காப்பு
*******
3."ஒன்று திசைக்குருவி யொன்றிவரு மோர்தூதன்
நின்றநிலை யாருடத்தில் நேருமே - நன்று
வழுவா துரைத்தாயும் வல்லவர்கள் சொன்ன
முழுவா கடத்தின் முறை."
நன்றாக யாதொரு தவறுமின்றி வழுக்காது ஆஅய்ந்து உரைக்கும் வல்லவர்கள் சொன்ன முழுமையான பட்சி நூலின் முறையாவது, தன்னிடம் வினாவெழுப்ப வந்த தூதன், அவன் வந்த திசை, நின்ற இடம், நிற்கும் நிலை, எழுப்பிய வினாவின் முதலெழுத்து ஆகியவற்றை ஆய்ந்து சொல்லலாம். இங்கு "வாகடம்" என்பது வைத்திய நூலை மட்டும் குறிக்காது சாற்றிற நூல்களையெல்லாம் குறிக்கும். நின்ற இடத்தை வைத்துச் சொல்லலுக்கு "நட்ட சாதகம்" என்னும் நூல் உதவும். "சர நூல்" நிற்கும் நிலையை வைத்துச் சொல்ல உதவும். ஆக, வழக்கிலிருக்கும் இந்நுண்கலைகள் எல்லாம் அறிந்தவனாலேயே சரியாகக் கணிக்க இயலும்.
2 Comments:
இதனை கற்றுத்தேர்ந்தவர்கள் இன்றும் யாராவது இருக்காங்களா?
அன்பு குமார்,
இருக்கலாம்.......
இல்லாமலும் இருக்கலாம்.......
Post a Comment