பிரபுலிங்க லீலை
*******************
2.4 கொள்ளைவண் டிழிந்து தாது
............குடைந்துமூகக் குழவு டைந்து
கள்ளழிந் தொழுகு செம்பாற் கடுக்கை
............வேய்ந் திலகு வேணி
வள்ளல்வெண் புகழ்தி ரண்ட வளங்கெழு
............கைலைக் குன்றில்
வெள்ளிவந் தத்தி யாச மாசவே
............விளைந்த தம்மா.
கொள்ளைவண்டு - கூட்டமாகிய வண்டுகள்,(கொள்ளை கொள்ளுகிற வண்டுகள்)
இழிந்து - வந்து பொருந்தி,
தாது - மகரந்தம்,
குடைந்து - மூழ்கி,
மூகம் - மவுனம்,
குழவு - இளமை,
கள் - மது,
கடுக்கைவேய்ந் திலகுவேணி - கொன்றைமலரைச் சூடி விளங்குகின்ற சடை,
வள்ளல் - இறைவன்,
வெண்புகழ் - வெள்ளிய புகழ்,(புகழின் நிறம் வெள்ளை யென்பர்)
அத்தியாசம் - பொய்த் தோற்றம்.
வண்டுகள் கூட்டம் கூட்டமாக வந்து பொருந்தி வாய்பேசாதிருக்கும் பூவினைக் குடைந்து, மலரின் இளமையை உடைத்து மது உண்ணும் போது ஒழுகும் மதுவுடன் இருக்கும் கொன்றை மலரைச் சூடியிருக்கும் இறைவன், வெள்ளை நிறமுடைய புகழ் கொழிக்கும் கைலையில் அமர்ந்துளான்.
கைலைமலையானது சிவபெருமான் புகழ் திரண்டதால் வெண்மையாகத் தோன்றியது. அதனையறியாது மயங்கி வெள்ளிமலையெனக் கூறினர். இது பொய்த் தோற்றத்தால் உண்டாகியது என்பது கருத்து.
Monday, December 31, 2007
பிரபுலிங்க லீலை - கைலாசகதி
Posted by ஞானவெட்டியான் at 6:11 AM
Labels: பிரபுலிங்க லீலை
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment