நவராத்திரி - ஆறாம் நாள்
**********************************
ஆறாம் நாளில் அம்மையை நாக இருக்கையில் வீற்றுள்ள சண்டிகையாகப் பூசிக்கவேண்டும். தூம்ரலோசனன் வதத்துக்குறிய தோற்றம் என்பார்கள்.
இன்னும் சிலர் இன்று கெளமாரியையைத் துதிக்கவேண்டுமென்பார்கள். ஆண்மை சக்தியும் ஞானசக்தியும் கலந்த உருவமாகிய இவள் மயில் இருக்கையும் சேவல் கொடியும் உடையவள்; வீரத்துக்கு ஆதாரமானவள். ஓங்கார சக்தியின் ஒட்டுமொத்த உருவமான இவளைப் பூசிக்க எல்லாப் பாவங்களும் தொலையும்.
படையல்: தேங்காய் சாதம்
துதிக்கவேண்டிய இராகம்: நீலாம்பரி
Wednesday, December 26, 2007
நவராத்திரி - ஆறாம் நாள்
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
அய்யா,
பதிவுக்கு நன்றி.
அன்பு சிவபாலன்,
நன்றி.
கையில் வேல் வைத்து இருக்கிறாளே அன்னை? பேரும் கெளமாரம்-கெளமாரி.
முருகனே அன்னை ரூபத்தில் இருப்பது போல் தோன்றுகிறது, படத்தைப் பார்த்தவுடன்!
அன்பு கண்ணபிரான்,
ஆமாம்.
//ஆண்மை சக்தியும் ஞானசக்தியும் கலந்த உருவமாகிய இவள் மயில் இருக்கையும் சேவல் கொடியும் உடையவள்; வீரத்துக்கு ஆதாரமானவள். ஓங்கார சக்தியின் ஒட்டுமொத்த உருவமான இவளைப்..//
முருகன் வீரத்துக்கும் ஞானத்துக்கும் அதிபதி. மயிலும் சேவலும் அவனுடையதே. அப்படியிருக்க கெளமாரிக்கு அவனுடைய ஆயுதங்கள் தரப்படுள்ளன.
உங்களின் யூகம் சரியே!
Post a Comment