Tuesday, January 01, 2008

32.மாறுபட்டு மணிதுலக்கி வண்டி

சிவ வாக்கியர் - 32
*******************
சரியை நிலை
****************
32.மாறுபட்டு மணிதுலக்கி வண்டினெச்சில்
............கொண்டுபோய்
ஊறுபட்ட கல்லின்மீதே யூற்றுகின்ற
..............மூடரே
மாறுபட்ட தேவரு மறிந்துநோக்கு
...............மென்னையும்
கூறுபட்டு தீர்க்கவோ குருக்கள்பாதம்
.............வைத்ததே.


செய்யவேண்டிய கடமையினின்றும் மாறுபட்டு, மணியைத் துலக்கி, உடைந்துள்ள கல்லுக்குப் பூசை செய்து, வண்டின் எச்சிலாம் தேனை அபிசேகம் செய்து இறைவனை வணங்கும் மூடரே, உங்களிடமிருந்து (பூசாவிதிகளில்) மாறுபட்ட தேவர்கள் என்னை அறிந்து நோக்கிப் பலன் பெறுகின்றனர்.

உங்களுக்குக் குருக்கள் பாதமாம் கண்களைக் கொடுத்தது ஒன்றுபட்டு என்னை நோக்காது கூறுபோட்டு உலகைக் காணவோ?

5 Comments:

Anonymous said...

இங்கே வண்டின் எச்சில் என்று சொல்கிறார், அதுவே ஒருவகை உண்டியாக பயன்படும் பொழுது, அதையே விருந்தென்றும் சொல்கிறார் சிவவாக்கியர்.

Anonymous said...

Thankalathu indha muarchi vetri pera enathu nalvazhthukkal.

indha seeriya iraipani thodarattum.

anbudan,
Vignesh

Anonymous said...

அன்பு கார்திக்,சிவமுருகன்,
நன்றி.

Anonymous said...

""உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவது!
ஈசன் உவப்பது எது? எனப் பலருக்குத் தெரியாமல்; தம் பிழைப்புக்கு யாரோசொன்னதை நம்பி பணத்தையும் நேரத்தையும் செலவிடுகிறார்கள்.
யோகன் - பாரிஸ்

Anonymous said...

மக்கள் விழிக்கும் காலமெப்போ?
மக்கள் மாறும் காலமெப்போ?