3. அனாதியா யைந்தொழிற்கு மப்புறமா யன்றோ
மனாதிகளுக் கெட்டா வடிவாய்த் தனா தருளின்
பஞ்சவித ரூப பரசுகமாய் எவ்வுயிர்க்குந்
தஞ்சமென நிற்குந் தனிப்பொருளாய் - எஞ்சாத
அநா(னா)தியாய் = ஆதி, அந்தம் இல்லாததாய்
ஐந்தொழில் = படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்
அன்றே = ஆதியிலேயே
மனாதி = மனம் முதலிய அகக் கருவிகள்
தனாது = தன்னுடைய
பஞ்சவித ரூபம் = அயன், அரி, அரன், மகேசன், சதாசிவன்
தஞ்சம் = ஆதாரம்
தனி = ஒப்பற்ற பொருள்
எஞ்சாத = குறையாத
அறிவினாலே எப்போது தோன்றினாய் என்று அறிய முடியாதவனே! ஐந்தொழில்களுக்கும் அப்பாற்பட்டவனே! ஆதியிலேயே, மனம், புத்தி, அகங்காரம் எனும் மூன்றிற்கும் எட்டாத திருவடிவு உடையவனே! உயிர்களின்மீது வைத்த தனது கருணையினாலேயே, பிரம்மா, மால், உருத்திரன், மகேசன், சதாசிவன் என்னும் ஐந்துவகை வடிவங்கொண்ட மேலான பேரின்பம் உடையவனே!எல்லா உயிர்களுக்கும் அடைக்கலமாய் நிற்கும் ஒப்பற்ற பரம்பொருளே! குறையாத .....
Thursday, October 19, 2006
கந்தர் கலிவெண்பா - 3
Posted by ஞானவெட்டியான் at 7:47 PM
Labels: கந்தர் கலிவெண்பா, செளமாரம், ஞானவெட்டியான்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment