Monday, December 31, 2007

6.ஆலிலை பூவுங்காயு மனிதரு

விவேக சிந்தாமணி
**********************

6.ஆலிலை பூவுங்காயு மனிதரு பழமுமுண்டேல்
சாலவே பட்சியெல்லாந் தன்குடி யென்றேவாழும்
வாலிபர் வந்துதேடி வந்திருப்பார் கோடாகோடி
ஆலிலை யாதிபோனா லங்குவந் திருப்பாருண்டோ.

ஆலமரத்தில் இலை, காய், கனி பூத்துக் குலுங்கும்போது அதனிடம் பறவைகள் தன்வீடு என வந்து தங்கும்.மனிதர்(வாலிபர்)கள் மரத்தடியில் இளைப்பாருவார்கள். இவையெல்லாம் உதிர்ந்துவிட பறவைகள் தங்காது; மனிதர்களும் தங்கமாட்டார்கள். இதுபோல் செல்வம் வந்து இருக்கும்போது எல்லோரும் சுற்றி இருப்பர். செல்வம் போயின் ஒருவராகிலும் அணுகமாட்டார்கள்.

0 Comments: