கந்தர் கலிவெண்பா - 13
*************************
மூன்றவத்தையுங் கழற்றி முத்தருடனே யிருத்தி
ஆன்றபர முத்தி யடைவித்துத் - தோன்றவரும்
யானெனதென் றற்ற இடமே திருவடியா
மோனபரா னந்த முடியாக - ஞானம்
திருவுருவா இச்சை செயலறிவு கண்ணா
அருளதுவே செங்கை யலரா - இருநிலமே
சந்நிதியா நிற்குந் தனிச்சுடரே யெவ்வுயிர்க்கும்
பின்னமற நின்ற பெருமானே - மின்னுருவம்
மூன்றவத்தை = மூன்று அவத்தை (கேவலாவத்தை, சகலாவத்தை, சுந்தாவத்தை) இவைகளை ஆணவ மாத்திரங் கலந்த உடல் இல்லா நிலை, உடலோடு கூடிய நிலை, உடலில் தூய அறிவுநிலை என்பர்.
முத்தர் = வீடுபேறு அடைந்தவர்
ஆன்ற = உயர்ந்த
யான் எனது = செருக்கு
உருவா = உருவாக
கண்ணா = முக்கண்ணாக
சந்நிதியா = சந்நிதியாக
பின்னமற = வேறு வேறாகப் பிரிக்கப் படாமல் கலந்து, வேற்றுமை நீங்க
பிறவிக்குக் காரணமாகிய யான் என்ற செருக்கும், என்னுடையதென்ற ஆசையும் ஒழிந்த இடமே திருவடியாகவும், மவுனமாய் அநுபவிக்கக் கூடிய மேலான இன்பமே திருமுடியாகவும், இறை ஞானமே திருமேனியாகவும், விருப்பம், செயல், அறிவு என்ற மூன்றுமே முக்கண்ணாகவும், கருணையே செந்தாமரை போன்ற திருக் கரங்களாகவும், உலகே தனது சந்நிதானமாகவுங் கொண்டு நிலைபெற்ற, ஒப்பற்ற ஒளியானவனே! எல்லா உயிர்களிலும் கலந்து வேற்றுமை அறியாதபடி நிற்கும் பெரியோனே! மின்னுகின்ற வடிவத்தை உடையதாய்...
Sunday, July 27, 2008
கந்தர் கலிவெண்பா - 13
Posted by ஞானவெட்டியான் at 12:42 PM 0 comments
Labels: கந்தர் கலிவெண்பா
இயேசு கடவுளா?
இன்று காலை மின்னஞ்சல் பெட்டியைத் திறந்ததும் எனக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. யாரோ ஒரு “பெயரில்லாப் பெரியசாமி” எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதில் இருந்த தலப்பைத்தான் இம்மின்னஞ்சலுக்கு இட்டுள்ளேன். அம்மின்னஞ்சலில் கீழ்கண்ட இணைப்பைத் தவிற வேறெதுமில்லை.
http://y-jesus.com/jesuscomplex_1.php?gclid=CNSE6s-035QCFQ8dewodSQsxSg
அதைச் சொடுக்கிச் சென்றால் கண்டேன் பின் வருபவற்றை:
”Is Jesus God?”
”Have you ever met somebody with such personal magnetism that they are always the center of attention? Possibly their personality or intelligence---but something about them is enigmatic. Well, that’s the way it was two thousand years ago with Jesus Christ.
Jesus’ greatness was obvious to all those who saw and heard him. But, whereas most great people simply fade into history books, Jesus of Nazareth is still the focus of numerous books and media controversy. And much of that controversy revolves around the radical claims Jesus made about himself. ”
Posted by ஞானவெட்டியான் at 11:48 AM 6 comments
Labels: Is Jesus God?
119.அருமையும் பெருமைதானு
119.அருமையும் பெருமைதானு மறிந்துடன்படுவர் தம்பால்
இருமையு மொருமையாகு மின்புறற் கேதுவுண்டாம்
பரிவிலாச் சகுனிபோலப் பண்புகெட்டவர் நட்பால்
ஒருமையி னிரயமெய்து மேதுவே யுயருமன்னோ.
(இப்படியும் சில நூல்களில் உண்டு)
அருமையாம் பெருமை கொண்ட வறிவினருறவு தன்னால்
இருமையு மொருமை யாகு மின்புறற்கேது வுண்டாம்
பரிவிலாச் சகுனி போலப் பண்புகெட் டவர்க டம்மால்
உரிமையாய் நிரய மெய்து மேதுவே யுயரு மன்னோ.
அருமையாம் = கிடைத்தற்கு அரிதாகிய
பெருமை = உயர்வு
உறவு = நட்பு
இன்பு = இன்பம்
உறற்கு = அடைவதற்கு
ஏது = காரணம்
பரிவு = அன்பு
அறிவுடையாரோடு நட்புக் கொண்டால், அவர்தம் உறவால் தம்மோடு நட்புக்கொண்டோரை நல்வழிப்படுத்தி அவர்க்கு இம்மை, மறுமை ஆகிய ஒருமையில் ஒரே விதமான இன்பத்தை அடைய வழி காட்டுவார்கள்.
அன்பிலாச் சகுனிபோல் கெட்டவர்களின் நட்புறவு கொண்டால், அவர்கள் தம்நண்பர்களை கெட்ட வழியில் புகுத்துவர். அது அவர்கட்கு நரகத்தை அடைய வழி உண்டாக்கும்.
Posted by ஞானவெட்டியான் at 11:31 AM 0 comments
Labels: விவேக சிந்தாமணி
86.இறைவனா லெடுத்தமாட
86.இறைவனா லெடுத்தமாடத் தில்லையம் பலத்திலே
அறிவினா வடுத்தகாய மஞ்சினா லமர்ந்ததே
கருவிநாத முண்டுபோய் கழன்றவாச லொன்பதும்
ஒருவரா யொருவர்கோடி யுள்ளுளே யமர்ந்ததே.
கருவி = பொறியும், அந்தக்கரணங்களும்
கருவி கழலுதல் = பலம் கெடுதல்
நாதம் = விந்து
தில்லையம்பலத்திலே உறையும்(எழுந்தருளியிருக்கும்) இறைவனால் ஐந்து பூதங்களாகிய நீர்,நிலம்,நெருப்பு,காற்று,ஆகாயம் ஆகியவற்றால் மாடமாகிய உடல் உருவாக்கப்பட்டது. அதில் நாதமாகிய விந்து பெலம் குன்ற(குறைய), பொறிகளும் அந்தக்கரணங்களும் பெலம் குன்றி சீரழிந்துவிடும். அப்படி விந்து நாதம் பெலம் குன்றாது, ஒன்பது வாயில்களான, 2 கண், 2 நாசித் துவாரம், 2 காது, 1 வாய், 1 மூத்திரக் குழல், 1 மலக் குழல், ஆகியவற்றை ஒன்று சேர அடைத்து, சீவனாகிய சிவனை உடலுக்குள் செலுத்தவேண்டிய இடத்தில் மாத்திரம் செலுத்துபவர்கள் கோடியில் ஒருவரே.
Posted by ஞானவெட்டியான் at 10:45 AM 0 comments
Labels: ஒன்பது வாயில், கருவி, சிவவாக்கியர் பாடல்கள், விந்து
Friday, July 25, 2008
2.26 - பிரபுலிங்க லீலை
இறைவியினிடம் அரம்பை மாதர் பலர் வருதல்
2.26 இருந்த ஆரருள் எம்பெரு மாட்டிபால்
குரும்பை நாணுமென் கொங்கைப் பொறையினால்
வருந்து நூற்பக வன்ன மருங்குலார்
அரம்பை மாதர் அளப்பிலர் எய்தினார்.
ஆர் - நிறைந்த
குரும்பை - பனங்குரும்பை, தென்னங்குரும்பை ஆகியன.
பொறை - சுமை.
நூல்பகவு அன்ன - நூலைப் பிளந்தாற் போன்ற.
மருங்குல் - இடை.
அளப்பிலர் - அளவில்லாதவர்கள்.
மருங்குலார் ஆகிய அரம்பை மாதர் என்க.
மருங்குல் ஆர் - இடைபொருந்திய எனவும் கொள்ளலாம்.
பனங்குரும்பையின் சுமையை உடைய கொங்கையைச் சுமப்பதால் நூல்போன்ற இடைநோக அரம்பை முதலிய தேவகன்னியர், நிறைந்த அருள் பொருந்திய எம்பெருமாட்டியாம் இறைவியிடம் வந்தனர்.
Posted by ஞானவெட்டியான் at 11:45 AM 0 comments
Thursday, July 24, 2008
Tuesday, July 01, 2008
பிரபுலிங்க லீலை - 2.25
அடிகளிற் சிலம்பு
2.25 புத்த னிச்சம் படினும் பொறாமையை
எய்த்து மற்றை யிருமணத் தம்மியில்
அத்தன் வைத்த அடிக்கம லங்களின்
முத்த ரிச்செஞ் சிலம்பு முழங்குற.
புத்து அனிச்சம் - புதிய அனிச்சமலர்.
எய்த்தும்- உணர்ந்திருந்தும்.
அத்தன்-இறைவன்.
முத்து அரி-முத்துக்களைப் பரல்களாகக் கொண்ட.
இருமணம் என்பது மலையரசன் மகளாகப் பிறந்து மணம் புரிந்ததையும், மலையத்துவச பாண்டியன் மகளாகப் பிறந்து மணம் புரிந்ததையும் குறிக்கும். இவ்விரு மணங்களிலும் அம்மியின்மீது இறைவன் வைத்த பாதங்கள் எப்படி இருந்ததாம்? இப்பாதங்களைக் கண்டு புது அனிச்ச மலர் பொறாமை கொண்டதாம். இப்படிப்பட்ட பாதங்களில் இறைவன் முத்துப் பரல்கள்களை உள்ளடக்கிய சிலம்பு அணிந்துள்ளார்.
Posted by ஞானவெட்டியான் at 9:21 AM 0 comments







