Monday, December 31, 2007

8.தண்டா மறையினுடன் பிறந்து

விவேக சிந்தாமணி
**********************

8.தண்டா மறையினுடன் பிறந்துத் தண்டே னுகரா மண்டூகம்
வண்டோ கானகத் திடையிருந்து வந்தே கமல மதுவுண்ணும்
பண்டே பழகி யிருந்தாலு மறியார் புல்லோர் நல்லோரைக்
கண்டே களித்தங் குறவாடி தம்மிற் கலப்பர் கற்றாரே.

தவளைக்குத் தன்னுடன் பிறந்து வளர்ந்திருக்கும் குளிர்ந்த தாமரையின் தேனை உண்ணத் தெரியாது. ஆனால் காட்டிலிருந்து வண்டுகள் வந்து அத்தாமரையின் தேனையுண்ணும். அதுபோல் நெடுநாள் பழகியிருப்பினும் கற்றோரின் அருமை அறிவில்லாருக்குத் தெரியாது. கற்றவருக்கு மட்டுமே தெரியும்.
"கற்றோரைக் கற்றோரே காமுறுவர்"

0 Comments: