Monday, December 31, 2007

விவேக சிந்தாமணி - கடவுள் வணக்கம்

விவேக சிந்தாமணி
**********************
கடவுள் வணக்கம்
********************
"அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றிற் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல
குணமதிக மாமருணைக் கோபுரத்துள் வீற்றிருக்குஞ்
செல்வக் கணபதியைக் கைதொழுதக் கால்."

திருவருணைக் கோபுரத்துள் எழுந்தருளியிருக்கும் கணத்தின் (நான்கு நிமிடம் அல்லது முப்பது கலை கொண்ட காலம்)பதியைக் (காலத்தின் நாயகனை) கைதொழ, இன்னல் அகலும், தீராத் துயர் தீரும். வலிமையான வினைகள் யாவும் போகும். அன்னை வயிற்றில் உதிக்கக் காரணமான முற்பிறவியில் செய்த வினைகளுடன், இப்பிறவியில் செய்த வினைகளும் போகும்.

0 Comments: