சிவவாக்கியர்
****************
83.கானமற்ற காட்டகத்தில் வெந்தெழுந்த நீறுபோல்
ஞானமுற்ற நெஞ்சகத்தில் வல்லதேது மில்லையே
ஊனமற்ற சோதியோடு உணர்வு சேர்ந்தடக்கினால்
தேனகத்தின் ஊறல்போல் தெளிந்ததே சிவாயமே.
கானம்=சோலை
ஊறல்=சாறு
ஞானம் விளைந்து முற்றிய மனதுடன் உள்ள ஞானிகளிடத்தே, பூங்காவாகிய சோலை இல்லாத வறட்டுக் காட்டினிலே தீப்பிடித்து வெந்தபின் மிஞ்சும் சாம்பல்போல் மாயையாகிய ஆசை(இச்சைகள்) எரிந்து சாம்பலாகிவிடும். எவ்விதக் களங்கமும் அற்ற அருட்பெருஞ்சோதியுடன் தன் உணர்வுகளை ஒன்றிக் கலந்து சலனமற்று இருப்போருக்கு சிவன் தேன்கூட்டின் சாறாம் தெளிந்த தேன்போல் விளங்குவார்.
Tuesday, January 01, 2008
83.கானமற்ற காட்டகத்தில் வெந்தெழுந்த
Posted by ஞானவெட்டியான் at 10:28 AM
Labels: சிவவாக்கியர் பாடல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
நெடுநாள் கழித்து மீண்டும் உங்களைக் காண்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து எழுத .. எழுதிக் குவிக்க .. வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி, தருமி.
கடையிலே தேன் வாங்கிப் பழகிபபோனதால்...
அதென்ன தெளிந்த தேன்?ஐயா.
Post a Comment