Monday, December 31, 2007

5.கதிர்பெறு செந்நெல்வாடக்

விவேக சிந்தாமணி
**********************

5.கதிர்பெறு செந்நெல்வாடக் கார்குலங் கண்டுசென்று
கொதிநிறைக் கடலிற்பெய்யுங் கொள்கைபோற் குவலயத்தே
மதிதனம் படைத்தபேர்கள் வாடினோர் முகத்தைப்பாரார்
நிதிமிகப் படைத்தோர்க் கீவார் நிலையிலார்க் கீயமாட்டார்.

மேகக்கூட்டம் சிவந்த நெற்பயிர் நீரின்றி வாடக் கண்ட பின்னரும் அங்கு மழையாகப் பொழியாது பொங்கும் அலைகள் நிறைந்த கடலிற் பெய்யும் தன்மை போல் உலகில் நிறைய செல்வம் படைத்தோர் பொருள் உள்ளவருக்குக் கொடுப்பாரேயல்லாது பொருளின்றி வாடிய முகமுடைய ஏழையின் முகம் பாரார்; தரித்திரத்தால் நிலையின்றி அலைபவருக்குக் கொடுக்க மாட்டார்கள்.

0 Comments: