Sunday, November 22, 2009

பிருங்கி முனிவர் மகிழல்

2.43 ஊன்று ஞானமோ டுயர்வயி ராகநல் லொழுக்கம்
மூன்று காலெனக் கொண்டான் முகத்திள முறுவல்
தோன்று மாறுநின் றாடினன் சுடரவன் இருளைப்
போன்று மாயையைத் தொலைத்திடு பிருங்கியென் புனிதன்.

ஊன்று - உறுதியாகத் தாங்கப்பெற்ற.
வயிராகம் - வைராக்கியம், உறுதி.
முறுவல் - புன்னகை.
புனிதன் - தூயோன்.

ஞானம், வைராக்கியம், நல்லொழுக்கம் இவை மூன்றும் கால்களாகக் கொண்டு, முகத்தில் இளஞ் சிரிப்பு தோன்றும்படி, இருளை அழித்துக் கதிரவன் வருவதுபோல் மாயையை அழித்து ஆங்கே நின்று ஆடினன் பிருங்கி முனிவன். அ·து அரனுக்கு முறுவலை விளைத்ததாம்.




0 Comments: