கல்வி கற்பதால் மட்டுமே ஞானம் கிட்டுமா?
************************************************
"சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே
வேர்த்து இரைப்பு வந்தபோது வேதம் வந்து உதவுமோ?
மாத்திரைப்போ தும்முளே மறித்து தொக்க வல்லிரேல்
சாத்திரப்பை நோய்கள் ஏது? சத்தி முத்தி சித்தியே!"
மரண சமயத்தில் சாற்றிறங்கள் உதவாது. வாய் குழறும். நாவு இழுக்கும்.
>அப்படி இல்லை
> எனில், கற்பதன் பயன் என்ன?
கல்வி என்னென்ன? எதற்காக? என்ன செய்தல் வேண்டும்? என்னும் அறிவிற்காகவே.
சாற்றிறங்கள் குப்பை. ஞானச்செயலுக்கு ஆகாது.
செயல் இல்லையேல் ஒன்றுமில்லை.
விந்து நாறிச் சாக வேண்டியதுதான்.
ஞானச் செயல் என்பது சூரியகலை( வலக்கண்), சந்திர கலை (இடக் கண்), அக்கினி கலை (புருவ மத்தி) ஆகியனவற்றை ஒரே நேர்கோட்டில் நிறுத்துதல். அப்பொழுது 3 கலைகளும் ஒன்றாக இணைந்து மேலேறும். அதை சூட்சமமாகக் காட்டவே முப்புரி நூல் அணிவித்தனர். பெண்கள் முச்சடையிட்டுக் கொண்டனர்.
இதற்கு இன்னும் பல நூல் ஆதாரங்கள் இதோ:
ஞானக் குறள்:
நல்லன நூல்பல கற்பினுங் காண்பரிதே
எல்லையில் லாத சிவம்.
நல்லவற்றைக் கூறும் பல ஞான நூல்களைப் படிப்பதால் மட்டும் எல்லையில்லா
சிவத்தையுணர்தல் அரிது.
சச்சிதானந்த சுவாமிகள்:
"ஏட்டைப் படித்திங் கிறுமாப்பா லென்னபயன்
நாட்டம் படித்தன்றோ நாமறுப்பம் - வாட்டமெலாம்
எச்சனனத் தேனு மிரும்பொருளை நாடாத
எச்சத்தா லன்றோ இவை."
அருணகிரியந்தாதி:
"கற்றதனாற் றொல்லைவினைக் கட்டறுமோ நல்லகுலம்
பெற்றதினாற் போமோ பிறவிநோய் - உற்றகடல்
நஞ்சுகந்து கொண்டருணை நாதரடி தாமரையை
நெஞ்சுகந்து கொள்ளா நெறி."
சிற்றம்பல நாடிகள்:
"தற்கம் படித்துத் தலைவெடித்துக் கொள்ளுமதைக்
கற்கநினையா தருளைக் காட்டுங் கருணையனோ."
சச்சிதானந்த விளக்கம்:
"கோடிபல நூலறிவு வேதமுறை பேசினுங்
குருபாதம் வெளியாகுமோ."
பிரம்மகீதை:
"வேதமாகம புராணமிருதிகள் வேறா மார்க்க
ரோது மாகமங் கடர்க்கமொன்றோடொன் றெவ்வாதாகு
மீதெலா மொக்கப் பண்ணலாவதன் றிதயதுக்க
மாதலா லனைத்தும் விட்டிங்கனைத்து மாஞ்சிவத்தை பார்ப்பான்."
திருவருட்பிரகாச வள்ளலார்:
"சதுமறையாகம சாத்திரமெல்லாஞ் சந்தைப்படிப்பு நஞ் சொந்தப்படிப்போ
விதுநெறி சுத்தசன் மார்க்கத்தின் சாகாவித்தையை கற்றனனுத் தரமெனுமோர்
பொதுவளர் திசைநோக்கி வந்தனனென்றும் பொன்றாமை வேண்டிடிலென்றோழி நீதான்
அதுவிது வென்னாம லாடோடிபந்து வருட்பெருஞ்சோதி கண்டாடோடி பந்து."
சிவபோதசாரம்:
"கற்குமடப் பட்டுமிகக் கற்றவெலாங் கற்றவர்பாற்
றற்கமிட்டு நாய்போலச் சள்ளிடவோ - நற்கருணை
வெள்ள மொடுங்கும் விரிசடையார்க் காளாகி
யுள்ள மொடுங்க வல்லவோ."
சசிவன்ன போதம்:
"ஆகம விதங்க ளறிவார்கள் பரமறியார்
யோகமொ டுறங்கு மவரேபர முணர்ந்தோர்
புராண மிதிகாச மெவையும்பொருளனைத்தின்
பிராண நறியா துளவிடத்திவை பிதற்றே."
ஆக சாத்திரங்களைப் படிப்பதால் மட்டும் பலனில்லை. செயல் தேவை.
கல்வி ஆதாரம்.
செயலே முக்கியம்.
Thursday, December 27, 2007
கல்வி கற்பதால் மட்டுமே ஞானம் கிட்டுமா?
Posted by ஞானவெட்டியான் at 12:30 PM
Labels: ஞானமுத்துக்கள்
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
அது என்ன விந்து நாறி சாதல்? எனக்கு புரியவில்லை??
அன்பு சிவா,
> அது என்ன விந்து நாறி சாதல்? எனக்கு புரியவில்லை??
ஒரு மனிதன் இறக்கும்போது அவனிடமுள்ள விந்துப்பை வெடித்துச் சிதறி வெளி வரும். அதனால்தான் நாற்றமடிக்கிறது. பன்னீர் முதலிய வாசனை திரவியங்களைத்
தெளித்து அதை மறைக்கிறார்கள்.
அந்த மிச்சமுள்ள விந்தைப் பையினுள்ளேயே அடக்கிச் செத்தால் சுத்த சாவு - சைவச் சாவு.
மூன்று கலைகளையும் ஒன்று சேர்க்கும் அடிப்படை ஞானவினையில் ஆரம்பித்து ஒவ்வொரு பயிற்சியாகச் செய்து வரல் வேண்டும். எவ்வளவு பயிற்சி செய்கிறோமோ அதற்குத் தகுந்த பலன் உண்டு.
எண்ணங்களை அறுத்துப் பிறவிப் பிணி போக்கலே நமது குறிக்கோள். சைவச் சாவு
சாக வேண்டும்.
சமம் + ஆதி = சமாதி.
விந்துவிலிருந்து வந்தோம். அது ஆதி.
அத்துடன் சமமாகி விட்டால் சமாதி.
Post a Comment