திருநோக்கும் திருநகையும்
2.19 ஈச னார்முக மென்னு முளரியில்
ஆசை கூரும் அளிவிழிக் காரருள்
வாச மாமலர் வாய்க்கிள வெண்ணகை
தேசு லாமணி யாகச் சிறந்துற.
முளரி - தாமரை.
அளிவிழி - வண்டுகளாகிய கண்கள்,
ஆர் அருள் - நிறைந்த திருவருள்,
இளவெண் நகை - புன்னகை,
தேசு உலாம் - ஒளி விளங்குகின்ற,
அணி - அணிகலன்
ஈசனின் முகத்தாமரையில் திருவருள் பொங்கித்தளும்பும் விழிகளும் நறுமணம் வீசும் வாயில் புன்னகையும் ஒளிவீசும் மணிகளாகத் திகழ்கின்றன.
விழிக்கு நிறைந்த திருவருளும், வாய்க்குப் புன்னகயும் அணியாக என உம்மை கூட்டிப் பொருள் கொள்தல் நலம்.
இறைவி யணிந்துள்ள அணிகலன்களைக் கூறத் தொடங்கியவர், கூந்தலில் மாலையையும், நெற்றியில் சுட்டியையுங் கூறிக் கண்ணுக்கு அருளையும், வாய்க்குப் புன்னகையும் அணிகலன்களாகக் கூறினார். கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் என்றார் திருவள்ளுவரும். முகத்திலே தாமரையயும் விழியிலே வண்டையும் உருவகப்படுத்திக் கூறலால் இது உருவகவணி.
Thursday, June 19, 2008
பிரபுலிங்க லீலை - 2.19
Posted by ஞானவெட்டியான் at 9:56 AM
Labels: பிரபுலிங்க லீலை
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
வாழ்த்துக்கள் ஞான வெட்டியான் சார். ஐயனின் முக் அழகை கொண்டு வந்ததற்கு
அன்பு கைலாஷி,
பிரபுலிங்க லீலை படிக்கக்கூட ஒருவர் உள்ளார் என்பதை என்னால் நம்ப இயலவில்லை.
மிக்க நன்றி.
Post a Comment