Tuesday, January 01, 2008

53.நாழியும் நாழியுப்பு நாழியான

சிவவாக்கியர்
**************
53.நாழியும் நாழியுப்பு நாழியான வாறுபோல்

ஆழியோனு மீசனு மமர்ந்துவாழ்ந் திருந்திடம்

எருதிலேறு மீசனு மியங்குசக்ரத் தரனையும்

வேறுகூறு பேசுவார் வீழ்வர்வீ ணரகிலே!


நாழி = ஒருபடி
நாழியுப்பு = ஒரு படியின் எல்லை

படியும், படியின் எல்லையும் படிக்குள் அடக்கம். ஆழ்கடலில் துயின்று கொண்டுள்ள சக்கரத்தைக் கையிலேந்தும் நாரணனும், எருதின்மீது அமர்ந்துள்ள அரனும், வேறு வேறு என உடலின் தத்துவம் அறியாமல் பேசுவார்கள். இதை அறியாதவர்கள் நரகில் வீழ்வார்.

2 Comments:

Anonymous said...

ஒரு நாழி நீரும், ஒரு நாழி உப்பும் கலந்து, இரு நாழி ஆகாமல், ஒரு நாழியாகவே ஆவதுபோல், என்று ஒரு விளக்க உரை இப்பாடலுக்குப் படித்திருந்தேன்.

Anonymous said...

அன்பு ஹரன்,

//ஒரு நாழி நீரும், ஒரு நாழி உப்பும் கலந்து, இரு நாழி ஆகாமல், ஒரு நாழியாகவே ஆவதுபோல்,//

"நாழியும் நாழியுப்பு நாழியான வாறுபோல்"
என்றுதான் பாடலில் உள்ளது. நீர் என்று எங்கேயும் வரவில்லை.

ஆகவே,"படியும், படியின் எல்லையும் படிக்குள் அடக்கம்" என்றுதான் கொள்ளவேண்டும்.

இதுதான் எம் புரிதல்.