இறைவியினிடம் அரம்பை மாதர் பலர் வருதல்
2.26 இருந்த ஆரருள் எம்பெரு மாட்டிபால்
குரும்பை நாணுமென் கொங்கைப் பொறையினால்
வருந்து நூற்பக வன்ன மருங்குலார்
அரம்பை மாதர் அளப்பிலர் எய்தினார்.
ஆர் - நிறைந்த
குரும்பை - பனங்குரும்பை, தென்னங்குரும்பை ஆகியன.
பொறை - சுமை.
நூல்பகவு அன்ன - நூலைப் பிளந்தாற் போன்ற.
மருங்குல் - இடை.
அளப்பிலர் - அளவில்லாதவர்கள்.
மருங்குலார் ஆகிய அரம்பை மாதர் என்க.
மருங்குல் ஆர் - இடைபொருந்திய எனவும் கொள்ளலாம்.
பனங்குரும்பையின் சுமையை உடைய கொங்கையைச் சுமப்பதால் நூல்போன்ற இடைநோக அரம்பை முதலிய தேவகன்னியர், நிறைந்த அருள் பொருந்திய எம்பெருமாட்டியாம் இறைவியிடம் வந்தனர்.
Friday, July 25, 2008
2.26 - பிரபுலிங்க லீலை
Posted by ஞானவெட்டியான் at 11:45 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment