பிரபுலிங்கலீலை
*********************
முக்கண் விளங்குதல்
2.11.அங்கி யென்றற் கடுப்பமே னோக்கிய
செங்க ணொன்று திருநுதல் சேர்தரத்
திங்க ளென்றுந் தினகர னென்றும்வாழ்
அங்கண் மல்கும் அருள்மடை போன்றுற.
அங்கி - நெருப்பு,
அடுப்ப - பொருந்த,
திருநுதல் - அழகிய நெற்றி,
தினகரன் - கதிரோன்,
அம்கண் - அழகிய கண்கள்,
மல்கும் - நிறைந்த,
அருள்மடை - அருளாகிய நீர் பெருகி வழியும் வழி. நெருப்பு மேனோக்குதலும் தண்ணீர் கீழ்நோக்குதலும் இயற்கை.
இறைவனின் முக்கண்ணை வருணித்தலாம்.
தீக்கண்ணாம் சிவந்த கண்ணொன்றைத் தன் திருநுதலாம் நெற்றியில் தாங்கி, திங்கள் என்னும் சந்திரனை இடக்கண்ணாகவும், சூரியனை வலக்கண்ணாகவும், ஆகிய முக்கண்களையும் அருள் பெருகி வழியும் மடை போலத் தாங்கியுள்ளார் எம்பெருமான்.
இதில் தகுதியணியும், தற்குறிப்பணியும் உள்ளன.
Monday, December 31, 2007
பிரபுலிங்க லீலை - கைலாசகதி
Posted by ஞானவெட்டியான் at 6:19 AM
Labels: பிரபுலிங்க லீலை
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment