Tuesday, January 01, 2008

82.படுகின்ற உம்பருக்குள் ஆடுபாதம்

சிவவாக்கியர்
**************
82.படுகின்ற உம்பருக்குள் ஆடுபாதம் உன்னியே

பழுதிலாத தர்மகூட்ட மிட்டஎங்கள் பரமனே
நீடுசெம்பொன்னம் பலத்துள் ஆடுகின்ற அப்பனே
நீலகண்ட காளகண்ட நித்யகல் லியாணனே.

உம்பர்=ஆகாயம்
படுகின்ற=கூர்மயான
ஆடுபாதம்=கண்கள்
உன்னி=சலனமின்றி நினைவில் நின்று

சிதாகாயமான தலைக்குள் கூர்மையான கண்பார்வையால் சலனமின்றி நினைவில் நின்றால், செம்பொன்னாலாகிய ஆலயத்தில் ஆடிக்கொண்டுள்ள அப்பனாம் நீலகண்டனாம் காளகண்டனாம் நித்திய கலியாணனாம் சீவனை உணரலாம்.

2 Comments:

Anonymous said...

இந்த மாதிரி விளக்கம் இருப்பதால் நன்றாக புரிந்து படிக்க முடிகிறது.
மிக்க நன்றி,ஐயா.

Anonymous said...

இயன்றவரை விளக்க முயலுகிறேன்.