Monday, December 31, 2007

பிரபுலிங்க லீலை - கைலாசகதி

பிரபுலிங்க லீலை
********************

2.7.விளங்கொளி துளும்பும் அந்த வெள்ளியங் கிரியி னுச்சி
துளங்கொளி விரிக்குஞ் செம்பொற் சுடர்மணிச் செய்குன் றொன்று
களங்கறு பராரைத் துய்ய கருப்புரக் குவாலின் மீது
வளங்கெழு சுடரொன் றுற்று வயங்குதல் போலு மன்றே.

விளங்கு - விளங்குகின்ற.
துளும்பும் - தளும்புகின்ற,
துளங்கு - அசைகின்ற,
செய்குன்று - கட்டப்பட்ட மலை,
களங்கறு - குற்றமற்ற,
பராரை - பருத்த அடியினையுடைய,
குவால் - குவியல்.

சிவன் வீற்றுள்ள கைலை மலையாம் வெள்ளியங்கிரி, வெள்ளிமலையின் முடியில் செம்பொன் மண்டபம் இருத்தல் போன்றுள்ளது. அது அடிபெருத்து நுனி சிறுத்த கற்பூரக் குவியலின்மீது சுடர்பொருத்தி ஏற்றிய பின் தீப்பற்றி எரிதலைப்போலக் காண்கிறது.

0 Comments: