Thursday, October 19, 2006

மாலியம் - முகவுரை

மாலியம் - முகவுரை


"நின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான்
தன்னையே தான்வேண்டும் செல்வம்போல் மாயத்தால்
மின்னையேசேர் திகிரி வித்துவக் கோட்டு அம்மா!
நின்னையே தான்வேண்டி நிற்பன் அடியனே."

மிகுந்த ஒளிவீசும் சக்கராயுதத்தைக் கையில் ஏந்தி வித்துவக்கோட்டில் வதியும் அம்மானே(எம்பெருமானே)! மிகுந்த செல்வத்தை விரும்பாது உன்னை வேண்டி நிற்கும் அடியவருக்கு, செல்வத்தை விரும்பாதபோதும் விரும்பாதவனிடமே அச்செல்வம் சென்று அடையுமாப்போல், உன் மாயையினால் என்னை வெறுப்பதைப்போல் வெறுத்தாலும், உன் அடியவனாகிய நான் உன்னையே அடைய விரும்பி நிற்பேன்.
(பெருமாள் திருமொழி)

0 Comments: