Thursday, October 19, 2006

தனித் தமிழில் உரையாட

தனித் தமிழில் உரையாடத்
*******************************
தவிர்க்கவேண்டிய சொற்கள்
*********************************

உத்தியோகம் *** அலுவல்
உற்சாகம் *** ஊக்கம்
உற்சவங்கள் *** திருவிழாக்கள், விழாக்கள்
உற்சவம் *** திருவிழா
ஒஸ்தி *** உசத்தி
காஷாயம் *** காவி
கார்த்திகை *** ஆரல், அறுமீன்
காவியம் *** தொடர்நிலைச் செய்யுள், வனப்பு
காரியஸ்தர் *** கருமத் தலைவர்
கலெக்டர் *** தண்டுவார்
கஷாயம் *** கருக்கு
கவுன் *** மெய்ப்பை
கர்வம் *** செருக்கு
கர்ப்பகிரகம் *** கருவரை, உண்ணாழிகை
கிராமம் *** சிற்றூர், பட்டி
கிரகம் *** கோள்
கிரீடம் *** முடி
கிருபை *** அருள், இரக்கம்
கிருகபிரப்வேசம் *** புதுமனை புகுதல், புதுவீடு புகல்
கிருஷிகம் *** உழவு
கிஸ்தி *** பகுதி
கீதவாத்யநிருத்தம் *** கொட்டாட்டுப் பாட்டு
கஜேந்திர மோக்ஷம் *** வேழவேந்த வீடு
கஷ்டம் *** வருத்தம்
கவி *** பா,செய்யுள்
கபிலை *** குரால்
கரகோஷம் *** கைதட்டல்
கவசம் *** அந்தளகம்
கனகசபை *** பொன்னம்பலம்
கஜானா *** கருவூலம்
கங்கண விஸர்ஜனம் *** சிலம்பு கழி நோன்பு
கங்கணம் *** வளையல், காப்பு
கச்சேரி *** மன்றம், அரங்கு
கருணை *** அருள்
கருடன் *** கழுலன்
கஸ்தூரி *** காசறை
நாஸம் *** அழிவு
நாதம் *** ஒலி
நாமம் *** பெயர்
நாட்டக *** நாடகம்
நாடி *** நாழி
நானா *** நாலா
நிர்வாக அதிகாரி *** செயல் அலுவலர், ஆள்வினைஞர்
நிர்வாக அதிகாரி *** கருமத்தலைவர்
நியாயம் *** நயன், முறை
நியதி *** யாப்புறவு
நியமி *** அமர்த்து
நிபந்தனை *** அக்குத்து
நிஜம் *** மெய்
நிச்சயம் *** தேற்றம்
நித்திரை *** தூக்கம்
நித்ய *** நித்தம்
நீதி *** நயன், முறை
நக்ஷத்திரம் *** வெள்ளி, நாண்மீன்
நஷ்டம் *** இழப்பு
நடராஜர் *** நடவரசு,ஆடலரசு,அம்பலவாணன்
நதி *** ஆறு
நவராத்திரி *** தொள்ளிரவு
நமஸ்காரம் *** வணக்கம்
ஸ்ரீவைஷ்ணவ ஏகாதசி *** திருமாலியப் பதினொரமை
ஸ்ரீதேவசேனா *** திருத்தெய்வயானை
ஸ்ரீதனம் *** சிறுதனம்
ஸ்ரீமத் *** திருமான்
ஸ்ரீஜயந்தி *** பிறப்புத் திருநாள்
ஷஷ்டி *** அறமி
எஜமான் *** ஆண்டை
அர்ச்சனை *** தொழுகை,வழிபாடு
அர்ச்சகன் *** உவச்சன், வழிபாட்டாசான்
அர்த்தநாரீஸ்வரர் *** மாதொருபாகன்
அர்த்தம் *** பொருள்
அநேக *** பல
அக்ஷ *** அச்சு
அக்ஷயன், அச்சுதன் *** கேடிலி
அஷ்டோத்ரம் *** நூற்றெட்டு
அதிர்ஷ்டம் *** பொங்கு
அமாவாஸ்யை *** காருவா
அபாயம் *** ஏதம்
அபூர்வம் *** அரிது,அருமை
அபி§க்ஷகம் *** திருமுழுக்கு
அபிவிர்த்தி *** மிகுவளர்ச்சி
அமவாசை *** காருவா
அபராதம் *** குற்றம்,தண்டம்
அவயவம், அங்கம் *** உறுப்பு
அவசியம் *** வேண்டியது, தேவை
அவசரம் *** விரைவு,பரபரப்பு
அனாவசியம் *** வேண்டாதது
அக்கினி நட்சத்திரம் *** கத்தரி, எரிநாள்
அங்கவஸ்திரம் *** மேலாடை
அங்ஙண *** அங்கணம்
அச்சாரம் *** உளவாடம்
அத்தியாவசியம் *** இன்றியமையாமை
அந்தரங்கம் *** மறைமுகம்
அந்தம் *** முடிவு
அப்பியாசம் *** பயிற்ச்சி
அப்பியங்கன ஸ்நானம் *** தலைமுழுக்கு
அசங்கியம் *** அருவருப்பு
அப்பு *** நீர்
அஸ்திவாரம், அஸ்திபாரம் *** அடிப்படை
அனுஷ்டி *** கைக்கொள்
அனுபவி *** நுகர்
அற்புதம் *** புதுமை, இறும்பூது
அன்னாபிஷேகம் *** சோற்றுத் திருமுழுக்கு
அன்னியம் *** அயல்
அன்னவஸ்திரம் *** ஊணுடை
அன்னம் *** உண்டி, எகினம், ஓதிமம்
ஞாபகம் *** நினைவு, ஞாவகம், நினைப்பு
ஞானம் *** அறிவு
கோர்ட் *** அறமன்றம்
கோரோசனை *** ஆமணத்தி
கோஷ்டி *** குழாம்
கோட்டு *** குப்பாயம்
கேதாரகெளரி விரதம் *** மலைமகள் நோன்பு
கேசு *** வழக்கு
ஷோக்கு *** தளுக்கு
§க்ஷமம் *** ஏமம், நல்வாழ்வு, காப்பு
டேரா *** கூடாரம்
தோஷம் *** சீர், குற்றம்
தேகம் *** உடல், யாக்கை
தேவஸ்தானம் *** தேவகம், திருக்கோவில்
தேயு *** தீ
லோக *** உலகு,உலகம்
போகிப் பண்டிகை *** வேந்தன் திருநாள்
போஷி *** ஊட்டு
மோக்ஷம் *** வீடு, பேரின்பம்
போதி *** கற்பி, நுவல்
லோபி *** இவறி, கஞ்சன், பிசிரி
போலீஸ் *** ஊர்க்காவல், பாடிகாவல்
லோபம் *** இவறன்மை
ரோமம் *** மயிர்
போஜனம் *** சாப்பாடு
ரோடு *** சாலை
யோக்கியதை *** தகுதி
யோக்கியன் *** தக்கோன்
யோசி *** எண்ணு
மோசம் *** கேடு
மேகம் *** முகில்
பேஷ்கார், மணியம் *** செயல் பணியார்
வேஷ்டி *** வேட்டி
வேதாரண்யம் *** மறைக்காடு
வேதம் *** மறை
பேனா *** தூவல்
வேசி *** விலைமகள்
பேப்பர் *** தாள்
ஜோதி *** சுடர்
ஜோதிடன், ஜோஸ்யன் *** கணியன்
சோதி *** நோடு
சேவை *** ஊழியம்
சேவை *** தொண்டு, ஊழியம்
சேஷ்டை *** குறும்பு
சேவகன் *** இளையன்
சேனாவீரன் *** பொருநன்
சேனாபதி *** படைத்தலைவன்
ஆணை *** கட்டளை, சூள்
ஆகாயம் *** வெளி
ஆகாரம் *** உணவு
ஆ§க்ஷபி *** தடு
ஆ§க்ஷபசமாதானம் *** தடைவிடை
ஆமோதி *** வழிமொழி
ஆரோக்கியம் *** நலம், நோயின்மை
ஆலோசி *** சூழ்
ஆதி *** முதல்
ஆதியந்தம் *** முதலீறு
ஆதரி *** தாங்கு, அரவணை
ஆலயநிர்வாகிகள் *** கோவில் கருமத் தலைவர்கள்
ஆலயம் *** கோவில்
ஆரம்பம் *** துவக்கம், தொடக்கம்
ஆபத்து *** அல்லல்
ஆட்சேபணை *** தடை
ஆனந்தம் *** உவகை, களிப்பு
ஆக்கினை *** கட்டளை
ஆச்சாரம் *** ஒழுக்கம்
ஆச்சர்யம் *** வியப்பு
ஆக்ருதி *** பன்முகப் பேராற்றல்
ஆசீர்வதி, ஆசீர்வாதம் *** வாழ்த்து
ஆயுதம் *** கருவி
ஆத்மா *** ஆன்மா
ஆயுள் *** வாழ்நாள்
ஆஸ்தி *** செல்வம்
ஆஸ்பத்திரி *** மருத்துவசாலை
ஈவினிங் பஜார் *** அல்லங்காடி
ஈஸ்வரன் *** இறைவன்
ஹாஸ்யரசம் *** நகைச்சுவை
ஹிதம் *** நன்மை, நட்பு
க்ஷ£ணம் *** மங்கல்
க்ஷணம் *** நொடி
க்ஷவரம் *** மழிப்பு
ஸாயம் *** சாயுங்காலம்
ஸ¤வர்க்கம் *** துறக்கம், உவணை
ஸ¤ப்ரமண்யன் *** முருகன்
தாஸி *** தேவரடியாள்
தாஸன் *** அடியான்
தானியம் *** கூலம், தவசம்
தர்மார்த்தா காமமோக்ஷம் *** அறம் பொருள் இன்பம் வீடு
திரோபல அநுக்ரகம் *** மறைப்பருளல்
தினம் *** நாள்
திண்டிவனம் *** புளியங்காடு
திருப்தி *** பொந்திகை
தீர்த்தம் *** தூநீர்
தீபம் *** விளக்கு
தல *** தளம்
தயார் *** அணியம்
தயவு *** இரக்கம்
தரிசனம் *** காட்சி, காண்பு
தந்தம் *** மருப்பு
தம்பதிகள் *** மணமக்கள்
தருமம் *** அறம்
தனுர் *** சிலை
லஜ்ஜை *** வெட்கம்
பாஷை *** மொழி
ராகம் *** பண்
யாகம் *** வேள்வி
ராகத்துவேஷம் *** விருப்பு வெறுப்பு
பாஷாணஸ்தாபனம் *** கல்நடுதல்
பார்வதி *** மலைமகள்
மார்க்கம் *** வழி
வார்த்தை *** சொல்
மாஸ *** மாதம்
ராதாரோஹணம் *** தேர் ஏற்றம்
பாதாதிகேசபரியந்தம் *** அடிமுதல் முடிவரை
மாதிரி *** போலிகை
பாதரசம் *** இதள்
பாரிவேட்டை *** பரிமேட்டை
மாமிசம் *** இறைச்சி
மாயவரம்,மாயூரம் *** மயிலாடுதுறை
பாவம் *** கரிசு
லாபம் *** ஊதியம்
பாவம் *** தீவினை
பானம் *** குடிப்பு, குடிநீர்
ராஜலங்காரம் *** அரசக்கோலம், அரசப்புனைவு
பாக்கி *** நிலுவை
பாங்கு, வங்கி *** காசுக்கடை, வட்டிக்கடை
வாயு *** வளி
ராசி *** ஒப்புறவு, ஓரை
வாய்தா *** கெடு
யாத்திரீகர் *** திருவழிப் போக்கர்
வாத்தியம் *** இயம்
பாத்திரம் *** ஏனம், தகுதி
மாலுமி *** மீகாமன், நீகாமன்
பாஸ்போர்ட் *** கிள்ளாக்கு
வாஸ்தவம் *** வாய்மை
பூஜை *** வழிபாடு, பூசை
பகிரங்கம் *** வெளிப்படை
பகிரண்ட *** பேரண்ட
ரகஸ்யம் *** மறைபொருள், மருமம்
பர்வாயில்லை *** தா(விலை), தேவலை
பூர்வீகம் *** பழைமை
வர்க்கம் *** இனம்
மூர்க்கன் *** முரடன்
வர்த்தகம் *** வணிகம்
பூர்த்தி *** நிறைவு
விகடம் *** பகடி
விஷம் *** நஞ்சு
விநோதம் *** புதுமை
விஷேசம் *** சிறப்பு
விரோதம் *** பகை
பிரேதம் *** பிணம்
பிதிரார்ஜிதம் *** முதுசொம்
விவாகம், பரிணயம் *** திருமணம்
பிராயோபவேசம் *** வடக்கிறுத்தல்
பிராணி *** உயிரி, உயிர்மெய்
பிராணன் *** உயிர்
வியாதி *** நோய்
வியாபாரம் *** பண்டமாற்று
பிராயச்சித்தம் *** கழுவாய்
வியாஜம் *** தலைக்கீடு
பிரஜை *** குடிமகன்
பிரஜைகள் *** குடிகள்
பிரகாரம் *** திருச்சுற்று, சுற்றுமதில்
பிரகாசம் *** பேரொளி
பிரககாரம் *** படி
பிரகதீஸ்வரர் *** பெருவுடையார்
பிரியம் *** விருப்பம்
பிரதோஷம் *** மசண்டை
பிரயோகம் *** எடுத்தாட்சி, வழங்கல்
பிரயோஜனம் *** பயன்
பிரதிக்ஞை *** உறுதி, மேற்கோள்
பிரதக்ஷ¢ணம் *** வலஞ்செய்தல்
விரதம் *** நோன்பு
பிரயாசை, பிரயத்தனம் *** முயற்சி
பிரயாணி *** வழிப்போக்கன்
பிரயாணம் *** வழிப்போக்கு
பிரயாசம் *** முயற்ச்சி
வியவகாரம் *** வழக்கு
விபக்தி *** வேற்றுமை
பிரசுரம் *** வெளியீடு
பிரசாதம் *** அருட்கொடை, திருசோறு
விவசாயம் *** உழவு, பயிர்த்தொழில்
பிரத்தியக்ஷம் *** கண்கூடு
பிரசவம் *** பிள்ளைப்பேறு
பிரசங்கம் *** சொற்பொழிவு
பியூன் *** ஏவலன்
மிதுனம் *** ஆடவை
விஜயதசமி *** வெற்றிப் பதமி
பிச்சை *** இரப்பு,ஐயம்
பிச்சைக்காரன் *** இரப்போன்
விசுவாசம் *** நம்பிக்கை
விசாலாட்சி *** தடங்கண்ணி
விசாரணை *** கேள்வி
விசாரி *** வினவு, உசாவு
பிசாசு *** பேய்
மிருகம் *** விலங்கு
விருக்ஷம் *** மரம்
வித்தியாசம் *** வேறுபாடு
பிருதிவி *** நிலம்
விசனம் *** வாட்டம்
விருச்சிகம் *** நளி
விருத்தாசலம் *** பழமலை, முதுகுன்றம்
விஸ்தீரணம் *** பரப்பு
வீரன் *** வயவன், விடலை
மீனாட்சிசுந்தரம் *** கயற்கண்ணியழகன்
பீஜம் *** விதை
ரதோத்சவம் *** தேரோட்டம்
மஹாபிஷேகம் *** பெருமுழுக்கு
மஹாசிவராத்திரி *** சிவனார் பேரிரவு
பக்ஷ *** பக்கம்
லக்ஷார்ச்சனை *** இலக்க வழிபாடு
பக்ஷி *** பறவை, புள்
பக்ஷிதீர்த்தம் *** திருக்கழுக் குன்றம்
ரஸம் *** சாறு, மிளகுசாறு
வஸந்தோற்சவத்வஜ ஆரோஹணம் *** இளவேனில்விழாக்கொடியேற்றம்
ரணம் *** புண்
பூத(bh) *** பூதம்
யதார்த்தம் *** உண்மை
பதார்த்தம் *** பண்டம், கறி
பதிவிரதை *** குலமகள்
ரதம் *** தேர்
பல(b) *** வலம்
மயானம் *** சுடுகாடு, சுடலை
பவஒளஷதீஸ்வரர் *** பிறவிமருந்திறைவர்
பரகாயப்பிரவேசம் *** கூடுவிட்டுக் கூடு பாய்தல்
பூமி *** ஞாலம், நிலம்
பரிகாசம் *** நகையாடல்
மரியாதை *** மதிப்பு
பரியந்தம் *** வரை
வமிசம் *** மரபு
தூமகேது *** வால்வெள்ளி
பரணிதீபம் *** முக்கூட்டு விளக்கு
பூரணசந்திரன் *** முழுமதி, மதியம்
வலய *** வளையம்
வயசு *** அகவை
தூரம் *** சேய்மை
பரம்பரை *** தலைமுறை
பரஸ்பரம் *** இருதலை
யமன் *** கூற்றுவன்,மறலி
ரஜா *** விடுமுறை
யஜமான் *** தலைவன், ஆண்டான்
பசு *** ஆ, ஆவு, ஆன்
ரங்க *** அரங்கம்
மங்கல *** மங்கலம்
பஞ்சேந்திரியம் *** ஐம்புலன்
பக்தி *** தேவடிமை
பக்தவத்ஸலம் *** அடியார்க்கருளி
பக்தன் *** அடியான்
லக்னம் *** ஓரை
பஞ்சாமிர்தம் *** ஐயமுது
பஞ்சாங்கம் *** ஐந்திறம்
பஞ்சநதீஸ்வரர் *** ஐயாற்றார்
லஞ்சம் *** கையூட்டு
மண்டப *** மண்டபம்
மண்டல *** மண்டலம்
மசாலை *** உசில்
வருஷாபிஷேகம் *** ஆட்டைத் திருமுழுக்கு
வருஷம் *** ஆண்டு
வருடம் *** ஆண்டு
மத்தி *** நடு
மத்தியானம் *** நண்பகல், உச்சிவேளை
பத்திரிக்கை *** தாளிகை
பத்திரம் *** தாள், இதழ்
பத்தினி *** கற்புடையாள்
ரத்தினம் *** மணி
பசலி *** பயிராண்டு
பந்து *** இனம்
லக்ஷ்மி *** திருமகள்
வசனம் *** உரைநடை
வசந்தோற்சவம் *** இளவேனில் விழாக்கட்டு
வன்மீகநாதர் *** பற்றிடங்கொண்டார்
வசூல் *** தண்டல்
துர்லபம் *** அரிது
துரோகம் *** இரண்டகம்
துஷ்டன் *** தீயவன்
துரியம், துரியாதீதம் *** அயர்வொடுக்கம்
துக்கம் *** துயரம்
டிக்கட்டு *** சீட்டு
ஜாதகம் *** பிறப்பியம்
ஜாதி *** குலம்
ஜாதிஜனம் *** குலங்குடும்பம்
ஜாக்கிரதை *** விழிப்பு
ஜாஸ்தி *** நிறைய
ஜீவியம் *** வாழ்க்கை
ஜீரணோத்தாரணம் *** பழுதுபார்ப்பு
ஜீரணம் *** செரிமானம்
ஜீவனம் *** பிழைப்பு
ஜீவன் *** உயிர்
ஜயாபஜயம் *** வெற்றி தோல்வி
ஜலதோஷம் *** நீர்க்கோர்வை, தடுமம்
ஜயம் *** வெற்றி
ஜலம், தீர்த்தம் *** தண்ணீர்
ஜனனமரணம் *** பிறப்பிறப்பு
ஜனம் *** நரல், நருள்
ஜனசங்கியை *** குடிமதிப்பு
ஜம்புத்தீவு *** நாவலம்பொழில்
ஜன்மம் *** பிறவி
ஜன்னி *** இசிவு
சுகம் *** உடல்நலம், இன்பம்
சுலோகம் *** சொலவம்
குஷ்டம் *** குட்டம்
சுதி *** கேள்வி
சுதந்தரம் *** உரிமை
சுவாஸம் *** மூச்சு, உயிர்ப்பு
சுவாமி *** இறை, ஆண்டான், கடவுள்
சுவாமிகள் *** அடிகள்
சுபாவம் *** இயல்பு
குமாஸ்தா *** கணக்கன்
சுரணை *** உணர்ச்சி
குதூகலம் *** களிப்பு
சுபர்ண *** சுவணம், உவணம்
க்ரியை *** வினை
சுபீட்சம் *** செழிப்பு
சுயராஜியம் *** தன்னரசு, தன்னாட்சி
சுயமாய் *** தானாய்
சுபம் *** மங்கலம்
சுந்தரன் *** சொக்கன்
சுத்தம் *** துப்புரவு
கும்பாபிஷேகம் *** குடநீராட்டு, கும்பநீராட்டு
சுழுத்தி *** துயில்
சாகரம் *** கடல்
சாக்ஷ¢ *** கண்டோன், கரி
சாதாரணம் *** பொதுவகை
சாதம் *** சோறு
சாமான் *** பண்டம்
சாயரட்சை *** மாலைப் பூசை
சாக்கிரம் *** நனவு
சாந்தி *** சமந்தி
சாஸ்திரம் *** கலை, நூல்
சாஸ்வதம் *** நிலைப்பு
முக(kh) *** முகம்
யுகாதி *** தெலுங்கு ஆண்டுப் பிறப்பு
சகலர் *** எல்லோரும்
சகலம் *** எல்லாம்
சகலன்,சட்டகன் *** ஓர்ப்புடையான், ஓரகத்தான்
சகஜம் *** வழக்கம்
சகசிரமலர் *** பூவகம்(ஆயிரம் இதழ்த் தாமரை)
சகஸ்ரநாமம் *** ஆயிரம் பெயர்
முகஸ்துதி *** முகமன்
சர்வமானியம் *** முற்றூட்டு
சிகிச்சை *** பண்டுவம்
சிநேகம், சினேகிதம் *** நட்பு
சிவ *** சிவன்
சிரஞ்சீவி *** நீடுவாழி
சிசு *** குழந்தை
சிங்காசனம் *** அரியணை
சிசுரு¨க்ஷ *** பணிவிடை
சிருஷ்டிதிதிசங்காரம் *** படைப்பு காப்பு அழிப்பு
சித்திரை *** மேழம்
சீத *** சீலம்
சீதகும்பம் *** குளிர்கும்பம், தண்குடம்
சீக்கிரம் *** சுருக்கு, சுருக்காய்,சடுதியில்
சகோதரன் *** உடன் பிறந்தான்
த்ரோண *** தோணி
புஷ்பவதியாதல் *** முதுக்குறைதல், பூப்படைதல்
புஷ்பம் *** பூ, மலர்
முஷ்டி *** முட்டி
புஷ்டி *** தடிப்பு, தசைப்பிடிப்பு
புதன் *** அறிவன்
சமாச்சாரம் *** செய்தி
சவால் *** அறைகூவல்
சரீரம் *** உடம்பு
சமீபம் *** அண்மை
சரணம் *** அடைக்கலம்
ப்ரதிமா *** வடிவம்
சபதம் *** வஞ்சினம், சினமொழி
ப்ரவாள *** பவளம்
த்வஜ அவரோஹணம் *** கொடிஇறக்கம்
சரஸ்வதி *** கலலைமகள், நாமகள்
சதுர்த்தசி *** நலமி
சனிக்கிழமை *** காரி
சனிப்பிரதோஷம் *** காரிமசண்டை
சங்கீதம் *** இசை, இன்னிசை
சங்கமேஸ்வரர் *** கூடுதுறையார்
சங்கடம் *** இடர்ப்பாடு
சங்கராந்தி *** பொங்கல்
சங்கரி *** அழி
சக்கரவர்த்தி *** மாவேந்தன்
சங்கம் *** கழகம்
சக்தி *** ஆற்றல்
யுக்தி *** உத்தி
முக்தி *** விடுதலை
சகுனம் *** குறி, புள்
புண்ணியம் *** நல்வினை, அறப்பயன்
சமுகம் *** மன்பதை
சந்நிதி *** திருமுன், முன்னிலை
சந்நியாசி *** துறவி
புருஷன் *** ஆடவன்
ருசி *** சுவை
சந்தோஷம் *** மகிழ்ச்சி
சந்தேகம் *** ஐயம், ஐயுறவு
சந்தி *** தலைக்கூடு
புத்தி *** மதி
புத்திமதி *** மதியுரை
சத்தியம் *** உண்மை
சந்திரன் *** மதி, நிலா
சந்ததி *** எச்சம்
சப்தபரிசகந்தரூபரஸம் *** சுவையொளியூறோசை நாற்றம்
சத்தம் *** ஓசை
சம்பாஷணை *** உரையாட்டு
சம்பாஷி *** உரையாடு
சம்பிரதம் *** மறவுரை, நெடுமொழி
சம்பூரணம் *** முழுநிறைவு
சம்பந்தம் *** தொடர்பு
ம்ருது *** மெது
சத்துரு, விரோதி *** பகைவன்
சமுச்சயம் *** அயிர்ப்பு
சமுசாரி *** குடும்பி
சம்புரோக்ஷணம் *** தூய்நிலைப்படுத்தம்
ந்ருத்த *** நடம், நட்டம்
சமுத்திரம் *** வாரி
முகூர்த்தம் *** முழுத்தம்
சன்மார்கம் *** நன்னெறி, நல்வழி
ஸ்கந்தன் *** கந்தன்
ஸ்நானம் *** குளிப்பு
ஸ்தோத்திரி *** பராவு
ஸ்தாபனம் *** நிறுவனம்
ஸ்திரீ *** பெண்டு
ஸ்மரணை *** உணர்ச்சி
ஸ்த்ரீ புருஷர் *** ஆண்பெண்
இஷ்டஜனபந்துமித்ரர் *** உற்றார் உறவினர்
இஷ்டம் *** விருப்பம்
இந்திரன் *** வேந்தன்
இருதயம் *** நெஞ்சம், நெஞ்சாங்குலை
வ்ருத்த *** வட்டம்
சூல *** சூலம்
சூரியகாந்தி *** பொழுதுவணங்கி
சூரியன் *** கதிரவன்

19 Comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

இந்த இடுகைக்கு மிக்க நன்றி. இவற்றை விக்சனரி தளத்தில் சேர்க்கப் பார்க்கிறேன். இது போன்று சொற் தொகுப்புகளை நீங்கள் பிற இடுகைகளில் தயவு செய்து அவற்றை அறியத் தாருங்கள். என் முகவரி ravidreams_03 at yahoo dot com . இராம. கி அவர்களின் சொற் தொகுப்புகளையும் நீங்கள் வைத்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அவற்றையும் அறியத் தாருங்கள். நன்றி,

ஞானவெட்டியான் said...

அன்பு இரவிசங்கர்,
தனி மின்னஞ்சலில் ஓரிரு நாட்களில் அனுப்பித் தருகிறேன்.
நன்றி.

சேதுக்கரசி said...

நல்ல பதிவுக்கு நன்றி...

ஞானவெட்டியான் said...

அன்பு சேதுக்கரசி,
மிக்க நன்றி.

சிறில் அலெக்ஸ் said...

ஐயா இப்படி அடுக்கியிருக்கீங்க?
சொல் பல சொல் ஆயிடுச்சு.

:)

மிக்க நன்றி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கஜேந்திரன் = வேழவேந்தன்
அருமையாக உள்ளது ஞானம் ஐயா!

வேழவேந்தன் என்ற மேடைப்பேச்சாளர் ஒருவர் தொலைக்காட்சியில் எல்லாம் வருவார்.

செல்லி said...

மிகவும் நல்ல பதிவு.இவை போதாது.இன்னும் தாருங்கள், ஐயா.
நன்றி

ஞானவெட்டியான் said...

அன்பு சிறில்,
மிக்க நன்றி.

ஞானவெட்டியான் said...

அன்பு இரவி,
மிக்க நன்றி

ஞானவெட்டியான் said...

அன்பு செல்லி,
முயலுகிறேன்.
நன்றி.

சேதுக்கரசி said...

சொல் என்ற சொல்லுக்கு, சிறியது என்றும் பொருள் உண்டா? (விக்கிபீடியாவில் பார்த்தேன்)

ஞானவெட்டியான் said...

//சொல் என்ற சொல்லுக்கு, சிறியது என்றும் பொருள் உண்டா? (விக்கிபீடியாவில் பார்த்தேன்)//

சூடமணி நிகண்டு: "சொல்லுரை கீர்த்தி நெல்லாந் தொடுத்தலே...."
சொல்=வார்த்தை, புகழ், நெல்.

பொதுவில்:
சொல்=கட்டளை,கள்,செந்நெல்,நெல், புகழ், பேச்சு, மொழி, வாக்கியம்.

அப்படி ஒரு பொருள் இருப்பதாகத் தெரியவில்லையே!

சேதுக்கரசி said...

நன்றி :-)

மாசிலா said...

யம்மாடியோவ்!
இம்மாத்தையுமா ஒரே வேளையில மனப்பாடம் செய்யுனும்?:-)

அன்பரே,
நல்ல உழைப்பு.
நீங்கள் கொடுத்திருப்பவை வெறும் வார்த்தைகள் மட்டும் அல்ல. மாற்று மொழி நஞ்சு காளான்களை அழிக்க கிடைத்திருக்கும் ஆயுதங்கள். இவ்வாக்கப்போரை சீரிய முறையில் வழி நடத்திச்செல்ல வாழ்த்துகிறேன்.

நான் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கட்டுரைகளை அயல் மொழியிலிருந்து தமிழாக்கம் செய்கையில் தலை முடியெல்லாம் பிய்த்துக்கொள்ள வேண்டும் போல் இருக்கும். சமயத்தில் விக்னரியே காலை வாரி விட்டுவிடும்.

இதற்கு என்ன செய்யலாம்?

ஞானவெட்டியான் said...

அன்பு நண்பர் மாசிலா,
வட்டார வழக்கினில் ஒளிந்துள்ள தமிழ் சொற்களை வழக்குக்கு கொண்டு வரவேண்டும். வேர்சொல்லை இனம் கண்டு சொற்களை உருவாக்கவேண்டும். அந்த சீரிய பணியில் இராமகி ஈடுபட்டுள்ளார். அவரின் தொழில்நுட்பச் சொற்கள் உள்ளன தொகுக்க நேரமில்ல. அதைத் தொகுத்தாலே பல சொற்கள் கிட்டும்.

Anonymous said...

உற்சவம் - ஊர்த்தம்
காவியம்- பாவியம்
கிரீடம் - மகுடம்(தமிழ் தான் - மகுட்ட என வடமொழியிற் திரியும்)
கஜேந்திரன் - கயவேந்தன்> கயேந்திரன்> கஜேந்திரன் : ஏற்கனவே இராம.கி அய்யாவால் விளக்கப்பட்டது!
கனகசபை - கனக சவை (கனகமும், சவையும் தமிழ் தாம்!)
அமாவாசை - அமையுவா
அவசியம்- அவ்வயம்
அதிர்ஷ்டம் - ஆகூழ்
துரதிர்ஷ்டம்- போகூழ்
அபிஷேகம் - அப்பிழிகம் = இதுவும் இராம.கி அய்யாவால் விளக்கப்பட்டது!
அவசரம் - அவக்கரம்
அக்னி நட்சத்திரம்- அழனி நாட்காட்டு/உடு
அஸ்திவாரம் - அடிவாரம்
ரோமம் - புறமயிர்
தோயம் - தோஷம்
ஜோதி - சோதி
ஜோதிடன் - சோதியன்
ஷணம் - கணம்
தாசன் - தாள்தன்
திருப்தி - சாலுமை, பொந்திகை
தம்பதி - இணையர், உகளர்
ராகம் - அராகம்
ரசம் - அரைசம்
யாத்திரை தமிழே! யாத்திரிகர் என எழுதப் பட வேண்டும். "ரீ" அல்ல!
இலாபம் - பொலுவு
விரோதம் - படிறிமை, பகை, வைரிமை
விஷேசம் - விதப்பு
வியாபாரம் - வாய்பகரம்
பிரயாணி - பயணி,வழிப்போக்கன்
மஹாபிஷேகம் - மா அப்பிழிகம்
வசந்தம் - பசந்தம்
பக்தி - பத்தி
பந்து - பந்தம், பந்தத்தார், இனம்
ஜலம் - சலம்
ஜயம் - செயம் (தமிழே! இராம.கி அய்யா செயினர் பற்றி எழுதியதைப் பர்க்க்வும்!)
சுகம் - சொக்கம்
சாஸ்திரம் - சாற்றம்
ஸ்துதி - துதி
சமுகம்- குமுகம்
இருதயம் - குருதயம்



இருபிறப்பிகள் அல்லது தமிழில் வேர்கொண்டவை:

யதார்த்தம்
விசாலக்கி
மீனாட்சி சுந்தரம்
அங்கவஸ்திரம்
ஆரோக்கியம்
ஆச்சாரம்
தீர்த்தம்
வார்த்தை
பத்திரம்
சாட்சி
சரணம்
சந்தோயம்
புத்திமதி
சம்பந்தம்
சூரியகாந்தி



பின்வருவன ஐயத்திற்குரியவை, இராம.கி அய்யா போன்றோரை வினவ வேண்டும்!

தூரம்
மரியாதை
பரிகாசம்
மூர்க்கம்
விகடம்
பகிரங்கம்
போகி
போதி
நியமி
நிர்வாகம்
சேவை
சேவகம்
ஆனந்தம்
ஆயுதம்
தந்தம்
பானம்
மூர்க்கம்
துக்கம்
அந்தரங்கம்
அந்தம்
ஆணை
ஆலயம்
ஆதரி
ஆகாரம்
வீரம்


இவை தவறாகப் குறிக்கப் பட்டுள்ளன.கீழ்வருவனவை தமிழ்ச் சொற்களே!

சங்கம்
முட்டி
குதுகலம்
பத்தினி( இச் சொல் தமிழிலிருந்து ஒழிக்கப் வேண்டியது!)
மத்தி
யமன்
ஆலோசி
பூர்த்தி
வருக்கம்
பூருவீகம்
பூசை
அலங்காரம்
தருமம்
தீவம்
மாதிரி
ஆயுள்
ஆகாயம்
வேதம்
யோசி
மேகம்
மோசம்
ஞாவகம்
ஞானம்
நாசம்
கருவம்
சேமம்
அப்பு

சுழுத்தியை நான் கோமாவுக்கு இணையாகப் பயன்படுத்துகிறேன்.

பாஸ்போர்ட் கிள்ளாக்கு அல்ல.கிள்ளாக்கு - டோக்கன்
பாஸ்போர்ட் - கடவுச்சீட்டு

ஆதி - பாகதம் போல, அல்லது பாகதம் தமிழ் இரண்டிற்கும் பொதுவானதா
தெரியவில்லை.

- பிரதாப்

ஞானவெட்டியான் said...

அன்பு பிரதாப்,
நான் பட்டியலிட்ட சொற்கள் எல்லாம் தேவநேயப் பாவாணர் முதல் இராமகி, அடியேன்("தாள்தன்"ன்னை விட எளிதுதானே!)வரை கண்டறியப்பட்டவைகளே!

தமிழ்ச் சொற்கள் புதையுண்டு கிடக்கின்றன. அவை தோ(நோ)ண்டி எடுக்கப்படுதல்வேண்டும். ப(பு)ழக்கத்தில் கொண்டுவருதல் வேண்டும்.

நான் இட்ட பட்டியல் ஆழியில்(கடலில்) ஒரு துளியே!

விழிப்புணர்வு உண்டாகாதா என்னும் ஆதங்கத்தால் தொகுக்கப்பட்டவை: இவை இறுதியல்ல; தொடக்கமே!

தொடருவது நம் கையில் தான்.

குமரன் (Kumaran) said...

ஐயா, உங்கள் பழைய பதிவில் இதே பட்டியலை முன்பு இட்டிருந்தீர்களே. அதிலிருந்து பல சொற்களை எடுத்து 'சொல் ஒரு சொல்' பதிவில் இட்டிருக்கிறேன். எந்த வாரமாவது எந்த சொல்லை எடுத்துக் கொள்வது என்று தெரியாவிட்டால் உங்கள் பதிவிற்கு வந்து பார்ப்பேன். நல்ல தொகுப்பு ஐயா. மிக்க நன்றி.

ஞானவெட்டியான் said...

அன்பு குமரா,
பழைய பட்டியலில் ஓரிரு மற்றங்களுடன் அப்படியே இட்டிருந்தேன்.
ஏதோ! ஓரிருவராகிலும் இது என்ன எனும் ஆர்வத்துடன் இவ்விடுகைக்கு வந்து பார்ப்பதில் மகிழ்ச்சியே!
நன்றி.