சத்தியம்
***********
உண்மைப் பொருள் சத்தியம் ஒன்றே. இதை நன்கு அறிந்துகொண்ட பின்னும் சந்தேகம் ஏன்? சத்தியம் எந்த தேசத்திலும் ஒன்றாகத்தான் இருந்தாக வேண்டும். நெருப்பு எல்லாத் தேசத்திலும் சுடத்தான் செய்யும். அது போல எல்லா இடத்திலும் சத்தியம் மாறுபடாத சுய ஒளி வெள்ளமாகத்தான் இருக்கும். மாறுபடுவது அனைத்தும் மனதின் சேட்டைகள் ஆகும்.மனமது செம்மையானால் சத்தியம் உன்னுள் பிரதிபலிக்கும். ஆன்ம ஒளியைக் காண இயலும்.
இறைவனுக்குப் பல பெயர்கள் இருப்பினும், மிகச் சிறந்ததும், அதிகச் சக்தி வாய்ந்ததுமான பெயர் சத்தியம் ஆகும். சத்தியம் ஞான மயமானது. எங்கும் நிறைந்தது. அதைப் பிரமம் என்று வேதங்கள் கூறுகின்றன. நீ அந்தக் கடலில் மூழ்கிவிட்டால் பந்தபாசமற்றவனாகத் திருபி வருவாய். சத்தியத்தை உனக்குள் தேடு. சத்தியத்தைத் தனக்குள் தேடுவதற்காகவே இறைவன் பகுத்தறிவைத்
தந்துள்ளான். உன் அறிவிற்கும் அறிவாக சத்தியம் இருக்கிறது. சத்தியத்தைச் சரணடைந்துவிடு.
Thursday, December 27, 2007
சத்தியம்
Posted by ஞானவெட்டியான் at 4:40 PM
Labels: ஞானமுத்துக்கள்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment