் அப்பனும் ஒத்து இசைந்திருப்பதைப் போன்ற குளம் என்று பொருள்படும் வகையில் அமைந்திருக்கிறது.
நீரில் உடலைக் கழுவிக் கொள்வதைப் போல அருட்புனலில் ஆணவம் கன்மம் மாயை ஆகிய மலங்களைக் கழுவிக் கொள்ளலாம் என்கிறாகிறது.
இறைவியோடு இணைந்த இறைவனே வேண்டுவோர்க்கு வேண்டுவன தருகிறவன். பற்றிலார்க்குக் கூட வீடு பேறு அருளும் பரமயோகி பரமசிவன்.
SHIRDI SAIBABA | HOMOEOPATHY | PSYCHIC SCIENCES
HOW? WHY? WHAT? | GOLDEN MELODIES | BANNERS FOR WEB
சீரடி சாயிபாபா | செவிக்கினிய பாடல்கள்
சிவசிவ | சித்தன் | ஆலயங்கள்
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
Posted by ஞானவெட்டியான் at 4:56 PM 0 comments
Labels: சைவம், திருவாசகம், திருவெம்பாவை, பக்தி
திருவெம்பாவை - 12
நாள் பன்னிரெண்டு - பாடல் பன்னிரெண்டு
ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்துஆடும்
தீர்த்தன் நற் றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ்வானும் குவலயமும் எல்லாமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துஉடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய்.
பாவை நோன்பிருக்கும் கன்னியர் இறைவனைப் புகழ்ந்து திருவடி ஏத்திச் சுனைநீர் ஆடுகிறார்கள். அப்போது நீராடுகின்ற ஒருத்தி மற்றொருத்தியைப் பார்த்துக் கூறுவதைப் போல அமைந்திருக்கிறது இப் பாடல்.
நம்மைப் பிணித்துள்ள பிறவித்துன்பம் ஒழியட்டும். நாம் மகிழ்ந்தாடுவது பரிபூரணனான தில்லைச் சிற்றம்பலத்தில் ஞானாக்கினி எடுத்து ஆடும் கூத்தனைக் குறித்தே. விண்ணுலகு, மண்ணுலகு ஆகிய அனைத்தையும் படைத்துக் காத்து அழிக்கும் (ஐந்தொழில்) செயலைத் திருவிளயாடலாகச் செய்யும் சீலன். அவன் புகழையே சொல்லி வளைகள் ஒலிக்கவும், பெரிய ஒட்டியாணங்கள் ஆரவாரித்து ஒலிக்கவும், அழகிய கூந்தலின்மேல் வண்டுகள் முழங்கவும், மலர்கள் நிறைந்துள்ள பொய்கையில் நீராடி பொன்னம்பலத்தானின் பொன்னடியைத் துதித்துப் பெரிய சுனைநீரில் மூழ்குவோம். பெண்ணே! இக்கருத்துக்களை ஓர்ந்து உணர்.
பற்றை விட்டொழித்து இறைவன் திருவடியைச் சிக்கெனப் பற்றிவிட்டால் பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்கலாம் என்பதாம்.
SHIRDI SAIBABA | HOMOEOPATHY | PSYCHIC SCIENCES
HOW? WHY? WHAT? | GOLDEN MELODIES | BANNERS FOR WEB
சீரடி சாயிபாபா | செவிக்கினிய பாடல்கள்
சிவசிவ | சித்தன் | ஆலயங்கள்
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
Posted by ஞானவெட்டியான் at 4:53 PM 0 comments
Labels: சைவம், திருவாசகம், திருவெம்பாவை, பக்தி
திருவெம்பாவை - 11
நாள் பதினொன்று - பாடல் பதினொன்று
மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர்என்னக்
கையாற் குடைந்து குடைந்துஉன் கழல்பாடி
ஐயா வழியடி யோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல்போற்
செய்யா வெண்ணீறாடி செல்வ சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளர்
ஐயாநீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந் தோங்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.
நீரடக் குழுமியுள்ள நாங்கள் அகன்ற நீர் நிறைந்த பொய்கையில் இறங்கி, மூழ்கி எழுந்து மூழ்கும்பொழுது 'முகேர்" என்னும் ஒலி எழுப்பி நீராடி உன் திருவடியினைப் புகழ்ந்து பாடுகிறோம். அப்பனே! பரம்பரை பரம்பரையாக உன் அடியார்களாகிய நாங்கள் உறுதியாக உன் அருளில் ஊறி வாழ்ந்து வருகிறோம். சுடர்விடும் தீப்போன்ற செம்மேனியனே, வெண்ணீறணிந்தவனே! மகிமை அனைத்துக்கும் இருப்பிடமே! ஒடுங்கிய இடையும், மை பூசிய அகன்ற கண்களையும் உடைய உமையம்மையின் தலைவா! அழகா! உயிர்களை ஆட்கொள்ளுதல் உன் திருவிளையாடலாம். அதன்படி நாங்கள் எல்லோரும் உறுதியாக உய்வு அடைந்துள்ளோம். உனது வழிபாட்டில் நாங்கள் தளர்வடையாவண்ணம் காத்தருள்வாயாக. பெண்ணே! இக்கருத்துக்களை ஓர்ந்து பார்த்து உணர்வாயாக.
பாவையர் பொய்கைக்கு வந்து சேர்கின்றனர். பொய்கையில் புகுந்து குடைந்து குடைந்து நீராடுகிறார்கள். கையால் நீரைக் குடைந்து குடைந்து உடல் குளிர, உள்ளம் குளிரக் குளிக்கிறார்கள்.
நீரால் அமையும் புறத்தூய்மையைப் பெற்றபின், அகத்தூய்மை, ஆன்மத் தூய்மை பெற நீரடும்போதே நிமலன் திருவடிகள் பற்றிப் பாடுகிறார்கள். அப்படிப் பாடும்போதே தமக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பையும் வெளிப்படுத்துகிறார்கள்.
“நாங்கள் உன் வழி அடியோம்.” இறைவன் ஆட்கொண்டு அருளுவோர் நிலையும் அவர்கள் செய்யும் கடமைகளும் அடைந்தாயிற்று. இனி நடக்க வேண்டியதைப் பார்த்துக் கொள்வது அவனே என்கிறார்கள்.
தாம் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்தாயிற்று எனும் போது அதற்கான பயனை இறைவனிடம் உரிமையோடு கேட்பதாக இப் பாடல் அமைகிறது.
நெருப்புப் போன்ற திருமேனியில் தூய வெண்ணீறு பூசியிருப்பது நீறு பூத்த நெருப்பை நினைவூட்டுகிறது. நீற்றுக்குள் நெருப்பு இருப்பதை அறியாதவர்கள் கடவுளுண்மையை அறியார்.
செல்வா எனும்போது அடியார்க்குச் செல்வம் இறைவனே என்கிறார்கள். மார்கழி நீராடி சிவனடியாரைக் கணவராகப் பெறுவது இறைவனின் திருவிளையாடல் கருணை என்கிறார்கள். முன்பு எப்போதும் போலவே இனியும் பாக்கியம் பெற இறைவன் காப்பாற்ற வேண்டும் என்பது வேண்டுதல்.
இத்தனையும் அவன் அருளால் செய்த பின் வேண்டுவது சிவகதியே.
SHIRDI SAIBABA | HOMOEOPATHY | PSYCHIC SCIENCES
HOW? WHY? WHAT? | GOLDEN MELODIES | BANNERS FOR WEB
சீரடி சாயிபாபா | செவிக்கினிய பாடல்கள்
சிவசிவ | சித்தன் | ஆலயங்கள்
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
Posted by ஞானவெட்டியான் at 4:49 PM 0 comments
Labels: சைவம், திருவாசகம், திருவெம்பாவை, பக்தி
Wednesday, January 13, 2010
திருவெம்பாவை - 10
நாள் பத்து - பாடல் பத்து
பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்று அல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டர்உளன்
கோதில் குலத்தரன்றன் கோயில் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவரைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.
அனைத்துமாயிருப்பவன் பரமன்; அவனுக்குப் புறம்பாக ஒன்றுமில்லை. அவனை முழுவதும் விளக்கவியலாது. சிவனின் திருவடி பாதாள உலகங்கள் ஏழுக்கும் கீழே, சொல்லுக்கு எட்டாத இடத்துக்கும் கீழே உள்ளது. கொன்றை மலரால் அலங்கரிக்கப்பட்டுள்ள செஞ்சடையுடைய திருமுடியோ எல்லாப் பொருட்களுக்கும் முடிவானதே. உமையவளைத் பங்கில் ஒருபாகமாகத் தாங்கியுள்ளதால் அவனுக்கு மேனி ஒன்றன்று. அவனை முற்றும் விளக்க வேதங்கள், அமரர், மக்கள் ஆகியோர் யாராலும் இயலாது. அவன் சொல்லில் அடங்கா உயிர்த்தோழன். தொண்டரின் உள்ளத்தே தெளிவுற விளங்குகிறான். குற்றமற்ற ஏற்றத்தையுடைய அரன் அவன். அவனுக்கு ஊர், பேர், உறவினர், அயலார் இல்லை. அம்மா! அவனுடைய சிறப்புக்களை ஓர்ந்து நோக்கி ஏற்றுக்கொள்.
பரம்பொருளாக எங்கும் உள்ள இறைவன், அடியார்களுக்கு மட்டுமே உறவினனாக இருக்கிறான். அவர்தம் உள்ளத்தில் மட்டும் நிறைந்திருக்கிறான்.
இது அருவுருவ நிலைக் குறிப்பது. ஒருவனுக்கும் ஒருத்திக்கும் உரு ஒன்றாதலால் அருவுருவ (சதாசிவ) நிலையாம்.
Posted by ஞானவெட்டியான் at 6:05 PM 0 comments
Labels: சைவம், திருவாசகம், திருவெம்பாவை, பக்தி
திருவெம்பாவை - 9
நாள் ஒன்பது - பாடல் - ஒன்பது
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் போத்தும் அப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவர் ஆவர் அவர்உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்தோம்
இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம்ஏலார் எம்பாவாய்.
பழயவைகளிலெல்லாம் பழமையானவனே! புதியவைகளிலெல்லாம் புதுய இயல்போடு இருப்பவனே! உன்னைத் தலைவனாகப் பெற்ற நாங்கள் உனது சிறப்பு வாய்ந்த திருவடிக்கே உரியவர் ஆகிறோம். உனக்கு ஆட்பட்டவர்களின் திருவடிகளை வணங்குவோம். அவ்விடத்து அவர்களை அனுசரித்து ஒழுகுவோம். அத்தகையோரே எங்களுக்குக் கணவன்மார் ஆகுக. அவர்கள் விரும்பிச் சொன்னவண்ணமே தொண்டராய்ப் பணிபுரிவோம். இவ்வாறு, எங்கள் இறைவா! எங்களுக்கு அருள் புரிவாயேல் எங்களுக்குக் குறை ஒன்றுமிராது. பெண்ணே! வாழ்விற்குரிய இப்பாங்கை நீ ஏற்றுக்கொள். நாங்கள் கூறியவற்றை எண்ணிப்பார்.
அடியார்க்கும் அடியார்களைப் பணிவது ஆண்டவனைப் பணிவதாகும். அந்தப் பணியே அனைத்திலும் சிறந்த இனிய பணியாகும்! இதில் நவசக்திகள் சிவன் பெருமை பேசுகிறார்கள். ஒரு மூன்றாம் பிழம்பாகிய அருவம், அரு உருவம், உருவம் என்னும் மூன்றனுள் அருவ நிலை குறிப்பது இது.
Posted by ஞானவெட்டியான் at 6:03 PM 0 comments
Labels: சைவம், திருவாசகம், திருவெம்பாவை, பக்தி