Tuesday, January 01, 2008

45.சாதியாவ தேதடா சலந்திரண்ட

சிவவாக்கியர்
****************
45.சாதியாவ தேதடா சலந்திரண்ட நீரெலாம்

பூதவாச லொன்றலோ பூதமைந்து மொன்றலோ

காதில்வாளி காரைகம்பி பாடகம்பொ னொன்றலோ

சாதிபேத மோதுகின்ற தன்மையென்ன தன்மையே?


நீர் எங்கிருந்தாலும் அதற்குச் சாதி உண்டா? பொன்னால் செய்யப்பட்ட நகைகளைக் காதில், வாளி, காரை, கம்பி, பாடகம் என உருமாற்றம் செய்து அணிந்துகொள்கிறீர்கள். ஆயினும் அவைகளெல்லாம் பொன்னே.
இவ்வுடல் ஐந்து பூதங்களால் ஆகியது. இவ்வைந்து பூதங்களும் ஒன்றியபின்தான் உயிர் உண்டாகிறது. அது இருக்குமிடமும் ஒரு வாயில்தான்; அதுதான் நம் வாய்க்குள்ளேதான். நாக்கின் அடியின் உள்ள நரம்பு முடிச்சில்தான். இவைகளில் எல்லாம் சாதிவேறுபாடு எங்குள்ளது? பிறகு மற்றவைகளில் சாதிபேதம் பார்க்கும் தன்மையை என்ன சொல்வது?

4 Comments:

Anonymous said...

நான் படிக்கும் பதிவுகள் என்ற தலைப்பில் பதிவுகள் பட்டியலை என்னுடைய வலை பக்கத்தில் வெளியிட எண்ணிய உடன் முதலில் தோன்றியது உங்கள் பெயர். உங்கள் பதிவின் சுட்டியைத்தேடியதும் கிடைத்தது இந்த அருமையான புதையல் வரிகள். மிக்க நன்றி.

http://supersubra.googlepages.com

Anonymous said...

அன்பின் supersubra,

//நான் படிக்கும் பதிவுகள் என்ற தலைப்பில் பதிவுகள் பட்டியலை என்னுடைய வலை பக்கத்தில் வெளியிட எண்ணிய உடன் முதலில் தோன்றியது உங்கள் பெயர்.//

மிக்க நன்றி. பலன் கிட்டினால் மகிழ்வேன்.

Anonymous said...

மிக நல்ல பாடல் ஐயா.

Anonymous said...

அன்பு குமரா,
மிக்க நன்றி