Monday, December 31, 2007

பிரபுலிங்க லீலை - கைலாசகதி

பிரபுலிங்கலீலை
*******************
இறைவன் அரசிருக்கை மண்டபச் சிறப்பு

2.8.இனையதிக் கைலை வெற்பில் இறையர சிருக்கை ஒன்றுண்

டனையதை யணிய மாட்டா தப்புறம் போயி னானென்

றெனையிகழ் பவர்க ளில்லை யிலங்குமம் மண்ட பத்தின்

தனிவள மனந்த னாலுஞ் சாற்றிடற் கரிது மாதோ.


இனையது - இப்படிப்பட்டது ஆகிய,
கைலை வெற்பு - கைலைமலை,
அரசிருக்கை - அரசிருக்கை மண்டபம்,
அனையதை - அதனை,
அணியமாட்டாது - அழகுபடுத்திக் கூறமுடியாமல்,
தனிவளம் - ஒப்பற்ற சிறப்பு.
அநந்தன் - நிலந்தாங்கும் பாம்பு (ஆதிசேடன்)

இப்படிப்பட்டதாகிய கைலை மலையின்மீது இறைவனின் அரச இருக்கையாம் சிம்மாதனம் ஒன்றுண்டு. அப்படிப்பட்டதை அழகுபடுத்திக் கூறமுடியாது அப்புறம் போனாள் என்று என்னை இகழ்வார் இல்லை. அப்படி விளங்கும் மண்டபத்தின் ஒப்பற்ற சிறப்பை ஆயிரம் நாவுகொண்ட ஆதிசேடனாலும் வருணிக்க இயலாது.

2 Comments:

Anonymous said...

மிகவும் நன்று.
கண்டு களித்தேன் ஐயா!

Anonymous said...

அன்பு SK,
மிக்க நன்றி.