இறைவனை அடைய மிகச் சிறந்த வழி எது? இல்லறமா? துறவறமா?
********************************************************************
உங்களது "ஞானத்தை" படிக்குங்கால் எனக்கு, எல்லோர் மனதிலும்
எழும் ஒரு கேள்வி எழுந்தது..அது என்னவெனில்
இறைவனை அடைய மிகச் சிறந்த வழி எது? இல்லறமா? துறவறமா?
(குறிப்பு:பட்டிமன்றத்தீர்ப்பு போல் பதில் அளித்து என்னை ஏமாற்றிடக்
கூடாது..என்பது இந்த அன்பு குழந்தையின் விருப்பம்)
ஜெயமாருதி இராமா
சென்னை
அன்புமிகு இராமா,
இறைவனை அடையச் சிறந்த வழி ஐயமில்லாமல் இல்லறமே.
ஆனால் தறிகெட்ட காளையைப் போல் இல்லாமல் சுய கட்டுப்பாட்டுடன் தன்னால் முடிந்தவரை விந்து சக்தியை தேவைக்கு அதிகமாகச் செலவு செய்யவேண்டாம் என்பதே. இதுவும் ஒருவகையில் இல்லறத்தில் துறவறமே.
எவனொருவன் எல்லாவற்றையும் துறந்துவிட்டு குளிருக்குப் போற்றிக் கொள்ள ஒரு போர்வை வைத்திருக்கிறானோ அவன் துறவியல்ல.
இங்கே நான் துறக்கச் சொல்வதெல்லாம் ஆசை(பேராசை), காமம், குரோதம் ஆகிய மனத்தையும் உடலையும் கெடுக்கக் கூடியவைகளை மட்டுமே. இறைவன் எனக்குச் சொர்க்கம் தரவேண்டும் என ஆசைப்படுவதுகூட ஆகாது.
எண்ணம் கருத்தினில் ஒடுங்கவேண்டும். எண்ணங்கள்தான் பிறவிகள். பிறவிப்பிணி அகல எண்ணங்களை ஒழித்தல் வேண்டும்.
தீர்ப்பு:இறைவனை அடையச் சிறந்த வழி ஐயமில்லாமல் இல்லறமே.
Thursday, December 27, 2007
இறைவனை அடைய மிகச் சிறந்த வழி எது? இல்லறமா? துறவறமா?
Posted by ஞானவெட்டியான் at 12:28 PM
Labels: ஞானமுத்துக்கள்
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
Mr Vettiyan,
Thanks for publishing useful messages on this blog. I still don't understand what is the connection between sperms (vindhu) and spirituality?
Can you explain little bit more?
I note clarify in the coming posts.
Post a Comment