சிவவாக்கியர்
***************
81.மாடுகன்று செல்வமு மனைவிமைந்தர் மகிழவே
மாடமாளி கைப்புறத்தில் வாழுகின்ற நாளிலே
ஓடிவந்து காலதூதர் சடுதியாக மோதவே
உடல்கிடந் துயிர்கழன்ற வுண்மைகண்டு முணர்கிலீர்.
மாடு, அதன் கன்றுகள், செல்வம், மனைவி, குழந்தைகள் ஆகியவைகளுடன் மாட மாளிகையிலே வாழுகின்ற காலத்தில், கால தூதனாம் எமன் வெகுவேகமாக ஓடிவந்து கணப்போதில் மோதும்போது உடல் கீழே கிடக்கும்; உயிர் பறக்கும். அது கண்டபின்னும் மற்றவர்கள்(கண்டுகொண்டிருப்பவர்கள்) நிலையாமை என்னும் உண்மையை உணர மறுக்கின்றனரே!
Tuesday, January 01, 2008
81.மாடுகன்று செல்வமு மனைவிமைந்தர்
Posted by ஞானவெட்டியான் at 10:18 AM
Labels: சிவவாக்கியர் பாடல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
பல நாட்கள் கழித்து பார்க்கிறேன் உங்கள் பதிவை.
இந்த நிலையாமையை அவ்வப்போது ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது,இல்லாவிட்டால் கிடைக்கும் சந்தில் சிந்து பாட ஆரம்பிக்கிறது.. மனது.
உடல் நலம் நன்றாக இருந்து இது மாதிரி பதிவுகள் போட ஆண்டவன் அருள்புரியட்டும்.
அன்பு குமார்,
மிக்க நன்றி.
எப்போதும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டிய பாடல். நன்றி ஐயா.
அன்பு மதுரையம்பதி்,
மிக்க நன்றி.
Post a Comment