அறுபத்தெட்டாக்கை
**************************
திருமந்திரம்:
ஆரோ அறிவார் அடியின் பெருமையை
யாரோ அறிவார் அங்கவர் நின்றது
யாரோ அறிவார் அறுபத்தெட் டாக்கையை
யாரோ அறிவார் அடிக்கா வலானதே."
அடி = சிவனின் திருவடி
அடிக்காவல் = திருக்கோவில்
அவர் = சிவன்
அறு = நீங்கும்
பத்தோடு = பத்து வாயுக்களோடு
காவல் = ஆலயம்
திருவருள் துணை இல்லாமல் திருவடியின் பெருமையை அறியும் வல்லமை ஒருவருக்கும் இல்லை. சிவன் உயிரில் கலந்து பிரிக்கமுடியாது ஒன்றாகவே நிற்பான். அவ்வாறு நிற்கும் தன்மையை அறிவார் யார்?
நிலம் 5, நீர் 5, வளி 5, வெளி 5, செய்தற்கருவி 5, அறிவுவளி 5, தொழில்வளி 5, நாடிகள் 10, ஓசைகள் 4, பற்றுகள் 3, குணங்கள் 3, ஆக மொத்தம் 60ம் மாயையின் கரியம். மீதமுள்ள எட்டும் புரியட்ட நுண்ணுடல். ஆக மொத்தம் 68.
இத்தகைய அருமையான உடல் சிவனுக்கு(சீவனுக்கு)ச் சிறந்த உடலாம். இதுவே நடமாடுங் கோவில்
Friday, December 28, 2007
அறுபத்தெட்டாக்கை
Posted by ஞானவெட்டியான் at 9:53 AM
Labels: ஞானமுத்துக்கள்
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
//அடிக்காவல் = திருக்கோவில்//
ஓ... அதான் திருஆனைக்காவல் என்பது
திரு ஆனைக் கோவிலானதா?
ஆயகலைகள் 68 க்கும் இதற்கும் ஏதேனும் சம்பந்தமுண்டோ?
அன்பு என்னார்,
ஆய கலைகளுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.
நன்றிசார்
Post a Comment