விவேக சிந்தாமணி
**********************
7.பொருட்பாலை விரும்புவார்கள் காமப்பா
லிடை மூழ்கிப் புறள்வர்கீர்த்தி
யருட்பாலர் மறப்பாலைக் கனவிலுமே
விரும்பார்க ளறிவொன்றில்லார்
குருப்பாலர்க் கடவுளர்பால் வேதியர்பால்
புரவலர்பால் கொடுக்கக் கோரார்
செருப்பாலே யடிப்பவர்க்கு விருப்பாலே
கோடி செம்பொன் சேவித்தீவார்.
செல்வத்திற்கு முக்கியங்கொடுத்து அதைச் சேர்ப்பவர்கள் காமத்தில் மூழ்கிப் புரளுவர்; அருட்செல்வத்தைத் தரும் தருமத்தைக் கனவிலும் விரும்பார்.கொஞ்சமும் அறிவிலாது ஆசிரியரிடமும், கடவுளிடத்தும், வேத ஓதுபவர்களிடத்தும், அரசரிடத்தும் கொடுக்க மாட்டார்கள். தன்னைச் செருப்பாலடிப்பவனுக்கோ கோடி செப்புக் காசுகளை வணங்கிக் கொடுப்பர்.
Monday, December 31, 2007
7.பொருட்பாலை விரும்புவார்கள்
Posted by ஞானவெட்டியான் at 6:36 AM
Labels: விவேக சிந்தாமணி
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment