Monday, December 31, 2007

2.பிள்ளைதான் வயதின் மூத்தார்

விவேக சிந்தாமணி
*********************

2.பிள்ளைதான் வயதின் மூத்தார் பிதாவின் சொற்புத்திகேளான்
கள்ளிநற் குழலாள் மூத்தார் கணவனைக் கருதிப்பாராள்
தெள்ளறவித்தை கற்றால் சீடனும் குருவைத் தேடான்
உள்ளநோய் பிணிகள்தீர் ந்தாலுலகர் பண்டிதரைத் தேடார்.

பிள்ளைகள் வயதுக்கு வந்தவுடன் தந்தையின் சொல் கேட்கமாட்டார்கள்.மதுமலர்க் கூந்தலையுடைய மனைவியரும் சற்றே முதிர்ந்தபின் கணவனை மதிக்க மாட்டார்கள். மாணாக்கர்களும் ஐயம் ஏதுமின்றி கற்றபின் ஆசிரியரைத் தேடமாட்டார்கள். நோய் தீர்ந்தபின் உலகத்தோர் வைத்தியரைத் தேடமாட்டார்கள்.

0 Comments: