ஞானரத்தினக் குறவஞ்சி (31 - 35)
*****************************************
31.எங்கும் பரந்த பெரும் பொருளென்னடி சிங்கி? - அது
அங்கிங்கு மெங்குமாய்க் கண்ட பெருவெளி சிங்கா.
எங்கும் பரந்த பெரும் பொருள் என்னடி சிங்கி?
அது அங்கு, இங்கு எங்குமாய்ப் பரந்த சிதாகாயப் பெருவெளி சிங்கா!
32.அண்ணிணு மெண்ணம் அழியாப் பொருளென்ன சிங்கி - இரு
கண்ணையு மூட இருளழி யாப்பொருள் சிங்கா!
எண்ணமாகிய நினைவு கிட்டினாலும் அழியாத பொருள் என்னடி சிங்கி?
அது கண்களை மூட இருக்கும் இருள்தானடா சிங்கா! (கன்ஸூல் மஹபியா)
33.ஆங்கார வுடலுக்கு ஆணியா னென்னடி சிங்கி? - அது
ஓங்கார மூலத்தின் உள்ளொளி யல்லவோ சிங்கா!
ஆங்காரம் நிறைந்த உடலுக்கு ஆதாரம்(ஆணி) என்னடி சிங்கி?
அது பிரணவமாம் ஓங்கார மூலத்தின் உள்ளே இருக்கும் ஒளியே சிங்கா!
34.ஆணியாய் வந்த அரும்பொரு ளென்னடி சிங்கி? - அது
தோணிய சற்குரு முதனாம மல்லவோ சிங்கா!
ஆதாரமாய் வந்த அரும்பொருள் என்னடி சிங்கி?
தோன்றிய சற்குருவின் முதல் பெயரல்லவோ(சீவ) சிங்கா!
35.இந்தப் பொருள் வந்த தெந்த வழியடி சிங்கி? - அது
அந்தக் கதிமதி வந்த வழியடா சிங்கா!
கதி = பிறப்பு; மதி = அறிவு.
இந்த சீவன் வந்தது எந்த வழியடி சிங்கி?
அந்த அறிவு பிறந்து வந்த வழியடா சிங்கா!
Thursday, October 19, 2006
ஞானரத்தினக் குறவஞ்சி (31 - 35)
Posted by ஞானவெட்டியான் at 9:27 PM 2 comments
Labels: குறவஞ்சி, ஞானம், ஞானவெட்டியான்
ஞானரத்தினக் குறவஞ்சி (21 - 30)
ஞானரத்தினக் குறவஞ்சி (21 - 30)
*****************************************
21."ஆசைகொண் டுநம்மை யாட்டுவா ராரடி சிங்கி? - அது
அக்கினி வாயுநீர் மண்ணின் மகிமையே சிங்கா!"
ஆசைகொண்டு நம்மை இப்படி ஆட்டிப் படைப்பவர் யாரடி சிங்கி?
ஐம்புலன்களில் ஆகாயம் தவிர எஞ்சி நிற்கும் அக்கினி, வாயு, நீர், மண் ஆகியவைதானடா சிங்கா!"
22."ஆசைபா சப்பலன் அனுபோகம் ஆரடி சிங்கி? - அது
அங்கம் பொருந்திய பங்குமண் அல்லவோ சிங்கா!"
ஆசை, பாசம் முதலியவைகளின் பலன்களை அனுபவிப்பது(அனுபோகம்) யாரடி சிங்கி?
மண் தத்துவத்தாலாகிய அங்கங்கள் பொருந்திய உடல்தானடா சிங்கா.
23."தன்னை அறியுந்தலமேதடி சொல்லடி சிங்கி? - அது
கண்ணிடையான நடுநிலை யல்லவோ சிங்கா!"
தன்னை அறியும் தலம்(இடம்) எதடி சிங்கி?
கண்களிடையேயான ஐம்புலன்களும் சந்திக்கும் இடமேதானடா சிங்கா.
24."என்னவிதமாகத் தன்னையறிவது சிங்கி? - அது
தன்னவன் றாய்தந்தை யாகிநா மானது சிங்கா!"
தன்னையறிவது எப்படி சிங்கி?
தன்னுடைய தாய் தந்தையையும் ஆகி, நாமுமாகிய விந்து தானது சிங்கா.
25."இறையை அறிவதிங் கெப்படிச் சொல்லடி சிங்கி? - அது
இறையெங்கு நின்றாடுந் தன்நினை வாகுமே சிங்கா!"
இறையை அறிவது எப்படி சிங்கி?
இறை எங்கும் நின்றாடும் தன்னுடைய நினைவுதானடா சிங்கா!
26."என்னுள் விளங்குந் தவமென்ன சொல்லடி சிங்கி? - அது
தன்னை மறந்து தவத்தி லிருப்பது சிங்கா!"
தவம் என்றால் என்னடி சிங்கி?
உணர்வை நினைவினில் நிறுத்தித் தன்னையும் மற்றவற்றையும் மறந்து இருப்பதுதான் தவம்.
27."என்னவிதமாகத் தன்னை மறப்பது சிங்கி? - அது
ஒன்றைப் பொருந்தி ஒடுங்கியிருப்பது சிங்கா!"
தன்னை மறப்பது எப்படியடி சிங்கி?
நினைவில் உணர்வை ஒன்றினால் மனமடங்கும். அந்த ஒடுக்கம் தன்னை மறக்கச் செய்யும் சிங்கா.
28."என்னவிதமாக ஒன்றைப் பொருந்தலாம் சிங்கி? - அது
எல்லாம் மறந்து இருளா யிருப்பது சிங்கா!"
ஒன்றைப் பொருந்தும் வழி என்னடி சிங்கி?
எல்லாவற்றையும் மறந்து இருளில் மூழ்கி இருப்பது சிங்கா.
29."ஒன்றென்று சொன்ன உயர்நிலை என்னடி சிங்கி? - அது
உன்னா லுதிப்பல முன்னால் நினைவடா சிங்கா!"
ஒன்று என்று சொன்ன உயர்நிலை என்னடி சிங்கி?
உயர்நிலை நினைவுதானடா சிங்கா.
30."கன்னி யெழுந்து கலந்திடம் எவ்விடஞ் சிங்கி? - சில
முன்னியெழுந்த உயிர் நிலை யல்லவோ சிங்கா!"
வாலைக் குமரியாம் மனோன்மணி எழுந்து கலந்தது எந்த இடம் சிங்கி?
அது முதன்முதலில் உதித்த உயிர்நிலையே சிங்கா.
Posted by ஞானவெட்டியான் at 9:24 PM 0 comments
Labels: குறவஞ்சி, ஞானம், ஞானவெட்டியான்
ஞானரத்தினக் குறவஞ்சி ( 11 - 20)
ஞானரத்தினக் குறவஞ்சி ( 11 - 20)
*****************************************
11."முன்னே முளையாய் முளைத்திடம் எவ்விடஞ் சிங்கி? - அது
மூளை முனையிரு கண்ணிக ளல்லவோ சிங்கா!"
முதன் முதலில் முளையாய் முளைத்த இடம்எது சிங்கி?
மூளையின் முனையில் கண்ணிகளாய்த் தொங்கிகொண்டிருக்கும் கண்களடா சிங்கா.
12."முன்னே யுருவாய் முடிந்திட மெவ்விடம் சிங்கி? - அது
பெண்ணாணு மாகப் பிறந்த தலமடா சிங்கா!"
உருவாகி உடலெடுத்து முடிந்தது எவ்விடம் சிங்கி?
பெண்ணும் ஆணுமாய் பிறக்கும்போது வெளிவரும் இடமடா(தலமடா) சிங்கா.
13."இந்த வுடலுக்கு வேரென்ன தூரென்ன சிங்கி? - அது
இந்த வுடலுக் குயிராதி மூலமே சிங்கா!"
இந்த உடலுக்கு ஆரம்பமும் முடிவுமென்ன சிங்கி?
இந்த உடலுக்கு உயிர் ஆதிமூலமே (விந்து சக்தி) சிங்கா.
14."இந்த வுடலுக் குயிர்வந்த தெப்படி சிங்கி? - அது
தொந்தி நடுக்குழி தொப்பூழ் வழியடா சிங்கா!"
இந்த உடலுக்கு உயிர் வந்ததுஎப்படி சிங்கி?
அம்மையின் வயிற்றின் நடுக்குழியா தொப்பூழ் கொடி வழி வந்ததடா சிங்கா.
இதன் வழியாக அன்னையின் வயிற்றினுள்ளே பரிபூரணமாயிருந்தது பிண்டம் மட்டுமே. குழந்தையாக வெளிவந்தவுடன் அன்னையின் தொப்பூழ் கொடியின்மூலம் அடிக்கும் சிவ்வென்ற மூச்சுக் காத்துதான் குழவிக்கு உயிர்.
இதை எவ்வளவு எளிதாக விளக்கியுள்ளார் பீரு முகமது அவுலியா.
15."இந்த உடலுக்கு உயிரெங்கே நின்றது சிங்கி? - அது
அந்தர மாயண்டமாக்கொடி யல்லவோ சிங்கா!"
இந்த உடலுக்கு உயிர்எங்கே நின்றது சிங்கி?
அந்தரத்தில் தொங்கும் முட்டையையும் குழந்தையையும் பிணைக்கும் கொடி அல்லவோ சிங்கா.
16."இந்த வுடற்கனி எந்தக் கொடிக்கனி சிங்கி? - அது
முந்திய கொப்பூழு மாக்கொடி யல்லவோ சிங்கா!"
என் உடல்எந்த கொடியின் கனி சிங்கி?
இது முந்திய(உன்தாயின்) கொப்பூழு கொடிதான் சிங்கா.
17."மாக்கொடி யென்பதை மானிடர்என்சொன்னார் சிங்கி?
மட்டிலடங்காத மாகலி மாவடா சிங்கா!"
மாக்கொடி(தாயின் கொப்பூழ் கொடி) யென்பதை மானிடர் என் சொன்னார் சிங்கி?
கட்டுக்கு அடங்காத நஞ்சுக் கொடிஎன்றார் சிங்கா.
"மட்டிலடங்காத மாகலி மாவடா சிங்கா!"
இதை "மட்டிலடங்காத மா "கலிமா" வடா சிங்கா!"எனக் கூறுவோரும் உண்டு.
கலிமா : "லா இலாஹ இல்லல்லாஹூ - முஹம்மதுர் ரஸுலுல்லாஹி."
18."எந்த வழியினால் வந்தோ முலகினில் சிங்கி? - அது
எல்லா முடிந்த பொருள்வழி யாமடா சிங்கா!"
எந்த வழியினால் வந்தோ முலகினில் சிங்கி?
அது எல்லா முடிந்த பொருள்வழியாம் (செய்த வினைகளுக்குத்தக்கவாறு) இந்த உலகினில் வந்தோமடா சிங்கா.
19."முன்னே அறிவால் அறிவகை என்னடி சிங்கி? - அது
முன்சுடர் மூன்று முடலுயி ராத்துமா சிங்கா!"
அறிவை அறியும் வகைஎன்னடி சிங்கி?
சூரிய, சந்திர, அக்கினிச் சுடர் மூன்றும் சேர்ந்த உடல் உயிர் ஆத்துமாவால் அறியலாம் சிங்கா.
20."பின்னே ரறிவர்க ளொன்றான தெப்படி சிங்கி? - அது
பேதகமற்ற பெருவெளி யானது சிங்கா!"
அறிவை உணர்ந்த பின்னே அறிவர்கள் ஒன்றானதெங்கே சிங்கி?
பேதமேயில்லாத சிதாகாசப் பெருவெளியில் சிங்கா.
Posted by ஞானவெட்டியான் at 9:20 PM 5 comments
Labels: குறவஞ்சி, ஞானம், ஞானவெட்டியான்
ஞானரத்தினக் குறவஞ்சி ( 1 - 10 )
ஞானரத்தினக் குறவஞ்சி ( 1 - 10 )
*****************************************
1."ஆதிக்கு முன்னம நாதியு மென்னடி சிங்கி?
அந்தக் கருக்குழி முந்த இருளறை சிங்கா."
ஆதி = ஆ(ன்மா) + தீ(வெப்பம்)
அநாதி = அந்(த)+ ஆதி = அந்தாதி
கரு = எண்ணம், நினைவு, சலனம்
ஆதியாகிய இறைக்கு முன் அநாதி என்பது என்னடி சிங்கி?
அந்தஎண்ணம், சலனம் ஆகியவை தோன்றுமிடமாகிய தலைக்குள்ளே இருக்கும் கருக்குழிக்கு உள்ளே இருக்கும் இருட்டு அறைதான் சிங்கா!
2. "ஆதியாய் வந்த அரும்பொரு ளேதடி சிங்கி?
சோதியி லாதி சொரூபா யெழுந்தது சிங்கா"
ஆதியிலே வந்த அரிய பொருள்என்னவெனில் சோதியில் ஆதி சொரூபமாம் விந்துவேயாம் .
3."சோதியி லாதி சொரூபமான தெப்படி சிங்கி? - அது
வேதமாம் முப்பொரு ளொன்றாய் முடிந்தது சிங்கா!"
அதுஎப்படி ஆதி சொரூபமானது சிங்கி?
பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருளும் ஒன்றாய்ச் சேர்ந்த ஆன்மாவைப் படைக்கும். ஆன்மா வேதமாம் அறிவை அடையும்.
4."முப்பொரு ளென்று நீமுன் சொன்ன தாரடி சிங்கி? - அவர
அப்பனு மாயிர மாதியாம் நாமடா சிங்கா!"
முப்பொருளென்று முன்னே சொன்னது யாரடி சிங்கி?
பதி,பசு,பாசம் கூடிய அப்பனும், ஆயியும் ஆயிரம் உயிருக்கு ஆதியாம் நாம் தானடா சிங்கா.
5."எப்படி யுலகில் இப்படி யுருவானோம் சிங்கி? - அது
அப்பன் தன் னட்புக்கு ஒப்பியதாலே சிங்கா!"
எப்படி உலகில் இப்படி உருவானோம் சிங்கி?
அப்பனும் ஆயியும் நட்பினால் இணைவவதற்கு ஒப்பியதாலே சிங்கா.
6."பராப ரத்தினிற் பஞ்சவ னமேது சிங்கி? - அது
வேராகித் தூரான விந்து நிறமடா சிங்கா!"
இந்த உலகினில் ஐந்து வர்ணம்எது சிங்கி?
அது வேராகி, தூரான, ஆதியான விந்துவின் நிறமடா சிங்கா.
7."ஒன்றுக்குள் ஐவர் உண்டான தெப்படி சிங்கி? - அது
ஒன்றோடே ஒன்றாக ஓடி இணைந்தது சிங்கா."
ஒரு உடலினுள் ஐம்பூதங்கள் உண்டானது எப்படி சிங்கி?
அவைகள் ஒன்றோடு ஒன்றாக ஓடி இணைந்ததால்தான் உருவாகிய ஒன்று உடலானது சிங்கா.
8."மூலக் குகைக்குள்ளே முச்சுடரே தடிசிங்கி? - அது
நாதத்தி லைம்பூதம் நன்பா யுதித்தது சிங்கா!"
ஐம்பூதங்களையும் அடக்கி விந்து நாதத்தில்ஏற்றினால் அதுதான் மூல(கபால)க் குகைக்குள்எரியும் சூரிய, சந்திர, அக்கினி கலைகளல்ஏற்படும் முச்சுடரே
9."மூலக்கிழங்கு முளைத்திடம் எவ்விடஞ் சிங்கி? - அது
நாதத்திலான நடுநிலையல்லவோ சிங்கா!"
மூலக் கிழங்கு (விந்து) முளைக்குமிடம் எங்கே சிங்கி?
அது விந்து நாதத்தின் நடு(ப்பகுதி) நிலை அல்லவோ சிங்கா. அதுவே கபாலத்தின் நடுப் பகுதி. ஐம்புலன்களிருந்தும் உள்புறமாகக் கோடுகள் வரைந்தால் அது உள்நாக்குப் பக்கத்தில் வெட்டும். அந்த இடம்தான் சிங்கா.
10."மூலக் குகையெனுங் கோட்டைக் கரசர் யார்சிங்கி? - அது
முப்பொருள் ஒன்றாய் முடிந்த நினவடா சிங்கா!"
கபாலக் குகையெனும் மூலக்குகைக்கு அரசர் யாரடி சிங்கி?
பதி, பசு, பாசம் ஆகிய மூன்று பொருட்களும் ஒன்றாய் இணைந்து முடிந்த "நினைவு" தான் அது சிங்கா.
Posted by ஞானவெட்டியான் at 9:17 PM 0 comments
Labels: குறவஞ்சி, ஞானம், ஞானவெட்டியான்
ஞானரத்தினக் குறவஞ்சி - காப்பு
ஞானரத்தினக் குறவஞ்சி
****************************
காப்பு
*******
பொன்னுலகு பொருந்துமனப்
பொருளறியத் தனமறிய
மின்னுலகில் மெய்ஞானம்
விளங்ககுற வஞ்சிதனை
உன்னாமற் றன்னினைவின்
உன்னி யுதிப் பொருநான் காய்த்
தன்னிறையைத் தன்னினை வாய்த்
தரிப்பதுவே காப்பாமே.
மனப்பொருள் அறிய மெய்ஞானம் விளங்கக் குறவஞ்சியின் நாமம்தனைத் தன் நினைவில் வைத்துத் தன் இறைவனைத் தன் நினைவாய்த் தரிசிப்பதுவே காப்பாம்.
Posted by ஞானவெட்டியான் at 9:10 PM 0 comments
Labels: குறவஞ்சி, ஞானம், ஞானவெட்டியான்
ஞானரத்தினக் குறவஞ்சி - முன்னுரை
பீரு முகமது ஞான ரத்தினக் குறவஞ்சி
******************************************
முன்னுரை
************
காலத்தால் மூத்த தமிழக சூபிக் கவிஞர் பீரு முகமது அப்பா. அப்பா என மரியாதையுடன் அழைக்கப்பட்டவர். சிறந்த இறைநேசச் செல்வர். திருக் குர் ஆனின் உன்னத புகழ் அனைத்தையும் தம் மெய்ஞானக் கவிதைகளின் வாயிலாக மக்களுக்குத் தந்தவர். யாரும் எளிதில் விளங்கிக் கொள்ளும் வண்ணம் பாடல்கள் எளிமையானவை.
பீர் என்பது இசுலாமிய சூபித்துவத்தில் ஆன்மிகக் குரு. முகமது என்பது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் நபிப் பெருமகனாரின் திருப்பெயர்.
திருநெல்வேலி மாவட்டம் தென்காசி வட்டம் கணிகபுரத்தில் சிறு மலுக்கர் என்னும் பெரியாரின் மைந்தனாக அவதரித்தார்.
"தென்காசி நாடு சிறுமலுக்க ரென்னுமவர்
தன்பால னிக்கதையைச் சாற்றினான்" (ஞானப் புகழ்ச்சி)
"சிறுமலுக்க ரீன்ற தவச் சிறப்ப்டைய பீர்முகம்மது" (ஞானக் குறம்)
அப்பா அவர்கள் பிறந்த ஆண்டு இன்னும் கணிக்க முடியாமலே இருக்கிறது. அவரின் படைப்புக்களை வைத்து அவர் கி.பி. பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் எனக் கூறலாம்.
இளமையிலேயே ஞானக் கருத்துக்களில் ஈடுபாடு உடையவராய் விளங்கிய அவர், தென்காசியைச் சேர்ந்தவராயிருப்பினும் தன் வாழ்நாளில் பெரும் பகுதியைக் கேரள மாநிலத்தின் கொச்சிப் பகுதியைச் சார்ந்த மலைப் பகுதிகளில்தான் வாழ்ந்தார். இதன்பின் யானை மலைக் காட்டுப் பகுதிகளில் தவம் இருந்தார். அப்போதுதான் சூபிக் கருத்துப் பெட்டகமாம் பல நூல்களை எழுதியதாகத் தெரிகிறது.
மெய்ஞானச் சர நூல், ஞான மலை வளம், ஞான ரத்தினக் குறவஞ்சி, ஞான மணி மாலை போன்றவைகளை எழுதியதாகத் தெரிகிறது.
அப்பா அவர்கள் நீண்ட காலம் தங்கியிருந்த கேரளத்தின் ஒரு இடத்திற்கு இன்னமும் பீர்மேடு (இடுக்கி மாவட்டம்) எனும் பெயர் நிலவுகிறது. இறுதியில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலைப் பகுதிக்கு வந்து சிலகாலம் இருந்து ஞானம் உபதேசித்தார்; பின்னர் இறுதி நாளும் தக்கலையிலேயே முடிந்தது.
Posted by ஞானவெட்டியான் at 9:05 PM 4 comments
Labels: குறவஞ்சி, ஞானம், ஞானவெட்டியான்
காயாம் பூ அரணங்கள்
காயாம் பூ அரணங்கள்
***************************
"ஆ என்று ஓலமிட்ட ஆனைக் கோன் வீடு பெற
அருளியதோ கவித் தலத்தில்
அலர் மங்கை தனை மணந்து ஆவி எனப் பத்தருக்கு
ஆனதுவோ கண்ண மங்கை
காயாத மகிழ மரம், கண் துஞ்சாப் புளிய மரம்
கரு ஊறாக் கிணறு, இன்றும்
காத்திருந்தும் தோலாத கடு வழக்கு, வழிப் போக்காய்க்
காட்டியதோ கண்ணன் கட்டில்
பாய் ஒருவர் நீள் படுக்க, பழகு இருவர் அருகு இருக்க
பட படத்து மூவர் நிற்க
பரந்தாமன் ஊடுருவப் பட்டு அறிந்த நெருக்கம் அதைப்
பாடுவதோ கோவ லூரில்
காயாம் பூ அரணங்கள் கை ஒற்றாம்; மீது ஒன்றைக்
காண ஒரு காலம் வருமோ?
காவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவிவரும்
கண்ணபுரச் செளரி ராசா!
கவித்தலம், கண்ணமங்கை, கண்ணங்குடி, கோவலூர் என்ற நாலைச் சொல்லி, ஐந்தாவது கண்ண அரணத்தை(கிருஷ்ணாரண்யம்) கண்ணபுரத்தில் தேடுகிறது இந்தப் பாடல். (விண்ணவச் சுடராழி ஆ.எதிராசன் எழுதிய "108 வைணவவ திவ்ய தேச வரலாறு" என்ற பொத்தத்தில் உள்ள விவரங்கள் இந்தப் பாடலுக்குப் பின்புலம்.)
கவித்தலம்:
தஞ்சையிலிருந்து குடந்தை செல்லும் சாலையில் உள்ளது கவித்தல். (வளந்து கிடத்தல். குடமூக்கைப்போல்(கும்பகோணம்) போல இங்கும் ஆறு வளைந்து கிடக்கிறது. ஆனைக்கோன் = யானை வேந்தன்(கய வேந்தன் = கஜேந்திரன்.) "ஆதி மூலமே" எனக் கூக்குரல் இட்டதும், கய வேந்தனுக்கும், அவன் காலைக் கவ்விய முதலைக்கும் வீடுபேறு அளித்த தலம். "ஆற்றங் கரை கிடக்கும் கண்ணன்" எனத் திருமழிசை ஆழ்வாரால் பாடப் பெற்றது.
கண்ணமங்கை:
திருச்சேறையிலிருந்து திருவாரூர் செல்லும் பாதையில் உள்ளது. பூதேவியை மணந்த இடமாகப் பல தலங்கள் சொல்லப்பெறும்; ஆனால் சீதேவியை மணந்த இடங்கள் எனச் சொல்லப்படுபவை சிலவையே. அவற்றுள் கண்ணமங்கையும் ஒன்று. இங்குள்ள இறைவர் பெரும் புறக் கடலன் என்று, நின்ற கோலத்தில் பத்தருக்கு ஆவி ஆனதால், பத்ராவிப் பெருமாள் என்றும் சொல்லப் படுகிறார். "கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன்" என்பது திருமங்கையாரின் வாக்கு.
கண்ணன்கட்டு:
இது திருக்கண்ணங்குடி. நாகை-திருவாரூர் வழியில் உள்ளது. வெண்ணைக் கண்ணனைக் கட்டிப்போட்டதால் குடியிருந்த தலம். மூலவரின் நாமம் உலகநாதன்.
கண் துஞ்சாப் புளி:
இது உறங்காப்புளி; நாகை புத்த விகாரையில் தங்கம் எடுத்துக்கொண்டு திரு அரங்கள் கிளம்பிய திருமங்கையார் கண்ணங்குடி வந்தார். நடந்த கால்கள் நோக, சாலை ஓரத்துச் சேற்று நிலத்தில் தங்கப் பொதியை மறைத்துவிட்டு, அருகே உள்ள புளியமரத்தின் அடியி படுத்துறங்க எண்ணீ,"நான் அயர்ந்ததும் நீ தூங்காது, விழித்துக் காவல் இருக்க வேண்டும்" என்று புளிய மரத்துக்கே ஆணையிட்டாராம்; உறங்காது பொற் குவையைக் காத்த புளியமரம் இன்று இல்லை; வயலும், சிறு மேடும் உள்ளன. அருகில் உள்ள சில புளிய மரங்கள் சற்று வேறுபட்டுக் காணப்படுகின்றன.
ஊறாக் கிணறு:
ஒரு நாள் தங்க இடம் கேட்ட திருமங்கயாழ்வார், தாக மேலீட்டால் தண்ணீர் கேட்க, அங்கிருந்த பெண்கள் நீர் தர மறுக்க, கோவத்தில், "ஊரில் உள்ள கிணறுகளில் நீர் ஊறாமல் போக" என்று திருமங்கையார் கடும் உரை சொல்ல, இங்கு இன்றுங் கூட எந்தக் கிணற்றிலும் நீர் ஊறுவது இல்லையாம். தவறி ஊறினாலும் இங்கு உப்பு நீரே கிடைக்கிறதாம்; ஒரே ஒரு புறனடையாய், கோயில் மடப்பள்ளிக் கிணற்றில் மட்டும் சற்று நன்னீர் உள்ளது.
காயா மகிழ்:
கடு உரைக்குப் பின், பசி மயக்கம் வந்து, மகிழ மரத்தின் அடியில் படுத்தவரை, யாரோ தட்டி எழுப்பி,"வழிப்போக்கரா, இந்தா உன் பசிக்கு உணவு" என்று கொடுக்க, அதை உண்டு, திருமங்கையார் உறங்கிப் போகிறார். திரும்ப எழும்போது, மனம் குளிர, உலகைக் கனிவோடு பார்த்து, உண்டி கொடுத்தோனுக்குப் பகரியாய்(பதிலாக), ஓய்வுக்கு உதவிய மகிழ மரம் என்றும் காயாது பசுமையாய் இருக்கும்படி இன்னுரை செய்கிறார். போகும் வழியில் பெருமாளே தலையாரியாய் வந்து இடைமறிக்க, தான் வழிப்போக்கன் என்பதால், தனக்கு வழிப்போக்கனாகவே சங்கும் சக்கரமும் தெரியக் கண்ணங்குடியான் காட்சி அளித்ததைக் கண்டு வியக்கிறார்.
திருக்கோவலூர்:
இது தென்பெண்ணைக் கரையில், நடுநாட்டில் உள்ள கண்ணன் தலம்; இங்கிருப்பது கண்ணன் கோயில்; இங்கிருக்கும் ஆறு கண்ண பெண்ணை (கருத்த ஆறு; இதே பெயர் ஆந்திரத்தில் உள்ள கிருட்டிணா ஆற்றிற்கும் உண்டு.) மூலவர் திருவிக்கிரமராய்க் காட்சி அளித்தாலும், ஊருலவரைக்(உற்சவர்) கோவலன் என்றுதான் அழைக்கிறார்கள். இந்த ஊர் வீட்டின் இடை கழியில் முதலாழ்வார் மூவர் பற்றிய நிகழ்ச்சி நடந்தது. ஒருவர் படுக்க, இருவர் இடைகழியில் இருக்க,மூவர் நிற்க, நால்வர் நெருக்க என்ற உன்னத நிகழ்ச்சி விண்ணவக் கதைகளில் பெருத்த முகன்மை பெற்றது. "வையம் தகளியாய்" என்று பொய்கையாரும், "அன்பே தகளியாய்" என்று பூதத்தாரும், "திருக்கண்டேன், பொன்மேனி கண்டேன்" என்று பேயாரும் பாடிய பெருந் தலம் இது. ஆக, நாலாயிரப் பனுவலின்(பிரபந்தம்) முதல் எழுச்சி, இந்த ஊரில்தான் நடந்தது.
காயாம் பூ அரணங்கள் = காயாம் பூக் காடுகள்
கை ஒற்று = கையை ஒத்தது; எனவே ஐந்து எனப் பொருள் வரும்.
Posted by ஞானவெட்டியான் at 8:11 PM 0 comments
Labels: ஞானவெட்டியான், மாலியம்
கதம் எட்டும் ஓர் இடத்தில்
கதம் எட்டும் ஓர் இடத்தில்
*******************************
ஆற்று ஓரம் பொன்னி மடி, அரங்கினிலே சாய்ந்தபடி
அறி துயிலில் பள்ளி கொண்டும்(a)
அலங்கார கோலத்தில் எழு மலையைத் தாண்டி ஒரு
ஆட்சி நிலை உள்ளிக் கொண்டும்(b)
வீற்று ஓங்கும் கேழலாய்(c) வெம் புவியை மருப்பு(d) ஏற்றும்
விளையாட்டில் முகிழ்த்திக் கொண்டும்(e)
விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் நடங் காட்ட விழைந்த படி
வெளுந் தோய மலையைக் கொண்டும்(f)
ஆற்று ஆடும் சாலகத்தும்(g), அலக நதை நேமிக் கா(டு)(h)
அருள் இலந்தப் புரத்தி லேயும்(i)
அம்பு நிறைப் புழைக் கரத்தும்(j) தான்தோன்றி(k)த் திருமேனி
அழகுறவே வெளித்து நிற்க
கால் தாழச் சேர்ந்தார்க்கு கதம் எட்டும்(l) ஓர் இடத்தில்(m)
காண ஒரு காலம் வருமோ?
காவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவிவரும்
கண்ணபுரச் செளரி ராசா!
"நாராயணாய நமக" என்ற எட்டெழுத்து மந்திரத்தைச் சிறப்பிட்டுக் குறிப்பிடும் எட்டுத் திருத்தலங்களை இப்பாடல் பேசுகிறது.
(a) திருவரங்கம்
(b) திருவேங்கடம்
(c) கேழல் = வராகம்(அவதாரம்), காட்டுப் பன்றி
(d) மருப்பு = கொம்பு, தந்தம்
(e) திருமுகிழ்நம் > திருமுகிணம் > திருமுசிணம் > ஸ்ரீ முஷ்ணம்;
முகிழ்த்தது = தோன்றியது; பூவராகர் எனப் பெயர்கொண்ட மூலவர் திருமேனி மிகச் சிறியதாய் முகிழ்த்தது இந்தத் தலத்தின் சிறப்பு.
(f) திரு தோய் மலை = திருநீர்மலை; தோய் = பால், நீர்; திருத்தோய் மலையில் நின்ற, இருந்த, கிடந்த கோலங்களோடு, நடந்த கோலத்தையும் காட்டியதாய்ச் சொல்லுவது விண்ணவர் மரபு. தோயத்து அத்தி = தோய்த்தாத்தி > தோத்தாத்தி > தோத்தாத்ரி. அத்தி = மலை; தென்பாண்டி நாட்டில் உள்ள வானமாமலை என்னும் சீவரமங்கை தான் தோத்தாத்ரி என்பாரும் உண்டு; அங்குமே தாந்தோன்றித் திருமேனி உண்டு. தோத்தாத்ரி இதுவா, அதுவா என்ற குழப்பம் பலருக்கு உண்டு.
(g) திருச் சாலக் கம்மம் = பனிமலையிலிருந்து வழிந்தோடும் கண்டகி நதிக்கரையில் சால மரங்கள் நிறைந்த கம்மம் சாலக்கம்மம்.
இது சாலக்கமம் > சாலக்கிராமம் > சாளக்கிராமம் என்று திரியும்;
யால மரமே சால மரம் என்றும், ஆச்சா மரம் என்றும் இக்காலத்தில் சொல்லப்படுகிறது. இதுபோகச் சாலக்கமம் என்பது கண்டகி ஆற்றில் கிடைக்கும் ஒருவிதக் கருஞ்சாயக் கல்லையும் குறிக்கும். It is a black stone containing a fossil ammonite.
(h) திரு நேமிக் காடு; நேமி = சக்கரம், வளையம்;
நும்முதல் > நுமுதல் > நமுதல் > நமுகுதல் = குழைதல், வளைதல்;
நமுக = வணங்குக; "நாராயண நமக" என்றால் "நாராயணனை வணங்குக" என்றே பொருள்; நமுக/நமக என்ற சொல்லை நாமம் என்ற பெயர்ப் பொருளாய்ப் பலரும் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள்.
நமுதல் > நெமுதல் > நேமி; காடு > அரணம் > ஆரணம்; வடமொழியில் இது நைமிச ஆரண்யம் என்று ஆகும்; இது அலக ந(ந்)தை ஆற்றின் கரையில் உள்ளது.
(i) திரு இலந்தைப் புரம்; இலந்தை = பத்ரி என்னும் பத்ரிநாத்; பட்டை = இலை, ஓலைப் பட்டை;
பட்டம் > பத்தம் > பத்ரம்;
அலக நந்தையும் தோலி கங்கையும் புணரும் இடத்தில், அலக நந்தைக் கரையில் உள்ளது திரு இலந்தைப் புரம்; இதைத் திரு அதரி எனச் சொல்லுவதும் உண்டு. இருந்த கோலத்தில் இறைவன் ஆசானாய் அருள் புரியும் தலம்.
(j) திருப் புழைக் கரம் = புஷ்கரம்; அம்பு = நீர்; இந்தத் தலம் எங்கு உள்ளது என இதுவரை நான் அறிந்தேனில்லை. ஆனால் விண்ணவ மரபு இப்படி ஓர் இடத்தைச் சொல்கிறது. அறிந்தவர்கள்தான் விளக்க வேண்டும்.
(k) தானே தோன்றுதல் = இங்கே இந்தத் திருமேனிகள் சொயம்புவாக (சுயம்புவாக), சொந்தாகக் கிடைத்ததாக ஐதீகம்;
தானே தோன்றியவை = ஸ்வயம் வ்யக்த ஸ்தலம்;
வியத்தல் > வியி > விழி;
சொந்தாய் வெளித்த தலம் = தானே வெளிப்பட்ட தலம்.
(l) கதம் எட்டு = எட்டுக் கதங்கள் = எட்டு ஓசைகள்; மாலோனைக் குறிப்பிடும் எட்டெழுத்து மந்திரம். ஒவ்வோர் எழுத்தும் ஒரு திருமேனியாய் எட்டு இடத்தில் எழுந்ததாம்.
(m) எட்டுத் தாந்தோன்றித் திருமேனிகளையும் ஓரிடத்தில் சேவிக்க வேண்டுமெனில் கண்ணபுரம் போனால் போதும் என்பது விண்ணெறியாளரின் நம்பிக்கை.
Posted by ஞானவெட்டியான் at 8:09 PM 0 comments
Labels: ஞானவெட்டியான், மாலியம்
தாள் எறியால் நெற்றி வடு
6. தாள் எறியால் நெற்றி வடு
*******************************
மதில் ஏழு; பெரு வாயில்; மால் மேகன் கீழ் வீடு (1)
மா அரங்கம் போல் இருக்கும்;
மண்டாடும் பேரழகைத் துண்டாட, வள நாடன் (2)
மதில் ஆறு போக்கச் சொன்னான்
சிதை கல்லைக் கொத்தாகச் சேர்த்து எடுத்து, மறு கோயில்
செய்குவதே நோக்க மாக
சென்னி(3) மகன் செயல் ஒறுத்து, சேவடியார் சினம் ஓங்க,
செழுங் கோயில் அரையர்(4) வந்து
"எதிரிகளப் பொரு உலைக்க, அதிர் எறியும் ஆழிக்கை
எங்கள் முனம் பொய்யா ன..தோ?"(5)
என்று எறிந்த தாளத்தால்(6), நெற்றி வடு பட்டு விட
எகிறியதே திகிரி(7)! மன்னன்
கதி அலைத்த பேராளன், காரழகுத் திருமேனி
காண ஒரு காலம் வர்மோ?
காவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவிவரும்
கண்ணபுரச் செளரி ராசா!
சோழன் ஒருவன் கோயிலின் ஆறு மதில்களை உடைத்தது கண்டு பொங்கி எழுந்து, ஒரு பத்தர், "நீ எப்படி பொறுத்துக் கொண்டு இருந்தாய்?" என்று கேள்வி கேடடுப் பெருமாள் மீதே தாளத்தை எறிய, அதனால் பெருமாளுக்கு நெற்றியில் வடு ஏற்பட்டு, பின் பத்தரின் வேண்டுகோளுக்கு இணங்க, தன் திகிரியை எறிந்து சோழனைத் தொலைத்த கதை, இந்தப் பாடலில் பேசப்படுகிறது.
1. கீழ்வீடு - 108 விண்ணவத் திருப்பதிகளில் கண்ணபுரம் மட்டுமே கீழ்வீடு என்று அழைக்கப்படும். அது முன்னே 7 மதில்களோடு திருவரங்கம் போல இருக்குமாம். இங்குள்ள மூலவர் பெயர் நீலமேகன் - மால்மேகன்
2. வளநாடன் - சோழன்
3. சென்னி - பூம்புகார்ப் பக்கம் ஆண்ட சோழ மரபினர்.(உறையூர்ப் பக்கம் ஆண்ட சோழன் கிள்ளி வமிசம்)
4. அரையர் - திருப் பணி செய்யும் அன்பர் (திருவரங்கத்தில் அரையர் சேவை உண்டு)
5. "பொருவரை முன் போர் தொலைத்த பொன்னாழி மற்றொரு கை பொய்த்ததோ?" என்று கேட்டதாக ஐதீகம்.
6. தாளம் - கைத்தாளம்
7. திகிரி - சக்கரம்.
Posted by ஞானவெட்டியான் at 8:05 PM 0 comments
Labels: ஞானவெட்டியான், மாலியம்
அயிரை மேட்டில் ஓரிரவ
5.அயிரை மேட்டில் ஓரிரவு
******************************
வரையாத அழகோடு, வடிவான உருவோடு,
வலையரின் பத்து மினியாள்;
வளையாத வில்லையும், வகிடாத வாளையும்,
பழிக்கின்ற பருவ எழிலாள்;
புரையாத திருமகளின் தோற்றரவில் முன் ஒரு நாள்
புலம் காட்டி நின்ற போது,
புல்லியே வதுவையுறப் போனதை இன்று அளவும்
புவனத்தில் யாரும் அறிய,
நுரையோடு திரை ஓங்கும் திரு மலையின் பட்டினத்தில்
நுழையோரின் மருக னாக,
நுண் அயிரை மேட்டிலே இரவெலாம் கழிப்பதை,
நோக்கு நாள் எந்த நாளோ?
கரையோடு ஊர் உலவும் காரழகுத் திருமேனி
கண ஒரு காலம் வருமோ?
காவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவிவரும்
கண்ணபுரச் செளரி ராசா!
புரைதல் - ஒப்புதல், பொருந்துதல்;
புரையாத திருமகள் - ஒப்பு இல்லாத, தனக்கு நேர் இல்லாத திருமகள்;
கரையோடு ஊருலவும் திரு மேனி - கண்ணபுரத்தில் இருந்து காவிரிக் கரையோரம் போய் பின் கடற்கரை ஓரத்தில் ஊருலாவும் பெருமாள்.
இரண்டாவது பாடல் பத்மினி நாச்சியார் என்னும் செம்படவ நாச்சியார் பற்றிப் பேசுகிறது. கண்ணபுரத்திற்கு 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருமலை ராயன் பட்டினத்தில் மீனவத் தலைவன் மகளாக திருமகளே வந்து பிறந்ததாய் ஒரு தொன்மம்(ப்ழைய கதை) உண்டு. இந்தத் தோற்றரவில்(அவதாரத்தில்), தாயாரின் பெயர் பத்மினி. பெருமாள், பத்மினி நாச்சியாரைக் கப்பிடிக்கும் விழா, கண்ணபுரத் திருவிழாவின் ஒரு நிகழ்வாய் நடக்கிறது. மீனவனாய் மாற்றிச் சரம்(கைலி) கட்டி, பெருமாளின் ஊருலவுத் திருமேனி(உற்சவ மூர்த்தி) திருமலை ராயன் பட்டினம் போய்ச் சேரும். அங்கே, கடற்கரை மேட்டில், திருமாலை இருத்தி, மீனவர்கள் சுற்றி வந்து, கும்மாளம் போட்டு, இரவு முழுக்க தங்கள் மாப்பிள்ளையோடு கூத்தாடிக் கோலாகலமாக இருப்பது வழக்கம். இப்படி,"எங்கள் மாப்பிள்ளை" என்று ஊரே மெய் சிலிர்த்துப் போவது சிலகாலம் வரை இருந்திருக்கின்றது.
பூதேவி சீதையாகவும் ஆண்டாளாகவும் பிறந்த தோற்றரவுகள்.. பலரும் அறிந்தது போல் சீதேவியின் தோற்றரவுகள் பலராலும் அறியப்படவில்லை.
Posted by ஞானவெட்டியான் at 8:01 PM 0 comments
Labels: ஞானவெட்டியான், மாலியம்
பட்டனுக்குச் செளரி காட்டல்
4.பட்டனுக்குச் செளரி காட்டல்
எனதருமை நண்பர் திரு.இராமகி அவர்கள் வெளியிட்ட இந்நூல் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்."
அவரிடம் அனுமதி பெற்றுவிடுவோமெனும் நம்பிக்கையில், இவ்வாங்கில ஆண்டு முதல்நாளில் என் வலைப்பூவில் வலையேற்றுகிறேன்.
"போற்றுவோர் போற்றல் மட்டும் போகட்டும் இராமகி அவர்கட்கே."
4.பட்டனுக்குச் செளரி காட்டல்
********************************
"பண்டு ஒரு நாள் மூலவருக்குச் சாத்துகின்ற மொய்ந் தொடையில்
படிந்திருந்த முடியைக் காட்டி,
பார்த்தவர்கள் பதறி எழ, பாராளும் பேரரசன்
பட்டனிடம் கேட்டு நிற்க,
செண்டோடும், திகிரியொடும், செறி முழங்கு சங்கமொடும்,
செழுந் தேவி நால்வ ரோடும்,
சீராளும் விண்ணவனின் செளரியிலே வீழ்ந்தது எனச்
செப்பியதை உண்மை யாக்கி,
வண்டு மிகு வாசம் வரும் கொண்டை மலர்த் தாசியிடம்
மாலையினை அழகு பார்த்த
வழுவாத புரிசையினில் நழுவாத பட்டனுக்காய்,
வரி தவழச் செளரி காட்டும்,
கண்டவரும் விண்ட ஒணாக் காரழகுத் திருமேனி
காண ஒரு காலம் வருமோ?
காவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவிவரும்
கண்ணபுரச் செளரி ராசா!
முதல் பாடலில் உள்ளது தல வரலாறு. கணிகையின் தொடர்பில் சிக்கிய சீர்தரப்(ஸ்ரீதர) பட்டர், பெருமாளுக்கு என இருந்த மாலையையை கணிகைக்கு அணிவித்து அழகு பார்த்துப் பின் பெருமாளுக்கு இடுகிறார். இந்த வழக்கம் நெடுநாள் தொடர்கிறது. காய்ந்து போன மாலையிலொன்றிரண்டு முடியிழைகள் இருப்பதைப் பல நாட்கள் பார்த்து, "ஏதோ ஒன்று தவறாக நடந்துகொண்டு இருக்கிறது" என்று மற்றவர்கள் பதறி மன்னனிடம் சொல்ல, அவன் பட்டரிடம் வினவ,"பெருமாள் தன்னைக் காப்பாற்றுவார்" என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் ஒரு நாளும் தான் செய்கிற புரிசையில் தவறாத பட்டர் "அந்த முடியிழை பெருமாளுடைய செளரியில் இருந்துதான் வந்தது" என்று அடித்துச் சொல்ல, பக்தன் சொல்லியதை மெய்ப்பிப்பதுபோல், செளரி கொண்டு பெருமாள் காட்சியளித்துக் காத்ததாகத் தல வரலாறு கூறுகிறது.
இந்தக் கதை ஆண்டாளையும், அபிராமிப் பட்டரையும் கலந்தாற்போல் நமக்குத் தோற்றம் அளித்தாலும், இதைத்தான் நான் கண்ணபுரத்தில் கேட்டேன். இங்குள்ள பெருமாளின் அழகு கொள்ளை கொண்டுவிடும் கரிய அழகு. எனவே காரழகுத் திருமேனி. மூலவரின் பெயர் நீலமேகர். தாயார் பெயர் கண்ணபுர நாயகி. சீதேவி, பூதேவி போக, பத்மினி, ஆண்டாள் என்னும் அவர்களுடைய தோற்றரவுகள்(அவதாரங்கள்) ஆக தேவியர் நால்வர். ஊருலவரோடு(உற்சவருக்கு) நாலு நாச்சியார்களையும் அருகே வைத்துத்தான் திருமஞ்சனம் செய்வார்கள்.
Posted by ஞானவெட்டியான் at 8:00 PM 0 comments
Labels: ஞானவெட்டியான், மாலியம்
மாலியமும் வேதங்களும்
3.மாலியமும் வேதங்களும்
வேத சாத்திரங்களை அடிப்படையாய்க்கொண்ட இந்து தருமம்தான் சனாதன தருமம். சனாதன தருமம் எனில் "என்றும் உள்ள வழி. தொடக்கமின்றித் தொடரும் கொள்கை." வாழும் வழிமுறைகளைத் தன்னிடத்தே கொண்ட, தனி மனிதனால் ஆரம்பிக்கப்படாத ஒன்று.வேதம் என்பது ஸ்ரீநாரயணனால், தன் மகனான பிரம்மாவைத் தன் தொப்பூழ் கொடியில் படைத்து, அவருக்கு உபதேசித்ததேயாம். என்ன உபதேசிக்கப்பட்டது? இப்பிரபஞ்சம் எந்த அடிப்படை விதிமுறைகளுடன் இருக்கவேண்டும் என்னும் ஞானமே வேதம். இதை எட்டு கால்களையுடைய அன்னப்பறவையின் உருவில் வந்து உபதேசித்தார். அன்னமே ஹம்ஸம்.
ஐம்பூதங்கள்,அகங்காரம்,மகத்,பிரகிருதி ஆகிய எட்டுமே அன்னத்தின் கால்களாம்.
Posted by ஞானவெட்டியான் at 7:58 PM 0 comments
Labels: ஞானவெட்டியான், மாலியம்
மாலியம்-மெய்ப்பொருட்கள் 3
மாலியத்தார் அனைவரும் அறிய வேண்டிய
3 மெய்ப்பொருட்கள்.
**************************************************
1.தத்துவம்.
2.ஹிதம்
3.புருஷார்த்தம்.
1.தத்துவம் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன:
(அ)சித்து - அறிவுடையன - சேதனம்
(ஆ)அசித்து - அறிவற்றன - அசேதனம்
(இ)ஈசுவரன்.
பரம்பொருளாம் ஈசுவரன், சித்து, அசித்து ஆகியனவற்றைத் தம் அங்கங்களாய்க் கொண்டு, முத்தொழில்களாம் ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகியவற்றை செய்து பிரபஞ்சத்தை இயக்குகிறான்.
2.ஹிதம் - சீவான்மா தன் மாயாபந்தங்களை அகற்றிப் பரமாத்மாவை அடையும் நெறி. அதுவே "சரணாகதி" நெறி. இதைப் பிரபத்தி என்பர். கீதா உபதேசமும் இதே.
3.புருஷார்த்தம் - சீவான்மா, ஸ்ரீவைகுண்டத்தில் வதியும் பரமனை எப்படி நெருங்கி இறையனுபவம் பெறுகிறது என்பதைக் காட்டுவது.
Posted by ஞானவெட்டியான் at 7:56 PM 0 comments
Labels: ஞானவெட்டியான், மாலியம்
மாலியம் - முகவுரை
மாலியம் - முகவுரை

"நின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான்
தன்னையே தான்வேண்டும் செல்வம்போல் மாயத்தால்
மின்னையேசேர் திகிரி வித்துவக் கோட்டு அம்மா!
நின்னையே தான்வேண்டி நிற்பன் அடியனே."
Posted by ஞானவெட்டியான் at 7:53 PM 0 comments
Labels: ஞானவெட்டியான், மாலியம்
கந்தர் கலிவெண்பா - 5
5. கருவின்றி நின்ற கருவா யருளே
உருவின்றி நின்ற உருவாய்த் - திரிகரணம்
ஆகவர் மிச்சை யறிவியற்றலா லிலய
போக வதிகாரப் பொருளாகி - யேகத்
திரிகரணம் = மனம், வாக்கு, காயம்(உடல்)
ஆகவரும் = போல் அமைந்த
இச்சை = விருப்பம்
அறிவு = ஞானம்
இயற்றல் = செயல்
இலயம் = ஒடுக்கம்
போகம் = பாதுகாப்புத் தொடக்கம்
அதிகாரம் = விரிவு
ஏகத்து = ஒன்றாய்
தனக்கு ஒரு முதல் காரணம்(கருவாகிய வித்து) இல்லாமல், தானே முதற் காரணமாகச் சார்ந்து நிற்பவனே! மாயா உருவம் இல்லமல், அருளே திருமேனியாக உடையவனே! மூன்று கருவிகளாகிய விருப்பம், அறிவு, செயல் என்ற மூன்றினால், எல்லாவற்றையும் ஒடுக்கும் பொருளாகியும், பாதுகாக்கும் பொருளாகியும், உண்டாகும் பொருளாகியும் நிற்பவனே!
Posted by ஞானவெட்டியான் at 7:50 PM 0 comments
Labels: கந்தர் கலிவெண்பா, செளமாரம், ஞானவெட்டியான்
கந்தர் கலிவெண்பா - 4
4.பூரணமாய் நித்தமாய்ப் போக்குவரவும் புணர்வுங்
காரணமு மில்லாக் கதியாகித் - தாரணியில்
இந்திரசா லம்புரிவோன் யாவரையுந் தான்மயக்குந்
தந்திரத்திற் சாராது சார்வதுபோன் - முந்துங்
போக்குவரவு = இறப்பு, பிறப்பு
புணர்வு = பற்றுடைய சம்பந்தம்
காரணம் = தனக்கொரு மூலம்
தாரணி = உலகு
இந்திரசாலம் = செப்படி வித்தை, ஜாலவித்தை
தந்திரம் = வழி, உபாயம்
குறைவு இல்லாத பூரணமான பொருளே!
"பூரணம் என்பது உட்பொருளுக்கு உட்பொருளாம்."
(உலகில் உள்ள பொருட்கள் போல்) மாற்றம் இல்லாததாய், போதல், வருதல், சேர்தல் , பிரிதல் இல்லாத ஆதாரப் பொருளே!. இவ்வுலகில் இந்திரஜால வித்தை செய்பவன், எல்லோரையும் மயக்குகின்ற தந்திரத்திலே தான் மயங்காது, அதன் சார்பாய் நின்று தொழில் செய்வது போல, தனக்கு ஒரு முதற்காரணம் இல்லாமல், தானே முதற்காரணமாகச் சார்ந்து நிற்பவனே!
Posted by ஞானவெட்டியான் at 7:49 PM 0 comments
Labels: கந்தர் கலிவெண்பா, செளமாரம், ஞானவெட்டியான்
கந்தர் கலிவெண்பா - 3
3. அனாதியா யைந்தொழிற்கு மப்புறமா யன்றோ
மனாதிகளுக் கெட்டா வடிவாய்த் தனா தருளின்
பஞ்சவித ரூப பரசுகமாய் எவ்வுயிர்க்குந்
தஞ்சமென நிற்குந் தனிப்பொருளாய் - எஞ்சாத
அநா(னா)தியாய் = ஆதி, அந்தம் இல்லாததாய்
ஐந்தொழில் = படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்
அன்றே = ஆதியிலேயே
மனாதி = மனம் முதலிய அகக் கருவிகள்
தனாது = தன்னுடைய
பஞ்சவித ரூபம் = அயன், அரி, அரன், மகேசன், சதாசிவன்
தஞ்சம் = ஆதாரம்
தனி = ஒப்பற்ற பொருள்
எஞ்சாத = குறையாத
அறிவினாலே எப்போது தோன்றினாய் என்று அறிய முடியாதவனே! ஐந்தொழில்களுக்கும் அப்பாற்பட்டவனே! ஆதியிலேயே, மனம், புத்தி, அகங்காரம் எனும் மூன்றிற்கும் எட்டாத திருவடிவு உடையவனே! உயிர்களின்மீது வைத்த தனது கருணையினாலேயே, பிரம்மா, மால், உருத்திரன், மகேசன், சதாசிவன் என்னும் ஐந்துவகை வடிவங்கொண்ட மேலான பேரின்பம் உடையவனே!எல்லா உயிர்களுக்கும் அடைக்கலமாய் நிற்கும் ஒப்பற்ற பரம்பொருளே! குறையாத .....
Posted by ஞானவெட்டியான் at 7:47 PM 0 comments
Labels: கந்தர் கலிவெண்பா, செளமாரம், ஞானவெட்டியான்
கந்தர் கலிவெண்பா - 2
2.அந்தங் கடந்தநித் தியானந்த போதமாய்ப்
பந்தந் தணந்த பரஞ்சுடராய் - வந்த
குறியுங் குணமுமொரு கோலமுமற் றெங்குஞ்
செறியும் பரம சிவமாய் - அறிவுக்(கு)
நித்தியானந்தம் = நித்திய (நிலைத்த) ஆனந்தம்
பந்தம் = (வினைப்) பாசம்
தணந்த = இயல்பாக நீங்கிய
குறி = பெயர்
கோலம் = வடிவு, அழகு, உருவம்
அற்று = இல்லாது
அறிவுக்கு = உயிரின் அறிவுக்கு
முதல், நடு, முடிவு ஆகியவை இல்லாத, என்றும் நிலைத்த இன்ப அறிவுடையவனே! கட்டுப்பாடு இல்லாத மேலான ஒளி மயமானவனே! அன்பருக்கு அருள் புரிய வந்த, பெயரும், குணங்களும், உருவுமில்லாமல், எங்கும் பரம சிவமாய் (சீவனாய்) நிறைந்திருக்கும் மேலான மங்கலப் பொருளே!
Posted by ஞானவெட்டியான் at 7:45 PM 0 comments
Labels: கந்தர் கலிவெண்பா, செளமாரம்
கந்தர் கலிவெண்பா - 1
1.பூமேவு செங்கமலப் புத்தேளுந் தேறரிய
பாமேவு தெய்வப் பழமறையும் - தேமேவு
நாதமும் நாதாந்த முடிவு நவைதீர்ந்த
போதமுங் காணாத போதமாய் - ஆதிநடு
பூமேவு செங்கமலம் என்பதை, செங்கமலப் பூமேவும் எனக் கொள்க.
புத்தேள் = இறைவன், தெய்வம்.
தேறு = தெளிதல்
அரிய = இயலாத, முடியாத
பாமேவு = செய்யுள்(பாட்டு) நடையில் பொருந்திய
பழமறை = பண்டைத் தமிழ் வேதம்
தே = சிவம்
நாதமும் = நாத தத்துவமும்
நாதாந்தம் = சிவதத்துவம்
முடிவு = தத்துவ ஞான எல்லை
நவை = குற்றம்
போதம் = உயிரறிவு
செந்தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும், ஆராய்ந்து அறிய முடியாத தெய்வத்தன்மை உடைய பாடல்கள் பொருந்திய பழமையான தமிழ் வேதமும் , சிவம் நிலைபெற்ற நாத தத்துவமும், அந்தத் தத்துவத்தின் முடிவாய் உள்ள அறிவும், குற்றமற்ற (உயிர்களின்) அறிவும், காணமுடியாத பேரறிவாய் நிற்கும் (பெருமானே!)
Posted by ஞானவெட்டியான் at 7:42 PM 0 comments
Labels: கந்தர் கலிவெண்பா, செளமாரம்
கந்தர் கலிவெண்பா - முன்னுரை
*********************
முன்னுரை
************
சற்றேறத்தாழ முன்னூறு ஆண்டுகளுக்கு முன் நடந்தது. தன் ஐந்தாம் வயதுவரை ஊமையாய் இருந்த குமரகுருபர சுவாமிகள், திருச்செந்தூர் முருகப் பெருமானின் கருணையால் ஊமைத்தன்மை நீங்கப்பெற்று பாடப்பட்டது.
இதனுள் சைவ சிந்தாந்தக் கருத்துக்களின் சுருக்கமும், ஆறுமுகனின் திருவடிச் சிறப்பும், கந்த புராணக் கதைக் கருத்தும் பொதிந்துள்ளன.
Posted by ஞானவெட்டியான் at 7:38 PM 0 comments
Labels: கந்தர் கலிவெண்பா, செளமாரம்
தனித் தமிழில் உரையாட
தனித் தமிழில் உரையாடத்
*******************************
தவிர்க்கவேண்டிய சொற்கள்
*********************************
| உத்தியோகம் | *** | அலுவல் |
| உற்சாகம் | *** | ஊக்கம் |
| உற்சவங்கள் | *** | திருவிழாக்கள், விழாக்கள் |
| உற்சவம் | *** | திருவிழா |
| ஒஸ்தி | *** | உசத்தி |
| காஷாயம் | *** | காவி |
| கார்த்திகை | *** | ஆரல், அறுமீன் |
| காவியம் | *** | தொடர்நிலைச் செய்யுள், வனப்பு |
| காரியஸ்தர் | *** | கருமத் தலைவர் |
| கலெக்டர் | *** | தண்டுவார் |
| கஷாயம் | *** | கருக்கு |
| கவுன் | *** | மெய்ப்பை |
| கர்வம் | *** | செருக்கு |
| கர்ப்பகிரகம் | *** | கருவரை, உண்ணாழிகை |
| கிராமம் | *** | சிற்றூர், பட்டி |
| கிரகம் | *** | கோள் |
| கிரீடம் | *** | முடி |
| கிருபை | *** | அருள், இரக்கம் |
| கிருகபிரப்வேசம் | *** | புதுமனை புகுதல், புதுவீடு புகல் |
| கிருஷிகம் | *** | உழவு |
| கிஸ்தி | *** | பகுதி |
| கீதவாத்யநிருத்தம் | *** | கொட்டாட்டுப் பாட்டு |
| கஜேந்திர மோக்ஷம் | *** | வேழவேந்த வீடு |
| கஷ்டம் | *** | வருத்தம் |
| கவி | *** | பா,செய்யுள் |
| கபிலை | *** | குரால் |
| கரகோஷம் | *** | கைதட்டல் |
| கவசம் | *** | அந்தளகம் |
| கனகசபை | *** | பொன்னம்பலம் |
| கஜானா | *** | கருவூலம் |
| கங்கண விஸர்ஜனம் | *** | சிலம்பு கழி நோன்பு |
| கங்கணம் | *** | வளையல், காப்பு |
| கச்சேரி | *** | மன்றம், அரங்கு |
| கருணை | *** | அருள் |
| கருடன் | *** | கழுலன் |
| கஸ்தூரி | *** | காசறை |
| நாஸம் | *** | அழிவு |
| நாதம் | *** | ஒலி |
| நாமம் | *** | பெயர் |
| நாட்டக | *** | நாடகம் |
| நாடி | *** | நாழி |
| நானா | *** | நாலா |
| நிர்வாக அதிகாரி | *** | செயல் அலுவலர், ஆள்வினைஞர் |
| நிர்வாக அதிகாரி | *** | கருமத்தலைவர் |
| நியாயம் | *** | நயன், முறை |
| நியதி | *** | யாப்புறவு |
| நியமி | *** | அமர்த்து |
| நிபந்தனை | *** | அக்குத்து |
| நிஜம் | *** | மெய் |
| நிச்சயம் | *** | தேற்றம் |
| நித்திரை | *** | தூக்கம் |
| நித்ய | *** | நித்தம் |
| நீதி | *** | நயன், முறை |
| நக்ஷத்திரம் | *** | வெள்ளி, நாண்மீன் |
| நஷ்டம் | *** | இழப்பு |
| நடராஜர் | *** | நடவரசு,ஆடலரசு,அம்பலவாணன் |
| நதி | *** | ஆறு |
| நவராத்திரி | *** | தொள்ளிரவு |
| நமஸ்காரம் | *** | வணக்கம் |
| ஸ்ரீவைஷ்ணவ ஏகாதசி | *** | திருமாலியப் பதினொரமை |
| ஸ்ரீதேவசேனா | *** | திருத்தெய்வயானை |
| ஸ்ரீதனம் | *** | சிறுதனம் |
| ஸ்ரீமத் | *** | திருமான் |
| ஸ்ரீஜயந்தி | *** | பிறப்புத் திருநாள் |
| ஷஷ்டி | *** | அறமி |
| எஜமான் | *** | ஆண்டை |
| அர்ச்சனை | *** | தொழுகை,வழிபாடு |
| அர்ச்சகன் | *** | உவச்சன், வழிபாட்டாசான் |
| அர்த்தநாரீஸ்வரர் | *** | மாதொருபாகன் |
| அர்த்தம் | *** | பொருள் |
| அநேக | *** | பல |
| அக்ஷ | *** | அச்சு |
| அக்ஷயன், அச்சுதன் | *** | கேடிலி |
| அஷ்டோத்ரம் | *** | நூற்றெட்டு |
| அதிர்ஷ்டம் | *** | பொங்கு |
| அமாவாஸ்யை | *** | காருவா |
| அபாயம் | *** | ஏதம் |
| அபூர்வம் | *** | அரிது,அருமை |
| அபி§க்ஷகம் | *** | திருமுழுக்கு |
| அபிவிர்த்தி | *** | மிகுவளர்ச்சி |
| அமவாசை | *** | காருவா |
| அபராதம் | *** | குற்றம்,தண்டம் |
| அவயவம், அங்கம் | *** | உறுப்பு |
| அவசியம் | *** | வேண்டியது, தேவை |
| அவசரம் | *** | விரைவு,பரபரப்பு |
| அனாவசியம் | *** | வேண்டாதது |
| அக்கினி நட்சத்திரம் | *** | கத்தரி, எரிநாள் |
| அங்கவஸ்திரம் | *** | மேலாடை |
| அங்ஙண | *** | அங்கணம் |
| அச்சாரம் | *** | உளவாடம் |
| அத்தியாவசியம் | *** | இன்றியமையாமை |
| அந்தரங்கம் | *** | மறைமுகம் |
| அந்தம் | *** | முடிவு |
| அப்பியாசம் | *** | பயிற்ச்சி |
| அப்பியங்கன ஸ்நானம் | *** | தலைமுழுக்கு |
| அசங்கியம் | *** | அருவருப்பு |
| அப்பு | *** | நீர் |
| அஸ்திவாரம், அஸ்திபாரம் | *** | அடிப்படை |
| அனுஷ்டி | *** | கைக்கொள் |
| அனுபவி | *** | நுகர் |
| அற்புதம் | *** | புதுமை, இறும்பூது |
| அன்னாபிஷேகம் | *** | சோற்றுத் திருமுழுக்கு |
| அன்னியம் | *** | அயல் |
| அன்னவஸ்திரம் | *** | ஊணுடை |
| அன்னம் | *** | உண்டி, எகினம், ஓதிமம் |
| ஞாபகம் | *** | நினைவு, ஞாவகம், நினைப்பு |
| ஞானம் | *** | அறிவு |
| கோர்ட் | *** | அறமன்றம் |
| கோரோசனை | *** | ஆமணத்தி |
| கோஷ்டி | *** | குழாம் |
| கோட்டு | *** | குப்பாயம் |
| கேதாரகெளரி விரதம் | *** | மலைமகள் நோன்பு |
| கேசு | *** | வழக்கு |
| ஷோக்கு | *** | தளுக்கு |
| §க்ஷமம் | *** | ஏமம், நல்வாழ்வு, காப்பு |
| டேரா | *** | கூடாரம் |
| தோஷம் | *** | சீர், குற்றம் |
| தேகம் | *** | உடல், யாக்கை |
| தேவஸ்தானம் | *** | தேவகம், திருக்கோவில் |
| தேயு | *** | தீ |
| லோக | *** | உலகு,உலகம் |
| போகிப் பண்டிகை | *** | வேந்தன் திருநாள் |
| போஷி | *** | ஊட்டு |
| மோக்ஷம் | *** | வீடு, பேரின்பம் |
| போதி | *** | கற்பி, நுவல் |
| லோபி | *** | இவறி, கஞ்சன், பிசிரி |
| போலீஸ் | *** | ஊர்க்காவல், பாடிகாவல் |
| லோபம் | *** | இவறன்மை |
| ரோமம் | *** | மயிர் |
| போஜனம் | *** | சாப்பாடு |
| ரோடு | *** | சாலை |
| யோக்கியதை | *** | தகுதி |
| யோக்கியன் | *** | தக்கோன் |
| யோசி | *** | எண்ணு |
| மோசம் | *** | கேடு |
| மேகம் | *** | முகில் |
| பேஷ்கார், மணியம் | *** | செயல் பணியார் |
| வேஷ்டி | *** | வேட்டி |
| வேதாரண்யம் | *** | மறைக்காடு |
| வேதம் | *** | மறை |
| பேனா | *** | தூவல் |
| வேசி | *** | விலைமகள் |
| பேப்பர் | *** | தாள் |
| ஜோதி | *** | சுடர் |
| ஜோதிடன், ஜோஸ்யன் | *** | கணியன் |
| சோதி | *** | நோடு |
| சேவை | *** | ஊழியம் |
| சேவை | *** | தொண்டு, ஊழியம் |
| சேஷ்டை | *** | குறும்பு |
| சேவகன் | *** | இளையன் |
| சேனாவீரன் | *** | பொருநன் |
| சேனாபதி | *** | படைத்தலைவன் |
| ஆணை | *** | கட்டளை, சூள் |
| ஆகாயம் | *** | வெளி |
| ஆகாரம் | *** | உணவு |
| ஆ§க்ஷபி | *** | தடு |
| ஆ§க்ஷபசமாதானம் | *** | தடைவிடை |
| ஆமோதி | *** | வழிமொழி |
| ஆரோக்கியம் | *** | நலம், நோயின்மை |
| ஆலோசி | *** | சூழ் |
| ஆதி | *** | முதல் |
| ஆதியந்தம் | *** | முதலீறு |
| ஆதரி | *** | தாங்கு, அரவணை |
| ஆலயநிர்வாகிகள் | *** | கோவில் கருமத் தலைவர்கள் |
| ஆலயம் | *** | கோவில் |
| ஆரம்பம் | *** | துவக்கம், தொடக்கம் |
| ஆபத்து | *** | அல்லல் |
| ஆட்சேபணை | *** | தடை |
| ஆனந்தம் | *** | உவகை, களிப்பு |
| ஆக்கினை | *** | கட்டளை |
| ஆச்சாரம் | *** | ஒழுக்கம் |
| ஆச்சர்யம் | *** | வியப்பு |
| ஆக்ருதி | *** | பன்முகப் பேராற்றல் |
| ஆசீர்வதி, ஆசீர்வாதம் | *** | வாழ்த்து |
| ஆயுதம் | *** | கருவி |
| ஆத்மா | *** | ஆன்மா |
| ஆயுள் | *** | வாழ்நாள் |
| ஆஸ்தி | *** | செல்வம் |
| ஆஸ்பத்திரி | *** | மருத்துவசாலை |
| ஈவினிங் பஜார் | *** | அல்லங்காடி |
| ஈஸ்வரன் | *** | இறைவன் |
| ஹாஸ்யரசம் | *** | நகைச்சுவை |
| ஹிதம் | *** | நன்மை, நட்பு |
| க்ஷ£ணம் | *** | மங்கல் |
| க்ஷணம் | *** | நொடி |
| க்ஷவரம் | *** | மழிப்பு |
| ஸாயம் | *** | சாயுங்காலம் |
| ஸ¤வர்க்கம் | *** | துறக்கம், உவணை |
| ஸ¤ப்ரமண்யன் | *** | முருகன் |
| தாஸி | *** | தேவரடியாள் |
| தாஸன் | *** | அடியான் |
| தானியம் | *** | கூலம், தவசம் |
| தர்மார்த்தா காமமோக்ஷம் | *** | அறம் பொருள் இன்பம் வீடு |
| திரோபல அநுக்ரகம் | *** | மறைப்பருளல் |
| தினம் | *** | நாள் |
| திண்டிவனம் | *** | புளியங்காடு |
| திருப்தி | *** | பொந்திகை |
| தீர்த்தம் | *** | தூநீர் |
| தீபம் | *** | விளக்கு |
| தல | *** | தளம் |
| தயார் | *** | அணியம் |
| தயவு | *** | இரக்கம் |
| தரிசனம் | *** | காட்சி, காண்பு |
| தந்தம் | *** | மருப்பு |
| தம்பதிகள் | *** | மணமக்கள் |
| தருமம் | *** | அறம் |
| தனுர் | *** | சிலை |
| லஜ்ஜை | *** | வெட்கம் |
| பாஷை | *** | மொழி |
| ராகம் | *** | பண் |
| யாகம் | *** | வேள்வி |
| ராகத்துவேஷம் | *** | விருப்பு வெறுப்பு |
| பாஷாணஸ்தாபனம் | *** | கல்நடுதல் |
| பார்வதி | *** | மலைமகள் |
| மார்க்கம் | *** | வழி |
| வார்த்தை | *** | சொல் |
| மாஸ | *** | மாதம் |
| ராதாரோஹணம் | *** | தேர் ஏற்றம் |
| பாதாதிகேசபரியந்தம் | *** | அடிமுதல் முடிவரை |
| மாதிரி | *** | போலிகை |
| பாதரசம் | *** | இதள் |
| பாரிவேட்டை | *** | பரிமேட்டை |
| மாமிசம் | *** | இறைச்சி |
| மாயவரம்,மாயூரம் | *** | மயிலாடுதுறை |
| பாவம் | *** | கரிசு |
| லாபம் | *** | ஊதியம் |
| பாவம் | *** | தீவினை |
| பானம் | *** | குடிப்பு, குடிநீர் |
| ராஜலங்காரம் | *** | அரசக்கோலம், அரசப்புனைவு |
| பாக்கி | *** | நிலுவை |
| பாங்கு, வங்கி | *** | காசுக்கடை, வட்டிக்கடை |
| வாயு | *** | வளி |
| ராசி | *** | ஒப்புறவு, ஓரை |
| வாய்தா | *** | கெடு |
| யாத்திரீகர் | *** | திருவழிப் போக்கர் |
| வாத்தியம் | *** | இயம் |
| பாத்திரம் | *** | ஏனம், தகுதி |
| மாலுமி | *** | மீகாமன், நீகாமன் |
| பாஸ்போர்ட் | *** | கிள்ளாக்கு |
| வாஸ்தவம் | *** | வாய்மை |
| பூஜை | *** | வழிபாடு, பூசை |
| பகிரங்கம் | *** | வெளிப்படை |
| பகிரண்ட | *** | பேரண்ட |
| ரகஸ்யம் | *** | மறைபொருள், மருமம் |
| பர்வாயில்லை | *** | தா(விலை), தேவலை |
| பூர்வீகம் | *** | பழைமை |
| வர்க்கம் | *** | இனம் |
| மூர்க்கன் | *** | முரடன் |
| வர்த்தகம் | *** | வணிகம் |
| பூர்த்தி | *** | நிறைவு |
| விகடம் | *** | பகடி |
| விஷம் | *** | நஞ்சு |
| விநோதம் | *** | புதுமை |
| விஷேசம் | *** | சிறப்பு |
| விரோதம் | *** | பகை |
| பிரேதம் | *** | பிணம் |
| பிதிரார்ஜிதம் | *** | முதுசொம் |
| விவாகம், பரிணயம் | *** | திருமணம் |
| பிராயோபவேசம் | *** | வடக்கிறுத்தல் |
| பிராணி | *** | உயிரி, உயிர்மெய் |
| பிராணன் | *** | உயிர் |
| வியாதி | *** | நோய் |
| வியாபாரம் | *** | பண்டமாற்று |
| பிராயச்சித்தம் | *** | கழுவாய் |
| வியாஜம் | *** | தலைக்கீடு |
| பிரஜை | *** | குடிமகன் |
| பிரஜைகள் | *** | குடிகள் |
| பிரகாரம் | *** | திருச்சுற்று, சுற்றுமதில் |
| பிரகாசம் | *** | பேரொளி |
| பிரககாரம் | *** | படி |
| பிரகதீஸ்வரர் | *** | பெருவுடையார் |
| பிரியம் | *** | விருப்பம் |
| பிரதோஷம் | *** | மசண்டை |
| பிரயோகம் | *** | எடுத்தாட்சி, வழங்கல் |
| பிரயோஜனம் | *** | பயன் |
| பிரதிக்ஞை | *** | உறுதி, மேற்கோள் |
| பிரதக்ஷ¢ணம் | *** | வலஞ்செய்தல் |
| விரதம் | *** | நோன்பு |
| பிரயாசை, பிரயத்தனம் | *** | முயற்சி |
| பிரயாணி | *** | வழிப்போக்கன் |
| பிரயாணம் | *** | வழிப்போக்கு |
| பிரயாசம் | *** | முயற்ச்சி |
| வியவகாரம் | *** | வழக்கு |
| விபக்தி | *** | வேற்றுமை |
| பிரசுரம் | *** | வெளியீடு |
| பிரசாதம் | *** | அருட்கொடை, திருசோறு |
| விவசாயம் | *** | உழவு, பயிர்த்தொழில் |
| பிரத்தியக்ஷம் | *** | கண்கூடு |
| பிரசவம் | *** | பிள்ளைப்பேறு |
| பிரசங்கம் | *** | சொற்பொழிவு |
| பியூன் | *** | ஏவலன் |
| மிதுனம் | *** | ஆடவை |
| விஜயதசமி | *** | வெற்றிப் பதமி |
| பிச்சை | *** | இரப்பு,ஐயம் |
| பிச்சைக்காரன் | *** | இரப்போன் |
| விசுவாசம் | *** | நம்பிக்கை |
| விசாலாட்சி | *** | தடங்கண்ணி |
| விசாரணை | *** | கேள்வி |
| விசாரி | *** | வினவு, உசாவு |
| பிசாசு | *** | பேய் |
| மிருகம் | *** | விலங்கு |
| விருக்ஷம் | *** | மரம் |
| வித்தியாசம் | *** | வேறுபாடு |
| பிருதிவி | *** | நிலம் |
| விசனம் | *** | வாட்டம் |
| விருச்சிகம் | *** | நளி |
| விருத்தாசலம் | *** | பழமலை, முதுகுன்றம் |
| விஸ்தீரணம் | *** | பரப்பு |
| வீரன் | *** | வயவன், விடலை |
| மீனாட்சிசுந்தரம் | *** | கயற்கண்ணியழகன் |
| பீஜம் | *** | விதை |
| ரதோத்சவம் | *** | தேரோட்டம் |
| மஹாபிஷேகம் | *** | பெருமுழுக்கு |
| மஹாசிவராத்திரி | *** | சிவனார் பேரிரவு |
| பக்ஷ | *** | பக்கம் |
| லக்ஷார்ச்சனை | *** | இலக்க வழிபாடு |
| பக்ஷி | *** | பறவை, புள் |
| பக்ஷிதீர்த்தம் | *** | திருக்கழுக் குன்றம் |
| ரஸம் | *** | சாறு, மிளகுசாறு |
| வஸந்தோற்சவத்வஜ ஆரோஹணம் | *** | இளவேனில்விழாக்கொடியேற்றம் |
| ரணம் | *** | புண் |
| பூத(bh) | *** | பூதம் |
| யதார்த்தம் | *** | உண்மை |
| பதார்த்தம் | *** | பண்டம், கறி |
| பதிவிரதை | *** | குலமகள் |
| ரதம் | *** | தேர் |
| பல(b) | *** | வலம் |
| மயானம் | *** | சுடுகாடு, சுடலை |
| பவஒளஷதீஸ்வரர் | *** | பிறவிமருந்திறைவர் |
| பரகாயப்பிரவேசம் | *** | கூடுவிட்டுக் கூடு பாய்தல் |
| பூமி | *** | ஞாலம், நிலம் |
| பரிகாசம் | *** | நகையாடல் |
| மரியாதை | *** | மதிப்பு |
| பரியந்தம் | *** | வரை |
| வமிசம் | *** | மரபு |
| தூமகேது | *** | வால்வெள்ளி |
| பரணிதீபம் | *** | முக்கூட்டு விளக்கு |
| பூரணசந்திரன் | *** | முழுமதி, மதியம் |
| வலய | *** | வளையம் |
| வயசு | *** | அகவை |
| தூரம் | *** | சேய்மை |
| பரம்பரை | *** | தலைமுறை |
| பரஸ்பரம் | *** | இருதலை |
| யமன் | *** | கூற்றுவன்,மறலி |
| ரஜா | *** | விடுமுறை |
| யஜமான் | *** | தலைவன், ஆண்டான் |
| பசு | *** | ஆ, ஆவு, ஆன் |
| ரங்க | *** | அரங்கம் |
| மங்கல | *** | மங்கலம் |
| பஞ்சேந்திரியம் | *** | ஐம்புலன் |
| பக்தி | *** | தேவடிமை |
| பக்தவத்ஸலம் | *** | அடியார்க்கருளி |
| பக்தன் | *** | அடியான் |
| லக்னம் | *** | ஓரை |
| பஞ்சாமிர்தம் | *** | ஐயமுது |
| பஞ்சாங்கம் | *** | ஐந்திறம் |
| பஞ்சநதீஸ்வரர் | *** | ஐயாற்றார் |
| லஞ்சம் | *** | கையூட்டு |
| மண்டப | *** | மண்டபம் |
| மண்டல | *** | மண்டலம் |
| மசாலை | *** | உசில் |
| வருஷாபிஷேகம் | *** | ஆட்டைத் திருமுழுக்கு |
| வருஷம் | *** | ஆண்டு |
| வருடம் | *** | ஆண்டு |
| மத்தி | *** | நடு |
| மத்தியானம் | *** | நண்பகல், உச்சிவேளை |
| பத்திரிக்கை | *** | தாளிகை |
| பத்திரம் | *** | தாள், இதழ் |
| பத்தினி | *** | கற்புடையாள் |
| ரத்தினம் | *** | மணி |
| பசலி | *** | பயிராண்டு |
| பந்து | *** | இனம் |
| லக்ஷ்மி | *** | திருமகள் |
| வசனம் | *** | உரைநடை |
| வசந்தோற்சவம் | *** | இளவேனில் விழாக்கட்டு |
| வன்மீகநாதர் | *** | பற்றிடங்கொண்டார் |
| வசூல் | *** | தண்டல் |
| துர்லபம் | *** | அரிது |
| துரோகம் | *** | இரண்டகம் |
| துஷ்டன் | *** | தீயவன் |
| துரியம், துரியாதீதம் | *** | அயர்வொடுக்கம் |
| துக்கம் | *** | துயரம் |
| டிக்கட்டு | *** | சீட்டு |
| ஜாதகம் | *** | பிறப்பியம் |
| ஜாதி | *** | குலம் |
| ஜாதிஜனம் | *** | குலங்குடும்பம் |
| ஜாக்கிரதை | *** | விழிப்பு |
| ஜாஸ்தி | *** | நிறைய |
| ஜீவியம் | *** | வாழ்க்கை |
| ஜீரணோத்தாரணம் | *** | பழுதுபார்ப்பு |
| ஜீரணம் | *** | செரிமானம் |
| ஜீவனம் | *** | பிழைப்பு |
| ஜீவன் | *** | உயிர் |
| ஜயாபஜயம் | *** | வெற்றி தோல்வி |
| ஜலதோஷம் | *** | நீர்க்கோர்வை, தடுமம் |
| ஜயம் | *** | வெற்றி |
| ஜலம், தீர்த்தம் | *** | தண்ணீர் |
| ஜனனமரணம் | *** | பிறப்பிறப்பு |
| ஜனம் | *** | நரல், நருள் |
| ஜனசங்கியை | *** | குடிமதிப்பு |
| ஜம்புத்தீவு | *** | நாவலம்பொழில் |
| ஜன்மம் | *** | பிறவி |
| ஜன்னி | *** | இசிவு |
| சுகம் | *** | உடல்நலம், இன்பம் |
| சுலோகம் | *** | சொலவம் |
| குஷ்டம் | *** | குட்டம் |
| சுதி | *** | கேள்வி |
| சுதந்தரம் | *** | உரிமை |
| சுவாஸம் | *** | மூச்சு, உயிர்ப்பு |
| சுவாமி | *** | இறை, ஆண்டான், கடவுள் |
| சுவாமிகள் | *** | அடிகள் |
| சுபாவம் | *** | இயல்பு |
| குமாஸ்தா | *** | கணக்கன் |
| சுரணை | *** | உணர்ச்சி |
| குதூகலம் | *** | களிப்பு |
| சுபர்ண | *** | சுவணம், உவணம் |
| க்ரியை | *** | வினை |
| சுபீட்சம் | *** | செழிப்பு |
| சுயராஜியம் | *** | தன்னரசு, தன்னாட்சி |
| சுயமாய் | *** | தானாய் |
| சுபம் | *** | மங்கலம் |
| சுந்தரன் | *** | சொக்கன் |
| சுத்தம் | *** | துப்புரவு |
| கும்பாபிஷேகம் | *** | குடநீராட்டு, கும்பநீராட்டு |
| சுழுத்தி | *** | துயில் |
| சாகரம் | *** | கடல் |
| சாக்ஷ¢ | *** | கண்டோன், கரி |
| சாதாரணம் | *** | பொதுவகை |
| சாதம் | *** | சோறு |
| சாமான் | *** | பண்டம் |
| சாயரட்சை | *** | மாலைப் பூசை |
| சாக்கிரம் | *** | நனவு |
| சாந்தி | *** | சமந்தி |
| சாஸ்திரம் | *** | கலை, நூல் |
| சாஸ்வதம் | *** | நிலைப்பு |
| முக(kh) | *** | முகம் |
| யுகாதி | *** | தெலுங்கு ஆண்டுப் பிறப்பு |
| சகலர் | *** | எல்லோரும் |
| சகலம் | *** | எல்லாம் |
| சகலன்,சட்டகன் | *** | ஓர்ப்புடையான், ஓரகத்தான் |
| சகஜம் | *** | வழக்கம் |
| சகசிரமலர் | *** | பூவகம்(ஆயிரம் இதழ்த் தாமரை) |
| சகஸ்ரநாமம் | *** | ஆயிரம் பெயர் |
| முகஸ்துதி | *** | முகமன் |
| சர்வமானியம் | *** | முற்றூட்டு |
| சிகிச்சை | *** | பண்டுவம் |
| சிநேகம், சினேகிதம் | *** | நட்பு |
| சிவ | *** | சிவன் |
| சிரஞ்சீவி | *** | நீடுவாழி |
| சிசு | *** | குழந்தை |
| சிங்காசனம் | *** | அரியணை |
| சிசுரு¨க்ஷ | *** | பணிவிடை |
| சிருஷ்டிதிதிசங்காரம் | *** | படைப்பு காப்பு அழிப்பு |
| சித்திரை | *** | மேழம் |
| சீத | *** | சீலம் |
| சீதகும்பம் | *** | குளிர்கும்பம், தண்குடம் |
| சீக்கிரம் | *** | சுருக்கு, சுருக்காய்,சடுதியில் |
| சகோதரன் | *** | உடன் பிறந்தான் |
| த்ரோண | *** | தோணி |
| புஷ்பவதியாதல் | *** | முதுக்குறைதல், பூப்படைதல் |
| புஷ்பம் | *** | பூ, மலர் |
| முஷ்டி | *** | முட்டி |
| புஷ்டி | *** | தடிப்பு, தசைப்பிடிப்பு |
| புதன் | *** | அறிவன் |
| சமாச்சாரம் | *** | செய்தி |
| சவால் | *** | அறைகூவல் |
| சரீரம் | *** | உடம்பு |
| சமீபம் | *** | அண்மை |
| சரணம் | *** | அடைக்கலம் |
| ப்ரதிமா | *** | வடிவம் |
| சபதம் | *** | வஞ்சினம், சினமொழி |
| ப்ரவாள | *** | பவளம் |
| த்வஜ அவரோஹணம் | *** | கொடிஇறக்கம் |
| சரஸ்வதி | *** | கலலைமகள், நாமகள் |
| சதுர்த்தசி | *** | நலமி |
| சனிக்கிழமை | *** | காரி |
| சனிப்பிரதோஷம் | *** | காரிமசண்டை |
| சங்கீதம் | *** | இசை, இன்னிசை |
| சங்கமேஸ்வரர் | *** | கூடுதுறையார் |
| சங்கடம் | *** | இடர்ப்பாடு |
| சங்கராந்தி | *** | பொங்கல் |
| சங்கரி | *** | அழி |
| சக்கரவர்த்தி | *** | மாவேந்தன் |
| சங்கம் | *** | கழகம் |
| சக்தி | *** | ஆற்றல் |
| யுக்தி | *** | உத்தி |
| முக்தி | *** | விடுதலை |
| சகுனம் | *** | குறி, புள் |
| புண்ணியம் | *** | நல்வினை, அறப்பயன் |
| சமுகம் | *** | மன்பதை |
| சந்நிதி | *** | திருமுன், முன்னிலை |
| சந்நியாசி | *** | துறவி |
| புருஷன் | *** | ஆடவன் |
| ருசி | *** | சுவை |
| சந்தோஷம் | *** | மகிழ்ச்சி |
| சந்தேகம் | *** | ஐயம், ஐயுறவு |
| சந்தி | *** | தலைக்கூடு |
| புத்தி | *** | மதி |
| புத்திமதி | *** | மதியுரை |
| சத்தியம் | *** | உண்மை |
| சந்திரன் | *** | மதி, நிலா |
| சந்ததி | *** | எச்சம் |
| சப்தபரிசகந்தரூபரஸம் | *** | சுவையொளியூறோசை நாற்றம் |
| சத்தம் | *** | ஓசை |
| சம்பாஷணை | *** | உரையாட்டு |
| சம்பாஷி | *** | உரையாடு |
| சம்பிரதம் | *** | மறவுரை, நெடுமொழி |
| சம்பூரணம் | *** | முழுநிறைவு |
| சம்பந்தம் | *** | தொடர்பு |
| ம்ருது | *** | மெது |
| சத்துரு, விரோதி | *** | பகைவன் |
| சமுச்சயம் | *** | அயிர்ப்பு |
| சமுசாரி | *** | குடும்பி |
| சம்புரோக்ஷணம் | *** | தூய்நிலைப்படுத்தம் |
| ந்ருத்த | *** | நடம், நட்டம் |
| சமுத்திரம் | *** | வாரி |
| முகூர்த்தம் | *** | முழுத்தம் |
| சன்மார்கம் | *** | நன்னெறி, நல்வழி |
| ஸ்கந்தன் | *** | கந்தன் |
| ஸ்நானம் | *** | குளிப்பு |
| ஸ்தோத்திரி | *** | பராவு |
| ஸ்தாபனம் | *** | நிறுவனம் |
| ஸ்திரீ | *** | பெண்டு |
| ஸ்மரணை | *** | உணர்ச்சி |
| ஸ்த்ரீ புருஷர் | *** | ஆண்பெண் |
| இஷ்டஜனபந்துமித்ரர் | *** | உற்றார் உறவினர் |
| இஷ்டம் | *** | விருப்பம் |
| இந்திரன் | *** | வேந்தன் |
| இருதயம் | *** | நெஞ்சம், நெஞ்சாங்குலை |
| வ்ருத்த | *** | வட்டம் |
| சூல | *** | சூலம் |
| சூரியகாந்தி | *** | பொழுதுவணங்கி |
| சூரியன் | *** | கதிரவன் |
Posted by ஞானவெட்டியான் at 12:34 PM 19 comments
Labels: தமிழமுது













