Monday, December 31, 2007

பிரபுலிங்க லீலை - கைலாசகதி

பிரபுலிங்க லீலை
********************
2.3 நான்முக அண்டந் தன்னுள் நனிசிறந் தொப்பி கந்த(து)
ஊன்முக விழிக ளாற்கண் டும்பர்கள் உவகை பூப்பந்
தான்மிகு மருளான் மேனி சாத்திய பேரா னந்தக்
கூன்முக மதிய ணிந்த கொற்றவன் கைலைக் குன்றம்.

நான்முக அண்டம் - பிரமனாற் படைக்கப்பட்ட உலகம்,
நனி சிறந்து - மிகவுஞ் சிறந்து,
ஒப்பு இகந்தது - ஒப்பு இல்லாத தன்மை பொருந்தியது,
ஊன்முகவிழிகளால் - ஊனையுடைய முகக் கண்களால்,
மேனிசாத்திய - வடிவைத் தாங்கிக் கொண்டிருக்கின்ற,
கொற்றவன் - இறைவன்,
உவகைபூப்ப - மகிழ்ச்சியடைய.

கைலைமலைச் சிறப்பு பற்றி இப்பாடல் வருணிக்கின்றது. பிரமனால் படைக்கப் பட்டதெனச் சொல்லப்படும் இவ்வண்டத்தினுள், ஒப்பிலாததும் மிகவும் சிறந்ததுமான கையிலாய மலையினை உம்பர்களாம் வானோர் தங்களின் ஊனக் கண்களினால் உவகை பூத்துக் குலுங்கக் கண்டு களிப்பர். அம்மலை யாருடையதெனில், மருளாம் மயக்கம் தீர்க்கும் மேனிசாத்திய கொற்றவன், பேரானந்தக் கொற்றவன், வளவுபட்ட உருவுடைய மதியணிந்த கொற்றவன் கொலுவிருக்கும் மலை.

0 Comments: