சிவவாக்கியர் பாடல்கள்
***************************
38.பறைச்சி ஆவதேதடா பணத்தி ஆவதேதடா?
இறைச்சி தோல் எலும்பினும்இலக்கம்இட்டிருக்குதோ?
பறைச்சி போகம் வேறதோ, பணத்தி போகம்வேறதோ?
பறைச்சியும் பணத்தியும் பகுத்து பாரும் உம்முளே.
முதல் மூன்று வரிகளுக்கும் பொருள் சொல்லவேண்டியதில்லை. நான்காம் வரியில் உள்ள "பறைச்சி" "பணத்தி" ஆகியவைகளில்தான் சூக்குமம் உள்ளது. சாதியில் பறைச்சி அடிமட்டத்துள்ளவள். (பார்ப்)பணத்தியோ மேல் மட்டத்துள்ளாள்.
எண்சாண் உடலுக்கு சிரமே பிரதானம். அதுவே இமயம். அதுவே கைலாயம்.
அத்தலையில் கீழ்மட்டத்துள்ளே இருப்பதையும், மேல்மட்டத்துள்ளே
இருப்பதையும் உரித்து உடைத்து விண்டு பாருங்கள்.
கீழ் மட்டத்துள்ளது - வாய் - பறச்சி
மேல் மட்டத்துள்ளது - சிதாகாயம்என்னும் அண்ணாமலை - பணத்தி
Tuesday, January 01, 2008
38.பறைச்சி ஆவதேதடா பணத்தி
Posted by ஞானவெட்டியான் at 6:12 AM
Labels: சிவவாக்கியர் பாடல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
14 Comments:
//எண்சாண் உடலுக்கு சிரமே பிரதானம். அதுவே இமயம். அதுவே கைலாயம்.
அத்தலையில் கீழ்மட்டத்துள்ளே இருப்பதையும், மேல்மட்டத்துள்ளே
இருப்பதையும் உரித்து உடைத்து விண்டு பாருங்கள்.
//
ஐயா,
இதை வைத்துதான் மாரியம்மன் உடலைத் புறக்கனித்து(வெட்டி விட்டு) தலையை மட்டும் ஒரு சமூகம் வழிபட்டு வருகிறதோ ?
ஞானவெட்டியான் அவர்களே, எனக்கு மிகவும் பிடித்த சித்தர் பாடல்களில் இதுவும் ஒன்று. ஆயினும் நீங்கள் இப்பாடலின் கடைசி வரிக்கு சொல்லியுள்ள பொருள் எனக்கு விளங்கவில்லை. சற்று விளக்கமுடியுமா? நன்றி
அன்பு கண்ணன்,
//இதை வைத்துதான் மாரியம்மன் உடலைத் புறக்கனித்து(வெட்டி விட்டு) தலையை மட்டும் ஒரு சமூகம் வழிபட்டு வருகிறதோ ?//
மாரியம்மன் உடலைத் துணித்து(வெட்டி) விட்டு தலையை மட்டும் துதிப்பதன் நோக்கம் இதுதான். கைலாயம்(சூக்கும உடல்) தலையில் மட்டும்தான் உள்ளது. உடலின் கீழ்ப்பகுதியில் அல்ல.
நல்ல பாட்டு ஞானவெட்டியான் அவர்களே.
பறச்சிக்கும் பாப்பாத்திக்கும்ன் சண்டை என்று கொஞ்சநாள் முன்பு ஒரு பெண்மணி பதிவு எழுதி இருந்தார். அதில் தன் சாதியைப் பற்றி பெருமையாக பேசிய பாப்பாத்தியை பறச்சி கேள்விகள் கேட்டு மடக்கியதை எழுதி இருந்தார்.
இப்போ பறச்சி தலையில் விஷயம் இருக்கு, பார்ப்பணத்தி தலையில் விஷயம் இல்லை என்று சொல்ல வருகிறீர்களா?
அன்பு தங்கவேல்,
//நீங்கள் இப்பாடலின் கடைசி வரிக்கு சொல்லியுள்ள பொருள் எனக்கு விளங்கவில்லை. சற்று விளக்கமுடியுமா?//
"அத்தலையில் கீழ்மட்டத்துள்ளே இருப்பதையும், மேல்மட்டத்துள்ளே
இருப்பதையும் உரித்து உடைத்து விண்டு பாருங்கள்."
இதற்குப் பொருள் வேண்டுமா? அல்லது எதற்கெனக் குறித்து எழுதுங்கள். எனக்குத் தெரிந்தவரை விளக்கமுயலுகிறேன்.
வந்தேறி பரதேசிகளான பார்ப்பனன் கொண்டுவந்து புகுத்திய பைத்தியக்கார சிவன் எனும் மாயத்தில் புத்தியிழந்து எவனோ வேறு ஒரு பரதேசி சுத்தமான தமிழில் இந்த மண்ணுக்கே சொந்தமான பூர்வீக குடிகளில் ஒர்வர்களான பறையர்களை சாடி கீழ்த்தனமாக எழுதி இருந்தால் நீங்கள் எந்த உரிமையில் அதை தமிழ்மணத்தில் பதித்தீர்கள்? நீங்கள் துதிபாடும் சைவர்களைப்பற்றி இன்னும் நிறைய தெரிந்துகொள்ளவேண்டும் என்றால் சுவனப்பிரியனின் (http://suvanappiriyan.blogspot.com/2006/11/blog-post_22.html)"சமண பௌத்த மதங்களை அழித்த சைவம்" பதிப்பை படித்துவிட்டு வாருங்கள்.
அன்பு விடாது கருப்பு,
//இப்போ பறச்சி தலையில் விஷயம் இருக்கு, பார்ப்பணத்தி தலையில் விஷயம் இல்லை என்று சொல்ல வருகிறீர்களா?//
நான் இந்த சண்டைக்கெல்லாம் வர இயலாது. எனக்கு நிறைய வேலை இருக்கு. என்னை இழுக்கவேண்டாம்.
"சுட்டும் பொருள் நோக்காது சுட்டிய விரலைப் பிடித்துதொங்க எனக்கு விருப்பமில்லை."
ஞானம் எட்டியில் "வேண்டுகோள்" போட்டுள்ளேன்; படியுங்கள்.
விட்டுவிடுங்கள் ஐயா!(குறியீடு smily போடத்தெரியவில்லை)
மிகவும் அருமையான விளக்கம். யாராயினும் ஒன்றே என்ற கருத்தை அருமையாக விளக்கியிருக்கின்றீர்கள்.
வேலனை வேலோடு எழுதும் பொழுது வேலானது அடியில் தொடங்கி காது வரை சென்றிருக்க வேண்டும் என்று சொல்கிறார்களே. அதை விடக் குறைவாக இருக்கக் கூடாதாமே. அதன் உட்பொருள் என்ன?
சிவவாக்கியரின் இன்னுமொரு அருமையான பாடல்.
ஐயா. வெகு நாட்களாக நானும் உங்களைக் கேட்கவேண்டும் என்றிருந்தேன். சிவவாக்கியரே பின்னாளில் திருமழிசை ஆழ்வார் ஆனார் என்றொரு கருத்து இருக்கிறதே. அதனைப் பற்றிய தங்கள் கருத்தென்ன? இங்கே பதில் சொல்ல விருப்பம் இல்லையெனில் தனிமடலில் சொல்லுங்கள்.
அன்பு மாசிலா,
தங்களின் பின்னூட்டுக்கு என் தன்னிலை விளக்கம்: தனி இடுகை வரும்.
அன்பு இராகவா,
//வேலானது அடியில் தொடங்கி காது வரை சென்றிருக்க வேண்டும் என்று சொல்கிறார்களே. அதை விடக் குறைவாக இருக்கக் கூடாதாமே. அதன் உட்பொருள் என்ன?//
அறிவைத்தான் வேலாக சித்தரித்துள்ளனர். ஐம்புலன்களில் வாய்க்கு அடுத்தபடி இன்றியமையாதது காது. அதன்வழிதான் ஓங்காரம் கேட்கமுடியும். நுனிகுறுகி ஓங்கிப்பின் அடிபெருத்துக் குவிந்தவேல் அறிவு எப்படிக் கபாலத்தினுட்புகுந்து உணர்வைத் தொடுகிறது என்பதைக் காட்டுகிறது. ஆகவேதான் காதுவரை இருத்தல்வேண்டுமென சிற்ப சாற்றிறம் கூறுகிறது.
அன்பு குமரா,
//சிவவாக்கியரே பின்னாளில் திருமழிசை ஆழ்வார் ஆனார் என்றொரு கருத்து இருக்கிறதே. அதனைப் பற்றிய தங்கள் கருத்தென்ன?//
சிவவாக்கியர் வாழ்க்கை வரலாறு காணவும்:
கதைக்கு முக்கியத்துவம் தரலாகாது. கவிதைகளில் பொதிந்துள்ள ஞானக்கருத்துக்களை மட்டும் எடுத்துக்கொள்வோம்.
மதிப்பிற்குரிய ஐயா,
பணத்தி என்பதனை பார்ப்பனத்தி என கூறுவது சரியா என தெரியவில்லை. பணத்தி என்பது பணம் அதிகமுடைய செல்வமகள் எனும் பொருள்பட கூறப்பட்டிருக்கலாம். மற்றபடி சமணத்தை சைவம் அழித்தது என்பதெல்லாம் மடத்தனம். ஜைனத்தின் ஆகப்பெரிய சாதனைகளும் சரி பௌத்த்ததின் ஆகப்பெரிய சாதனைகளும் சரி வேத தருமத்தினை அனுசரித்த மன்னர்களின் ஆதரவில் நிகழ்ந்தன. அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்ந்த மோதல்களை இனப்படுகொலைகளாக சிலர் தம் சொந்த இலாபத்திற்காக சித்தரிக்கின்றனர். எவ்வித கருத்தியல் நேர்மையும் அற்றவர்கள் இவர்கள். இவர்களுக்கெல்லாம் பதில் சொல்வது காலவிரயம்.
பணிவன்புடன்
அரவிந்தன் நீலகண்டன
அன்பு நீலகண்டன்,
தங்களின் கூற்று சரியே!
இருப்பினும் தமிழ்மணத்தின் வாயிலாக இவ்வாறெல்லாம் நடக்கிறது என்பதைச் சாற்றவும், என் தன்னிலை விளக்கத்தை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தவும் இதையே வாய்ப்பாக எடுத்துக்கொண்டேன்.
இனி இவ்வாறெல்லாம் வரும் பின்னூட்டங்களுக்குப் பதில் வராது.
Post a Comment