Monday, December 31, 2007

பிரபுலிங்க லீலை - கைலாசகதி

பிரபுலிங்க லீலை
*******************
2.2 இயங்குவ நிற்ப வான யாவையுங் கலைமா தோடு
முயங்குபு முன்ன மீன்ற முளரிவா னவன்வ குத்து
வியன்புவி யண்டந் தன்னுள் விதித்தனன் தகுமி டங்கள்
வயங்கெழும் அசுரர் நாகர் வானவர் முதலி யோர்க்கும்

இயங்குவ - போக்குவரத்துடையன,
நிற்ப - நிலைத்து நிற்பன,
முயங்குபு - சேர்ந்து,
முளரிவானவன் - நான்முகன்,
வியன் - பரந்த,
விதித்தனன் - ஏற்படுத்தினான்,
வயங்கெழு - வெற்றி பொருந்திய,
வானவர் - தேவர்.

கலைவாணியோடு சேர்ந்து நான்முகன் இயங்குவன, நிற்பன (சரம், அசரம் = சராசரம்) ஆகியவற்றை இன்னார்க்கு இன்னதென வகுத்து, அசுரர், நாகர், தேவர் முதலியோர்க்கு வழங்கினான்.

2 Comments:

Anonymous said...

\\கலைவாணியோடு சேர்ந்து நான்முகன் இயங்குவன, நிற்பன (சரம், அசரம் = சராசரம்) ஆகியவற்றை இன்னார்க்கு இன்னதென வகுத்து, அசுரர், நாகர், தேவர் முதலியோர்க்கு வழங்கினான்.//

ஏதோ சாதீய அடிப்படையில் இட ஒதிக்கீட்டுத் திட்டம் போன்று இருக்கிறது.

Anonymous said...

அன்பு சம்மட்டி,

நாம் ஏன் அப்படிக் கொள்ளவேண்டும்?
எதை எதை யாரால் செய்யமுடியுமெனத் தகுதிகண்டு, பிரித்துத் தந்ததாகக் கொள்ளுவோமே?

பிரபுலிங்கலீலையில் உருவகக் கருவூலமும், அவைகளைத் தமிழில் எடுத்துச் சொல்லும் நயமும் கண்டு மகிழவேண்டும்.