பிரணாயாமம், மூச்சு பயிற்சி என்றால் என்ன?
************************************************
இரண்டுமே ஒன்றுதான்.
இரேசகம்: 32 மாத்திரை அளவு
உயிர்க்கற்றை (வாசிக் குதிரையை) உள்ளே இழுத்தல்.
கும்பகம்: 64 மாத்திரை அளவு
அதை அப்படியே உள்ளே அடக்கி வைத்தல். இதுதான் வாசிக் குதிரையை அடக்குவது.
பூரகம்: 16 மாத்திரை அளவு
அடக்கியதை மெதுவாக வெளிவிடல்.
மாத்திரை அளவு:
"கண்ணிமைப் பொழுதும்,கைநொடிப்பொழுதும் மாத்திரைக்களவாம்." – பவணந்தி
எடுத்துக் காட்டு: "சிவசிவ" - 4 மாத்திரை
பிராணாயாமம்:
இரேசகத்தில் தொடங்கிப் பூரகத்தைச் செய்து இறுதியில் கும்பகத்தில்
நிறைவுசெய். உலகத்தார் உள்வாங்கி வெளிவிடும் கழிவுப் பொருளாகிய வாயுவால் இம்முறையில் செய்யப் பலனில்லை.
வளிப்பயிற்சி: மூச்சுப் பயிற்சி : வாசி யோகம்:
இவையெல்லாம் ஒன்றே.
ஆனால் வெளிக்காற்றை உள்வாங்கி வெளிவிடுவிது இல்லை. உள்ளே இருக்கும் பிராண வாயுவை உள்ளேயே இழுத்து, அடக்கி வைத்துப் பின் மெதுவாக வெளிவிடுதலாம்.
நாகப் பாம்பு மூச்சு விடுவதைக் கவனித்து அதுபோலச் செய்ய வேண்டும்.
இது கைவரத்தான் "ஊசிப்பார்வையை நாசி நுனி மீது வைத்து" சூரிய, சந்திர அக்கினி கலைகளை ஒன்ற வைக்க வேண்டும்.
அவரவர்க்கு எதுஎது கைவருகிறதோ அதிலிருந்து ஆரம்பித்துக் கொள்ளலாம். இதுவே முதல் படி.
Thursday, December 27, 2007
பிரணாயாமம், மூச்சு பயிற்சி என்றால் என்ன?
Posted by ஞானவெட்டியான் at 12:35 PM
Labels: ஞானமுத்துக்கள்
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
உள்ளே இருக்கும் ப்ராணவாயுவை உள்ளே இழுப்பதா? அது எப்படி ஐயா? கொஞ்சம்
சொல்ல முடியுமா??? தயய் கூர்ந்து???
அன்பு சிவா,
> உள்ளே இருக்கும் ப்ராணவாயுவை உள்ளே இழுப்பதா? அது எப்படி ஐயா? கொஞ்சம் சொல்ல
> முடியுமா???
அதற்கு ஒரு ஞானாசிரியன்(குரு) தேவை. இதற்காகத்தான் மூன்று கலைகளையும் ஒன்று சேர்க்க இரண்டாவது வழி ஒன்று சொல்லியிருக்கிறேனே?
அதை முயன்று பாருங்கள். கண்களிலிருந்து கண்ணீர் வருகிறது; கண் வலிக்கிறதுஎன விட்டு விடாதீர்கள்.
இரண்டாவது வழி அப்படினா என்னது ஐயா?
எனக்கு மானசீக குருவாக பாலகுமாரன் அவர்களை ஏற்று இருக்கிறேன் ஐயா...நிறைய விஷயங்களை அவர் எழுத்துக்கள் எனக்கு ஜனரஞ்சகமாக புரியவைத்திருக்கின்றன...இப்பொழுது சமீபமாக அவரின் உடையார் புத்தகம் படித்து மனம் முழுக்க தஞ்சை பெரியகோவில் வந்து அமர்ந்து இருக்கிறது, அதை ஒருமுறை சிறு வயதில் பார்த்துஇருக்கிறேன், ஆனாலும் இப்பொழுது பார்க்க நினைப்பது அதன் முழு பரிணாமமும் புரிந்து, அதுபோல் தங்களுக்கு ஏதேனும் புத்தகங்கள் தெரிந்து இருந்தாலும் சொல்லுங்களேன் ஐயா...
அன்பு சிவா,
இது கைவரத்தான் "ஊசிப்பார்வையை நாசி நுனி மீது வைத்து" சூரிய, சந்திர
அக்கினி கலைகளை ஒன்ற வைக்க வேண்டும்.
இரு கண்களாலும் மூக்கின் நுனியை பார்க்கவேண்டும். குவிந்த பார்வையாக
(ஊசி முனை போல) நிலை நிறுத்த வேண்டும்.
பிறவி அறுக்க எண்ணம் உதிக்கும் மனம் அடங்க வேண்டும். மனத்தில் சலனம் இல்லாமல் வைக்க வேண்டும். மனத்தில், சிவனின் உருவமோ, குருவின் உருவமோ,கோவிலின் உருவமோ இருந்தால் மனம் காலியாக இல்லையே?சூனியம்தானே வேண்டும்.
ஞானக் குறள்
*******************
79. பேராக்கருத்தினாற் பிண்டத்தி னுண்ணினைந்
தாராதனை செய்யு மாறு.
வெட்டாத சக்கரமாம் பிரிவுபட்ட கண்களினால் கபாலக் குகையினுள்ளே அசைவற்ற மனத்தையும், நினைவையும் ஒன்றாகக் கருத்தில் கலந்து அகத்தவம் செய்தலே
பிறப்பறுக்கும் வழி.
இன்னுமொரு வழி:
தியான முறைகள் பலதரப்பட்டவை.ஒவ்வொருவரும் தன் முறையே உயர்வு என
போற்றிக்கொள்வர். தியானத்தால் சாதிக்க வேண்டியது என்ன?
மனமடங்கி ஒருநிலைப் படுதல். ஆணவம், கன்மம், மாயை (ஒழிதல் மிகக் கடினம்)வெறுத்துக் குறைத்தல். சகல உயிர்களிடத்தும் கருணை, அன்பு காட்டல். இனிய வார்த்தை சொல்லல்.
காலம் வீணாக்காமை. எக்காலத்தும் இறைச் சிந்தனையோடு செயல்படல். சும்மா இருத்தல் (சோம்பி அல்ல).
அகம்பாவமற்ற பணிவுடைமை. இதற்கு என்ன செய்ய வேண்டும்?
முதலில் ஞானாசிரியன்(குரு) இல்லதவர்கள் செய்யவேண்டியது இரு முறைகள்:
1.எண்ணும் எழுத்தும் - தங்களுக்குப் பிடித்த ஒரு இறைநாமத்தை (சிவா,
நாராயணா, அம்மா, தாயே...) உச்சரித்தல். அப்படி உச்சரிக்கும்போது, கையில் ஒரு மணிமாலை (ஏதாகவிருப்பினும் சரி. ஸ்படிகம்தான் நல்லது. இல்லை! இல்லை! உருத்திராக்கம்தான் நல்லது என்று யார் சொன்னாலும் செவிகொடாதீர்).
வைத்துக் கொண்டு எத்தனை முறையென மனதிற்குள் எண்ணிவருதல் அவசியம்.
இதால், உச்சரிக்கும் மந்திரமும் எண்ணிக்கையும் மட்டும்தான் மனதில்
நிற்கும். மனமடங்கி ஒரு சுகம் கிட்டும்.
2.ஒன்றையும் நினையாது மூச்சுக்கற்றின் பாதையை மட்டும் நினைவினில் நிறுத்திப் போகும் வழி, வரும் வழியைக் கூர்ந்து நோக்குதல். இவைகளில் ஏதாவது ஒன்றைக் கடைப்பிடித்தால் முக்கலையொன்றித்தல் (சூரிய, சந்திர,
அக்கினி) தானாகவே கைவரும்.
இதையாவது செய்து பாருங்களேன்.
Post a Comment