வீர மாகாளி வருதல்
2.42 வீர மாதருக் கில்லையென் றுரைப்பதென் விளங்க
வீர மாதென அறிகிலி ரோவென விளம்பி
வீர யோகினி வெள்ளமோ டமர்பொர விரும்பும்
வீர காளியும் புகுந்தனள் அவையிடை விரைந்து.
விளங்க - விளக்கமாக.
அமர்பொர - போர்செய்ய.
யோகினி வெள்ளம் - காளிக்கு ஏவல் செய்யும் கூட்டம்.
வீரம் மாதருக்கு இல்லையென உரைப்பவர் முன்னே, எருமைமுக அசுரன் முதலியோரை வென்ற வீர மாது நான் என அறிவீரோவென விளக்கமாக இயம்பித் தன்னாற்றல் புலப்படத் தனக்கு ஏவல் செய்யும் யோகினிக் கூட்டம் முதலானோருடன் எப்பொழுதும் போர் புரிய ஆவலுடைய காளியும் அவ்விடம் வந்தனள்.
Tuesday, November 10, 2009
பிரபுலிங்க லீலை - 2.42
Posted by ஞானவெட்டியான் at 11:34 AM
Labels: வீர மாகாளி
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment