நவராத்திரி - ஏழாம் நாள்
*********************************
ஏழாம் நாளில் அம்மையை சாம்பவியாக அலங்கரித்து வழிபடவேண்டுமென சிலரும், மகாலக்குமியாக வழிபடவேண்டுமென்று பெரும்பான்மையினரும் கூறுவர். தாமரை மலரைக் கரத்தில் ஏந்தியவள்; செல்வத்தை அருள்பவள், மகாலக்குமி. தாமரை இருக்கையில் வீற்றிருந்து, இறையருள் பெற்றோரை ஏற்றுவித்து, அவர்களை உலகுக்கு அடையாளம் காட்டுபவளும் அவளே.
செபமாலை, கோடரி, கதை, வில், அம்பு, தாமரை, வச்சிராயுதம், கமண்டலம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், சங்கு, சக்கரம், மணி,மதுக்கலயம், கத்தி, கேடயம், பாசம், சூலம் ஆகியவைகளைத் தன் கரங்களில் ஏந்தியிருப்பவள். பவளம் போன்ற நிறமுடையாள்; திருமாலின் சக்தி.
படையல்: பாசிப்பயறு சுண்டல்
துதிக்கவேண்டிய இராகம்: பிலகரி
Wednesday, December 26, 2007
நவராத்திரி - ஏழாம் நாள்
Subscribe to:
Post Comments (Atom)
8 Comments:
சார் வீட்டுக்கு வந்தால் பாசிப்பயறு சுண்டல் கிடைக்குமா?
அன்பு என்னார்,
எங்கள் வீட்டில் படையல் போட்டு இறைவழிபாடு செய்வது இல்லை.
"அம்மா! பாசிப்பயறு சுண்டல் வைத்துள்ளேன்; எடுத்துக்கொள்" என்று சொல்லிவிட்டு நாங்களும் சாப்பிட்டுவிட்டதாக எண்ணி வழிபாட்டை முடித்து விடுவோம்.
நீங்கள் வந்தாலும் அதுபோல சேர்ந்து செய்துவிடலாம்.
//"அம்மா! பாசிப்பயறு சுண்டல் வைத்துள்ளேன்; எடுத்துக்கொள்" என்று சொல்லிவிட்டு நாங்களும் சாப்பிட்டுவிட்டதாக எண்ணி வழிபாட்டை முடித்து விடுவோம்.//
அம்மாவிற்கே அல்வாவா? சரிதான் போங்கள்
அன்பு என்னார்,
மனத்தால் பூசை செய்வது(அல்வா கொடுப்பது) அத்வைதம்(அத்து+விதம்).
நீங்கள் எல்லாம் சுண்டலைக் காட்டிவிட்டு நீங்கள்தானே சாப்பிடுகிறீர்கள்(துவைதம்).
இறுதியில் இறைவனுக்கும் இறைவிக்கும் அல்வாதானே?
தினமும் வந்து கும்பிட்டுப்போறேன்.
ஆஜர் மட்டும் சொல்லலை.
இங்கேயும் ஸ்வாமிக்கு தினமும் 'அல்வா'தான்.
இன்னிக்கு நைவேத்தியம் 'ஆப்பிள்'
நாளைக்காவது ஆயுத பூசையாச்சே. (கத்தியை நீட்டிடப்போறார் கடவுள்!)
ஒரு சுண்டல் செஞ்சுரணும்.
திங்க ஆள் கிடைச்சாச்சு:-))))))))
அன்புத் தங்கை துளசிக்கு,
இறை கருணைக்கடல். நம்மிடம் கத்தியை நீட்டாது; அவுணர்களிடம் மட்டுமே கத்தி. நமக்கு எப்பவுமே காக்கும் கரங்கள் தான்.
அண்ணா,
இந்தக் கத்தி ஆப்பிளை வெட்டுறதுக்கு:-))))
அப்படியா?
குத்துறதுக்கோன்னு நினைத்தேன்.
Post a Comment