Monday, December 31, 2007

9.வானர மழைதனி னனைய

விவேக சிந்தாமணி
**********************

9.வானர மழைதனி னனையத் தூக்கணந்
தானொரு நெறிசொலத் தாண்டிப் பிய்த்திடும்
ஞானமுங் கல்வியு நவின்ற நூல்களும்
ஈனருக் குரைத்திடி லிடற தாகுமே.

மழையில் நனைந்து வருந்திய ஒரு வானரத்திடம் தூக்கணாங்குருவி சென்று, "என்னைப்போல் முன்னமேயே ஒரு கூடு கட்டியிருந்தால் இப்பொழுது வருந்தவேண்டாமே" எனச் சொல்ல, வானரம் பாய்ந்து சென்று குருவியின் கூட்டைப் பிய்த்துச் சிதைத்துவிடுமாப்போல், ஞானத்தையும் கல்வியயும் அறிவிலா இழிதன்மையுடையோருக்கு உரைத்திட்டால் துன்பமே நேரும்.

0 Comments: