Monday, December 31, 2007

4.ஒப்புடன் முகமலர்ந்தே

விவேக சிந்தாமணி
**********************

4.ஒப்புடன் முகமலர்ந்தே யுபசரித் துண்மைபேசி
உப்பிலாக்கூழிட்டாலு முண்பதே யமிர்தமாகும்
முப்பழ மொடு பாலன்ன முகங்கடுத்திடுவா ராயின்
கப்பிய பசியினோடு கடும்பசி யாகுந்தானே.

மகிழ்ச்சியால் அகமும் முகமும் மலர்ந்து விருந்தோம்பி உண்மை பேசி உப்பிடாத கூழைக் கொடுத்தாலும், அது உண்பவர்க்கு அமிர்தமாம். அஃதன்றி, முகம் கடுத்து முக்கனியுடன் அறுசுவை உண்டி இடுவாராயின், அவை உண்பவரின் பசியைத் தணிக்காது, அதிகப் பசியை உண்டுபண்ணும் .

0 Comments: