Tuesday, January 01, 2008

79.மிக்க செல்வநீ படைத்த விறகுமேவி

சிவவாக்கியர்
**************
79.மிக்க செல்வநீ படைத்த விறகுமேவிப் பாவிகாள்

விறகுடன் கொளுத்திமேனி வெந்துபோவ தறிகிலீர்

மக்கள்பெண்டிர் சுற்றமென்று மாயைகாணு மிவையெலாம்

மறலிவந் தழைத்தபோது வந்துகூட லாகுமோ?


மறலி = எமன்

எவ்வளவு மிகுதியாகச் செல்வம் படைத்தவனாயிருந்தாலும், இறந்தபின் விறகில் வைத்துக் கொளுத்தி விடுவார்கள்;பிறகு வெந்தபின் சாம்பல் ஒன்றே மீதி. மாடு, மனை,மக்கள், சுற்றம் ஆகிய பந்த பாசம் தருபவை எல்லாம் எமன் வந்து அழைக்கும்போது துணை வருவார்களோ? மாட்டார்கள்.

"வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ" எனக் கண்ணதாசன் எழுதியதை இங்கு நினைவு கூறுதல் பொருத்தமானதே.

4 Comments:

Anonymous said...

அருமையான தத்துவப் பாடல்,
நகத்தை வெட்டுவது போல், உயிர் உடலை வெட்டிவிட்டு ஒரு நொடியில் சென்றுவிடும். "தான்" என்ற அகங்காரம் நீங்கி "நான்" என்ற அகங்காராத்தில் நிற்க அனைத்தும் விளங்கும்.

Anonymous said...

ஆமாம் கண்ணன்.
வெள்ளரிப்பழம் உடைவது போல் உடைந்துவிடும் உடல். அகம் நீங்கி வாழ்தலே இனிமை.

Anonymous said...

ஐயா!
இவர் காலம் பட்டனத்தாருக்கு முற்பட்டதா??சாயல் உள்ளதே!!
அறிய ஆவல்

Anonymous said...

அன்பு யோகன்,
சிவவாக்கியர் வரலாறு
படியுங்கள். இவரின் காலம் பற்றி குறிப்புக்கள் கிடைக்கவில்லை.