Thursday, December 27, 2007

கலைகளும் கரு உற்பத்தியும்

கலைகளும் கரு உற்பத்தியும்
*********************************
இந்த சூரியக்கலை சந்திரக்கலை அறிந்து கூடும் கால், பிறக்கும்
குழந்தை ஆணா பெண்ணா என பாலறிய முடியும் என்கிறார்களே அது உண்மையா? உண்மையாயின் அது எவ்வண்ணம்?

அதை நாமறிந்து ஆவதென்ன? கூடும்போது நினைவு எந்தக் கலையில் சரம் ஓடுகிறது?என்று சிந்திக்குமா? நம்மால் எதையும் செய்ய முடியாது எனத் தெரிந்தும் அது பொய்யா? மெய்யா? என அறிதல் அவசியமல்ல என்பது என் கருத்து.

இதையெல்லாம் அறிந்துகொள்ள SCANNER வந்து விட்டது.

"குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
குழவியும் இரண்டாம் அபான னெதிர்க்கில்
குழவி அலியாகும் கொண்டகால் ஒக்கிலே."

கணவனும் மனைவியும் புணரும்பொழுது, அதாவது விந்து பாய்ச்சப்படும் நேரத்திலே, வலது நாசி வழியே சூரிய கலை ஓடுமானால் ஆண்குழந்தை.

இடது
நாசியின் வழியே சந்திர கலை ஓடிக்கொண்டு இருப்பின் பெண்ணாகும்.

மலக்காற்றாகிய அபானன் எதிர்த்து ஒடி வருமானால் இரட்டைக் குழந்தை
பிறக்கும். இரண்டு நாசித்துவாரத்தின் வழியாகவும் வருமானால் குழவி அலியாகும்.

கரு உற்பத்தியைப் பற்றித் திருமூலர் ஒரு அத்தியாயமே எழுதிச் சென்றுளார்.

இதையெல்லாம் செய்ய உயிர்ப்பை(பிராண வாயுவை, சரத்தை) நம் வசப்படுத்த வேண்டும். வாசியெனும் குதிரையை அடக்குவது எளிதல்ல. அதற்குத்தான் பயிற்ச்சி தேவை. அதை நாம் (ஆண், பெண் இருவரும்) வசப்படுத்திவிட்டால் முயன்று பார்க்கலாம்.

"உணர்வு கலங்கி ஒழுகிய விந்து...."

உணர்வு கலங்கும்போது சரமும் சலனப் படும். அதையும் அடக்கத் தெரிய வேண்டும்.

2 Comments:

Anonymous said...

"சொல்லுதல் யார்க்கும் எளிய அறியவாம்
சொலியவண்ணம் செயல்"

Anonymous said...

குறள் சொல்வது உண்மை. ஞானப் பயிற்சியின்போது தடைகள் வரும். மனம்
குழம்பும். பயிற்சியை நிறுத்திவிடுவோம். இதையெல்லாங்கடந்து மேலேற
வேண்டும்.

46 ஆண்டுகளாக முட்டி மோதிக் கொண்டிருக்கிறேன். அநுபவங்களைக் கொண்டுதான் சாற்றிறப் பூட்டுக்களை உடைக்க இயலுகிறது. நான் எங்கே உள்ளேன் என்பதே எனக்குத் தெரியாது. தெரிந்துகொள்ளவேண்டிய அவசியமும் இல்லை. என் ஆயுள்
உள்ளவரை செயலைத் தொடருவேன்.