86.இறைவனா லெடுத்தமாடத் தில்லையம் பலத்திலே
அறிவினா வடுத்தகாய மஞ்சினா லமர்ந்ததே
கருவிநாத முண்டுபோய் கழன்றவாச லொன்பதும்
ஒருவரா யொருவர்கோடி யுள்ளுளே யமர்ந்ததே.
கருவி = பொறியும், அந்தக்கரணங்களும்
கருவி கழலுதல் = பலம் கெடுதல்
நாதம் = விந்து
தில்லையம்பலத்திலே உறையும்(எழுந்தருளியிருக்கும்) இறைவனால் ஐந்து பூதங்களாகிய நீர்,நிலம்,நெருப்பு,காற்று,ஆகாயம் ஆகியவற்றால் மாடமாகிய உடல் உருவாக்கப்பட்டது. அதில் நாதமாகிய விந்து பெலம் குன்ற(குறைய), பொறிகளும் அந்தக்கரணங்களும் பெலம் குன்றி சீரழிந்துவிடும். அப்படி விந்து நாதம் பெலம் குன்றாது, ஒன்பது வாயில்களான, 2 கண், 2 நாசித் துவாரம், 2 காது, 1 வாய், 1 மூத்திரக் குழல், 1 மலக் குழல், ஆகியவற்றை ஒன்று சேர அடைத்து, சீவனாகிய சிவனை உடலுக்குள் செலுத்தவேண்டிய இடத்தில் மாத்திரம் செலுத்துபவர்கள் கோடியில் ஒருவரே.
Sunday, July 27, 2008
86.இறைவனா லெடுத்தமாட
Posted by ஞானவெட்டியான் at 10:45 AM
Labels: ஒன்பது வாயில், கருவி, சிவவாக்கியர் பாடல்கள், விந்து
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment