பிரபுலிங்கலீலை
******************
இறைவன் தனது இருக்கையில் இருத்தல்
2.9.அன்ன மண்டபத் தங்கண னோர்பகல்
மின்னு செம்மணி வேதிகை ஒன்றன்மேல்
மன்னு செங்கதிர் மண்டலத் துற்றனன்
என்ன வந்தங் கிருந்தன னென்பவே.
அன்ன - அப்படிப்பட்ட
அம்கணன் - இறைவன்
வேதிகை - மேடை
செங்கதிர் - சூரியன்
மண்டலத்து உற்றனன் என்ன - தனது மண்டலத்தில் இருந்தனன் என்று சொல்லும்படி
என்ப - என்று சொல்வர்.
ஏ - அசை.
அப்படிப்பட்ட மண்டபத்தில் இறைவன், மின்னுகின்ற சிவப்பு மணிகள் வேய்ந்த தனது இருக்கையில் எழுந்தருளியது, கதிரோன் தன் மண்டலத்தில் இருந்து ஒளி வீசுவது போல் இருந்தது. இஃது ஒப்பணி.
Monday, December 31, 2007
பிரபுலிங்க லீலை - கைலாசகதி
Posted by ஞானவெட்டியான் at 6:18 AM
Labels: பிரபுலிங்க லீலை
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment