Thursday, October 19, 2006

ஞானரத்தினக் குறவஞ்சி - முன்னுரை

பீரு முகமது ஞான ரத்தினக் குறவஞ்சி
******************************************
முன்னுரை
************
காலத்தால் மூத்த தமிழக சூபிக் கவிஞர் பீரு முகமது அப்பா. அப்பா என மரியாதையுடன் அழைக்கப்பட்டவர். சிறந்த இறைநேசச் செல்வர். திருக் குர் ஆனின் உன்னத புகழ் அனைத்தையும் தம் மெய்ஞானக் கவிதைகளின் வாயிலாக மக்களுக்குத் தந்தவர். யாரும் எளிதில் விளங்கிக் கொள்ளும் வண்ணம் பாடல்கள் எளிமையானவை.

பீர் என்பது இசுலாமிய சூபித்துவத்தில் ஆன்மிகக் குரு. முகமது என்பது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் நபிப் பெருமகனாரின் திருப்பெயர்.

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி வட்டம் கணிகபுரத்தில் சிறு மலுக்கர் என்னும் பெரியாரின் மைந்தனாக அவதரித்தார்.

"தென்காசி நாடு சிறுமலுக்க ரென்னுமவர்
தன்பால னிக்கதையைச் சாற்றினான்" (ஞானப் புகழ்ச்சி)

"சிறுமலுக்க ரீன்ற தவச் சிறப்ப்டைய பீர்முகம்மது" (ஞானக் குறம்)

அப்பா அவர்கள் பிறந்த ஆண்டு இன்னும் கணிக்க முடியாமலே இருக்கிறது. அவரின் படைப்புக்களை வைத்து அவர் கி.பி. பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் எனக் கூறலாம்.

இளமையிலேயே ஞானக் கருத்துக்களில் ஈடுபாடு உடையவராய் விளங்கிய அவர், தென்காசியைச் சேர்ந்தவராயிருப்பினும் தன் வாழ்நாளில் பெரும் பகுதியைக் கேரள மாநிலத்தின் கொச்சிப் பகுதியைச் சார்ந்த மலைப் பகுதிகளில்தான் வாழ்ந்தார். இதன்பின் யானை மலைக் காட்டுப் பகுதிகளில் தவம் இருந்தார். அப்போதுதான் சூபிக் கருத்துப் பெட்டகமாம் பல நூல்களை எழுதியதாகத் தெரிகிறது.

மெய்ஞானச் சர நூல், ஞான மலை வளம், ஞான ரத்தினக் குறவஞ்சி, ஞான மணி மாலை போன்றவைகளை எழுதியதாகத் தெரிகிறது.

அப்பா அவர்கள் நீண்ட காலம் தங்கியிருந்த கேரளத்தின் ஒரு இடத்திற்கு இன்னமும் பீர்மேடு (இடுக்கி மாவட்டம்) எனும் பெயர் நிலவுகிறது. இறுதியில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலைப் பகுதிக்கு வந்து சிலகாலம் இருந்து ஞானம் உபதேசித்தார்; பின்னர் இறுதி நாளும் தக்கலையிலேயே முடிந்தது.

4 Comments:

Anonymous said...

//பீரு முகமது ஞான ரத்தினக் குறவஞ்சி//
அது என்ன சார் குறவஞ்சி குற்றாலத்தில் அல்லவா? குறவஞ்சி என்பர்.
முஸல்மான்கள் இந்துக்களைப்போல் தவம் இருப்பதுண்டா?
அவரது செயல்கள் சாதணைகள் என்ன?
கேட்போம்

ஞானவெட்டியான் said...

அன்பு என்னார்,

26ம் பாடலில் விளக்கம் உள்ளது. கூர்ந்து படியுங்கள்.
தவம் என்றால் என்னடி சிங்கி?

உணர்வை நினைவினில் நிறுத்தித் தன்னையும் மற்றவற்றையும் மறந்து இருப்பதுதான் தவம்.

இதை மனிதனாய்ப் பிறந்த யாரும் செய்யலாமே!
செய்து உணர்ந்து பின்னர்தான் பீரு முகமது அவுலியா இவ்வளவு எளிய முறையில் ஞானத்தைப் பகர்ந்துள்ளார்.

Anonymous said...

Dear Ayya,

I would like to have all your writings in softcopy as well as in book format. This is purely for my personal use.

I am requesting your permission to copy your articles and take printout in a format.

Thanks and Regards
Hari

ஞானவெட்டியான் said...

My Dear Hari,
I am thinking of Publishing my works and the same is being delayed for want of funds.
If copying my works is not for circulation and commercial use, you have my permission to take copy of my scribblings.