Monday, December 31, 2007

பிரபுலிங்க லீலை - கைலாசகதி

பிரபுலிங்க லீலை
*******************
2.5 கண்பிசைந் தொருசே யின்னுங் கலுழினுந் தனைக்கொ டுப்பன்
மண்பிசைந் துண்ட மாயன் மறித்திட வலிய னல்லன்
நண்பிசைந் நிறைவ னுக்கே நரமிடனாவ மென்று
பண்பிசைந் தலைதி ரண்ட பரிசினின் றிடுமக் குன்றம்.

ஒருசேய் - உபமந்யு முனிவர் போன்ற மற்றொரு குழந்தை,
உலுழினும் - அழுதாலும்,
மண்பிசைந்துண்ட மாயன் - உலகத்தையுண்டருளிய திருமால்,
நண்பிசைந்து - நட்புப்பொருந்திய,
இடம் - இருப்பிடம்,
பண்பு இசைந்து - நற்பண்பு பொருந்தி,
அலை - பாற்கடல்,
பரிசில் - தன்மையைப்போல.

உபமந்யு முனிவர் குழந்தையாகவிருந்த காலத்தில் பாலின் பொருட்டு அழச், சிவபிரான் பாற்கடலைக் கொடுத்தருளினார் என்பது புராண வரலாறு.
திருப்பாற்கடல், மாயனுக்கு நாம் இடமாக இருந்தால் சிவன் மற்றொரு சேய்க்குக் கொடுத்தால் மறுத்திட வலியனல்லன் ஆதலால் அரனுக்கே யிடமாவது நலம் என்று கருதி அது வந்து நின்றதுபோலத் தோன்றுகின்றது கைலை என்பது கருத்து.

0 Comments: