Monday, December 31, 2007

பிரபுலிங்க லீலை - கைலாசகதி

பிரபுலிங்க லீலை
*******************
2.6 ஒழுகுறும் அருவி யீட்டம் ஒலியினா னகுவெண் டிங்கள்
பழகுறு முடற்க ளங்காற் பாகசா தனன்கூர்ங் கோட்டு
மழகளி றுமிழ்ம தத்தான் மலர்மிசைக் கடவு ளுர்தி
அழகுறு நடையா லன்றி அறிதரப் படாவக் குன்றில்

அருவியீட்டம் - அருவிகளின் தொகுதி,
நகு - விளங்குகின்ற,
பாகசாதனன் - தேவர் கோமான்,
மழகளிறு - இளமையினையுடைய வெள்ளையானை,
மலர்மிசைக் கடவுள் - நான்முகன்,
ஊர்தி - ஊர்தியாகிய அன்னம்.

கைலைமலை வெண்ணிறமாக இருப்பதால் ஆங்கு வரும் அருவித் தொகுதியை ஒலியினாலும், திங்களைக் களங்கத்தாலும், வெள்ளையானையை மதநீராலும், அன்னத்தை அதனுடைய அழகிய நடையாலும் அறியலாமேயன்றி வேறு வகையாக அறிதல் இயலாது.

3 Comments:

Anonymous said...

ஆமாம் உண்மைதான்

Anonymous said...

அன்பு என்னார்,
உண்மை; உண்மை; உண்மையைத் தவிற வேறொன்றுமில்லை.

Anonymous said...

Dear Sir,
Is that all! Finished!!