"அறியதோர் நமசிவாய மாதியந்த மானதும்
ஆறிரண்டு நூறுதேவ ரன்றுரைத்த மந்திரம்
சுரியதோ ரெழுத்தையுன்னி சொல்லுவேன்
...........சிவவாக்கியம்
தோ(ஷ)டதோ(ஷ்)ட பாவமாய்கை தூரதூர வோடவே
கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக்
...........கைதொழக்
கலைகள்நூல்கள் ஞானமுங் கருத்தில்
...........வந்துதிக்கவே
பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்
பேயனாகி யோதிடும் பிழை பொறுக்க வேண்டுமே."
சுரிய = சுழலும்; கற்பகம் = யானைமுகன்;
உரை:- "நமசிவய" எனும் மந்திரமே ஆதியும் அந்தமும் என்று அறி. அங்ஙனம் அறிந்தபின்னர் முப்பத்துமுக்கோடி தேவர் எனப்படும் ஆயிரத்து இருநூறு வகைத் தேவரும் அம்மந்திரத்தையே உரைத்துக் கொண்டுள்ளனர். சுழலும் எழுத்தாம் குத்தெழுத்தை நினைவினில் நிறுத்திச் சொல்லுகிறேன் இச்சிவவாக்கியத்தை. தோடங்களும், பாவங்களும், மாயைகளும் தூர எட்டி ஓடவும், கலைகள், நூல்கள் ஞானம் ஆகியவை கருத்தில் வந்துதிக்கவும் கரிய முகத்தையுடைய கற்பகமெனும் யானைமுகனைக் கைதொழுது பேயனாகிய யான் ஓதிடும் இன்னூலில் உள்ள பிழைகளையெல்லாம் பெரியோர்கள், சிறியோர்கள், கற்றறிந்தோர் ஆகியோர் பொருத்தருள வேண்டும்.
Tuesday, January 01, 2008
சிவவாக்கியர் பாடல்கள் - காப்புச் செய்யுள்
Posted by ஞானவெட்டியான் at 5:03 AM
Labels: சிவவாக்கியர் பாடல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment