Monday, December 31, 2007

3.குக்கலைப் பிடித்து நாவிக்கூட்டி

விவேக சிந்தாமணி
*********************

3.குக்கலைப் பிடித்து நாவிக்கூட்டினி லடைத்துவைத்து
மிக்கதோர் மஞ்சட்பூசி மிகுமணஞ் செய்தாலுந்தான்
அக்குலம் வேறதாமோ வதனிடம் புனுகுண்டாமோ
குக்ககலே குக்கல்ல்லாற் குலந்தனிற் பெரியதாமோ?

குக்கல் = நாய்; நாவி = புனுகு பூனை
குலம் = இனம். அதைக் குணமெனக் கொள்ளல் நல்லது.

நாயைக் குளிப்பாட்டி, மஞ்சள் பூசி, வாசனைப் பொருட்களையெல்லாம் தடவி, புனுகு பூனையுடன் கூட்டில் அடைத்தாலும், நாய் ஒருபோதும் புனுகு பூனை ஆகாது. அதால் புனுகு தர இயலாது. அதன் நாய்க் குணம் உயராது; மாறாது.

0 Comments: