விவேக சிந்தாமணி
**********************
1.ஆபத்துக் குதவாப்பிள்ளை யரும்பசிக் குதவாவன்னந்
தாபத்தைத் தீராத்தண்ணீர் தரித்திர மறியாப்பெண்டிர்
கோபத்தை யடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன்
பாபத்தை தீராத்தீர்த்தம் பயனில்லை யேழுந்தானே."
ஆபத்துக்கு உதவாத பிள்ளை, கொடும் பசியைத் தீர்க்கமுடியாத உணவு, நீர்வேட்கையை(தாகம்) நீக்கமுடியாத நீர், வறுமை நிலையறியாது ஆடம்பரச் செலவு செய்யும் பெண்கள், சினத்தை அடக்க முடியாத அரசன், ஞானாசிரியனின் உபதேச மொழிகளைப் புரிந்து செயலாற்ற முடியாத மாணாக்கன், பாவங்களை நீக்கமுடியாத புனித தீர்த்தங்கள் ஆகிய ஏழாலும் எப்பயனுமில்லை.
Monday, December 31, 2007
1.ஆபத்துக் குதவாப்பிள்ளை
Posted by ஞானவெட்டியான் at 6:32 AM
Labels: விவேக சிந்தாமணி
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment