Monday, December 31, 2007

பிரபுலிங்க லீலை - கைலாசகதி

2.10.குழவி யாயுடற் கூனிந ரைத்ததோர்
விழவு வாண்மதி வேணியின் மேவுறக்

கிழவி யாகிக் கிரிக்கோன் மகப்பெறும்

அழகு நீர்மக ளாயிடை வாழ்வுற.


குழவியாய் - இளமையுடையதாக விருந்தும்,
கூனி - வளைந்து,
நரைத்த - வெளுத்ததாகிய,
விழவு - சிறப்புடைய,
வாண்மதி - ஒளிதங்கிய திங்கள்,
வேணி - சடை,
கிழவி - உரிமையுடையவள்,
கிரிக்கோன் - மலையரசன்,
மகப்பேறு - மகவாகப் பெற்ற.
அழகு நீர்மகள் - அழகிய தன்மையையுடைய கங்கை அல்லது இறைவி. ஆயிடை - அச் சடையினிடத்தில், அல்லது இடப்பாகத்தில் இவைகள்

வெள்ளை நிறமுடைய கூந்தலை உடைய கூனியின் தலைமுடிபோல் வளர்பிறைச் சந்திரன் வளைந்து கூனி இருக்கிறதாம். அதனால் சந்தரனுக்கும் முதுமை வந்து விட்டதாம். அப்பிறைச் சந்திரனைத் தன் சடையின்மீது இடப்புறத்தே அணிந்து, உரிமை உடையவளான மலையரசனின் மகளாம் இறைவியைத் தன் உட்லின் இடப்பாகத்தே தாங்கி இருக்கிறான் இறைவன்.

இது இரட்டுறமொழிதல் என்னும் உத்தி.

0 Comments: